Author: Thana
இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது இங்கிலாந்து: கொழும்பு ஆர். பிரேமதாசா மைதானத்தில் இன்று நடைபெற்ற இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 357 ஓட்டங்களை குவித்தது. . ஜோ ரூட் மற்றும் ஹாரி புரூக் இணை நான்காவது விக்கெட்டுக்கு 191 ரன்கள் சேர்த்தனர் • இலங்கையின் போராட்டம்: 358 ஓட்டங்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணி 46.4 ஓவர்களில் 304 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இலங்கை அணியின் சார்பில் இளம் வீரர் பவன் ரத்நாயக்க அபாரமாக விளையாடி 121 ஓட்டங்களை (115 பந்துகள்) குவித்தார். இது அவரது நான்காவது ஒருநாள் போட்டி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. • தொடர்…
‘கட்டியெழுப்புவோம் ஒன்றிணைந்த உறுதியுடன்’ தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் மாத்தளை மாவட்ட விகாரைகளின் புனரமைப்புப் பணிகள் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்
‘கட்டியெழுப்புவோம் ஒன்றிணைந்த உறுதியுடன்’ தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் மாத்தளை மாவட்ட விகாரைகளின் புனரமைப்புப் பணிகள் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம் இழந்து வரும் தார்மீகப் பண்புகளை மீட்டெடுக்க அனைத்துத் துறைகளிலும் புதிய மறுமலர்ச்சி அவசியம் – ஜனாதிபதி மக்களின் நலன்களில் கவனம் செலுத்துவதே அரசாங்கத்தின் பொறுப்பு என்றும், நாடு என்ற வகையில் அடையப்படும் அனைத்து பொருளாதார நன்மைகளும் மக்களுக்கும் சமூகத்திற்கும் செல்வதை உறுதி செய்வதற்காகவே அரசாங்கம் இந்தப் பணியைத் தொடங்கியுள்ளது என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். டித்வா சூறாவளியால் சேதமடைந்த மதத் தலங்களை புனரமைப்பதற்கான ‘கட்டியெழுப்புவோம் ஒன்றிணைந்த உறுதியுடன்’ தேசிய வேலைத்திட்டத்தின் மாத்தளை மாவட்ட ஆரம்ப நிகழ்வு, இன்று (27) பிற்பகல் மாத்தளை, கவடயாமுன புராண ரஜமஹா விஹாரையில் நடைபெற்றபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். பொருளாதாரம், சமூகம் மற்றும் கலாசார ரீதியாகவும் வளர்ச்சியடைந்த ஒரு நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் என்றும், சமூகத்தில் இழந்து வரும் அனைத்து தார்மீகப் பண்புகளையும் மீண்டும்…
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் மலையக மக்கள் தொடர்பில் எரிக் சொல்ஹெய்முடன் முக்கிய விடயங்களை முன்வைத்த கலாநிதி ரா.ரமேஷ்
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் மலையக மக்கள் தொடர்பில் எரிக் சொல்ஹெய்முடன் முக்கிய விடயங்களை முன்வைத்த கலாநிதி ரா.ரமேஷ் கொழும்பு: இலங்கையின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் (Erik Solheim) மற்றும் பேராதனிய பல்கலை கழக அரசறிவியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ரா .ரமேஷ்க்கும் இடையிலான முக்கிய சந்திப்பு ஒன்று இன்று கொழும்பில் நடைபெற்றது. இச்சந்திப்பின் போது இலங்கையின் தற்போதைய அரசியல் மாற்றங்கள் மற்றும் போருக்குப் பின்னரான மீள்கட்டுமானப் பணிகள் குறித்து விரிவான ஆலோசனைகள் முன்னெடுக்கப்பட்டன. தற்போது தென்கிழக்காசிய நாடுகளில் காலநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமடைதல் தொடர்பான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ள சொல்ஹெய்மிடம், இலங்கையின் காலநிலை சவால்களை எதிர்கொள்வதற்கான ஆலோசனைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டபோது, அதற்குப் பதிலளித்த அவர், இயற்கை அனர்த்தங்கள் மற்றும் காலநிலை மாற்றங்களை எதிர்கொள்வதற்கு இலங்கை தனது தயார்நிலை பொறிமுறைகள் (Preparedness mechanisms), கொள்கைகள் மற்றும் நிறுவன ரீதியான திறன்களை (Institutional capacity) கணிசமான அளவு பலப்படுத்த…
“Rebuilding Sri Lanka”: அனர்த்த மறுசீரமைப்பு பணிகளை நேரடியாகக் கண்காணிக்கும் ஜனாதிபதி செயலணி கம்பளை மற்றும் கண்டி பகுதிக்கு விஜயம்
“Rebuilding Sri Lanka”: அனர்த்த மறுசீரமைப்பு பணிகளை நேரடியாகக் கண்காணிக்கும் ஜனாதிபதி செயலணி! கொழும்பு: “திட்வா” புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் மறுவாழ்வு மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் முன்னேற்றத்தைக் கண்காணிப்பதற்கான விசேட கள விஜயமொன்றை “Rebuilding Sri Lanka” தேசிய வேலைத்திட்டத்தின் ஜனாதிபதி செயலணி ஆரம்பித்துள்ளது. நேற்று (26) கண்டி மற்றும் கம்பளை பகுதிகளில் இந்த முதற்கட்ட கண்காணிப்பு பயணம் மேற்கொள்ளப்பட்டது. மீள்குடியேற்றம் மற்றும் நில ஒதுக்கீடு குறித்து அவதானம் கண்டி மாவட்டத்தின் மேல் கலஹா மற்றும் கெலிஓயா ஆகிய பகுதிகளில் அனர்த்தத்தினால் வீடுகளை இழந்த மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது. குறிப்பாக: பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிலங்களை ஒதுக்குதல்,அனர்த்த நிவாரணங்களை முறையான வகையில் வழங்குதல்,தோட்டப்புற மக்களின் குடியிருப்புகள் மற்றும் பொதுமக்களின் வாழ்விடங்களை நேரடியாகப் பார்வையிடல்,மக்களின் குறைகளைக் கேட்டறிந்த செயலணி அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிவாரணங்கள் உரிய முறையில் மக்களைச் சென்றடைகின்றனவா என்பது குறித்து செயலணியின் பிரதிநிதிகள்…
பதுளை பிரிவின் குற்றப் புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றி வந்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர் போதைப்பொருளுடன் கைது
பதுளை பிரிவின் குற்றப் புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றி வந்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் பதுளை நகரில் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பகஸ்தோவ பொலிஸாரால் திங்கட்கிழமை (26) அன்று பிற்பகல் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, குறித்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யும் வேளையில் சந்தேகநபரிடமிருந்து 4.2 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாகவும், குறித்த போதைப்பொருள் விநியோகிக்கும் நோக்கத்திற்காக வைத்திருந்தாரா என்பதைக் கண்டறிய மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட பெண் பொலிஸ் உத்தியோகத்தரை பதுளை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பெண் கான்ஸ்டபிளுடன் பெண்ணொருவரும் ஆண்ணொருவரும் ஹெரோயின் கடத்தல் மற்றும் வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நபர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் விநியோகம்-பொலிஸார் கடும் எச்சரிக்கை
பாடசாலை மாணவர்களிடையே பரவும் ‘ஐஸ் பழம், மாவா’: பொலிஸார் கடும் எச்சரிக்கை! பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் விநியோகம் தொடர்பில் பொலிஸார் மிகுந்த அவதானம் செலுத்தி வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்தார். இன்று (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், மாணவர்களுக்கு போதைப்பொருட்களை விநியோகிக்கும் புதிய மற்றும் ஆபத்தான முறைகள் குறித்து விளக்கமளித்தார். மிட்டாய் மற்றும் பிஸ்கட் வடிவில் போதைப்பொருள் பாடசாலைகளை அண்மித்த பகுதிகளில் மாணவர்களுக்கு நெருக்கமான உணவுப் பொருட்களின் ஊடாக போதைப்பொருள் கடத்தப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார். குறிப்பாக: ஐஸ் பழம், பொம்பாய் மிட்டாய்,டொபி, பிஸ்கட் மற்றும் சாரவிட,மாவா (Mawa) மற்றும் பாபுல் (Babul) போன்றவற்றுக்குள் போதைப்பொருட்களை மறைத்து வைத்து விற்பனை செய்யும் நடவடிக்கைகள் கண்டறியப்பட்டுள்ளன. இவ்வாறான வியாபாரிகளுக்கு எதிராக எவ்வித தாரணமும் இன்றி கடுமையான சட்டம் அமுல்படுத்தப்படும் என அவர் எச்சரித்தார் 11 சந்தேகநபர்கள்…
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களின் கீழ் தகுதி பெற்றுள்ள பயனாளிகளுக்கான ஜனவரி மாதக் கொடுப்பனவுகளும், இரு கட்டங்களுக்குமான ஜனவரி மாத முதியோர் கொடுப்பனவுகளும் நாளை (28) அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, அஸ்வெசும முதலாம் கட்டத்தின் கீழ் 1,415,584 பயனாளி குடும்பங்களுக்கு 11,234,713,750.00 ரூபா நிதி விநியோகிக்கப்பட்டு அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளது. அத்துடன், அஸ்வெசும முதலாம் கட்டத்தின் கீழான ஜனவரி மாத முதியோர் கொடுப்பனவாக 618,440 பயனாளிகளுக்கு 3,092,200,000.00 ரூபா நிதி விநியோகிக்கப்படவுள்ளது. அதேபோல், அஸ்வெசும இரண்டாம் கட்டத்தின் ஜனவரி மாதக் கொடுப்பனவாக 248,454 பயனாளி குடும்பங்களுக்கு 2,235,137,500.00 ரூபா நிதி விநியோகிக்கப்பட்டு அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளது. மேலும், அஸ்வெசும இரண்டாம் கட்டத்தின் கீழான ஜனவரி மாத முதியோர் கொடுப்பனவாக 68,183 பயனாளிகளுக்கு 340,915,000.00 ரூபா நிதி…
இலங்கையின் சில பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை கொழும்பு: இலங்கையின் வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இன்று (27) அதிகாலை 05.30 மணிக்கு வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின் படி, நாட்டின் வானிலை நிலவரங்கள் பின்வருமாறு அமையும்: மழை நிலவரம் வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்கள்: ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ மாகாணம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்கள்: பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். காற்று மற்றும் கடல் சீற்றம் மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகள், வடக்கு, வடமத்திய, வடமேல், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.…
கைத்தொலைபேசி அடிமைப்பாட்டால் சிறுவர்களுக்கு மனநல பாதிப்பு: விசேட வைத்திய நிபுணர் எச்சரிக்கை கொழும்பு: கைத்தொலைபேசி மற்றும் இணையப் பயன்பாட்டிற்கு அடிமையாகியுள்ளதன் காரணமாக, இலங்கையில் பல பதின்ம வயது சிறுவர்கள் கடுமையான மனநலப் பாதிப்புகளுக்கு உள்ளாகி வருவதாக தேசிய மனநல நிறுவனத்தின் (NIMH) சிறுவர் மற்றும் இளம்பருவம் தொடர்பான மனநல விசேட வைத்திய நிபுணர் சேனானி விஜேதுங்க தெரிவித்துள்ளார். நேற்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் உரையாற்றிய போதே அவர் இந்த அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளியிட்டார். கொவிட் காலமும் இணையப் பழக்கமும் இது குறித்து அவர் மேலும் விளக்குகையில், “கொவிட் பெருந்தொற்று காலத்தில் சமூக இடைவெளி காரணமாக பாடசாலைக் கல்வி நடவடிக்கைகள் இணையவழியில் (Online) முன்னெடுக்கப்பட்டன. இதன் விளைவாக, சிறுவர்கள் தங்களையும் அறியாமலேயே கைத்தொலைபேசிகளை அதிக நேரம் பயன்படுத்துவதற்குப் பழகிக்கொண்டனர். தற்போது இது ஒரு பாரிய சமூகப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது” என்றார். மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சிறுவர்கள் இந்தத் தீவிர அடிமைத்தனம் காரணமாக, பல…
ஹட்டன் பொலிஸாரின் மனிதாபிமானச் செயல்: யாசகர்களுக்கு முடிவெட்டி, நீராட்டி உணவு வழங்கி கௌரவம்!
ஹட்டன் பொலிஸாரின் மனிதாபிமானச் செயல்: யாசகர்களுக்கு முடிவெட்டி, நீராட்டி உணவு வழங்கி கௌரவம்! ஹட்டன்: ஹட்டன் நகரில் சுற்றித்திரிந்த யாசகர்களை பொலிஸார் அழைத்துச் சென்று, அவர்களுக்குத் தேவையான சுகாதாரப் பணிகளை மேற்கொண்டு உணவளித்த நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஹட்டன் – டிக்கோயா லெதண்டி சமூக பொலிஸ் பிரிவுடன் இணைந்த ‘ஏழைகளின் நண்பர்கள்’ அமைப்பின் இளைஞர் குழுவுடன் இணைந்து ஹட்டன் சமூக பொலிஸ் பிரிவு இந்த முன்மாதிரியான திட்டத்தை முன்னெடுத்தது. மனிதாபிமான உதவிகள் நகரப்பகுதிகளில் நீண்டகாலமாகப் பராமரிப்பின்றி சுற்றித்திரிந்த யாசகர்களை பொலிஸார் கௌரவமாக அழைத்துச் சென்றனர். அவர்களுக்கு: தலைமுடி மற்றும் தாடிகள் சீரமைக்கப்பட்டன. வெந்நீரில் குளிப்பாட்டப்பட்டு சுகாதாரமான நிலைக்கு மாற்றப்பட்டனர். புதிய ஆடைகள் வழங்கப்பட்டன. மதிய உணவும் பொலிஸாரால் அன்புடன் வழங்கப்பட்டது. பின்னணி மற்றும் வழிகாட்டல் ஹட்டன் பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் வீரசேகரவின் நேரடி அறிவுறுத்தலின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஹட்டன் தலைமையக பொலிஸ் பரிசோதகர் டபிள்யூ.ஆர்.ஏ.டி. சுகததாச…