Author: Thana

வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், மாத்தறை, அம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30-40 கி.மீ வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும். மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான…

Read More

பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகமும் பணிக்குழாம் பிரதானியுமான சமிந்த குலரத்ன பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். நேற்று (23) முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த பணி இடைநிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவரது நியமனம் தொடர்பில் எழுந்துள்ள சிக்கல் நிலை காரணமாகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Read More

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் வழங்கும் 50,000 ரூபா கொடுப்பனவு 70% வழங்கப்பட்டுள்ளது  25,000 ரூபா கொடுப்பனவு 97% நிறைவு  பாடசாலை மாணவர்களுக்கான உதவித்தொகை வழங்குதல் 73% ஆகும்  சிறிய மற்றும் மத்தியதர தொழில்முயற்சியாளர்களை மீட்டெடுக்க தலா 02 இலட்சம் ரூபா உதவித்தொகை டித்வா சூறாவளியின் பின்னர் பாதிக்கப்பட்ட குடும்பங்களை மீள்குடியேற்றவும், இயல்பு வாழ்க்கையை மீட்டெடுக்கவும் அரசாங்கம் வழங்கும் இழப்பீட்டுத் தொகையை முறையான முகாமைத்துவத்துடன் அந்த மக்களுக்கு வழங்கும் பணிகள் தற்போது வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, டித்வா சூறாவளியின் பின்னர் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் மீள்குடியேற்றத்திற்காக சமையலறை உபகரணங்கள் கொள்வனவிற்கு அரசாங்கம் வழங்கும் 50,000 ரூபா கொடுப்பனவில் தற்போது 70% வழங்கப்பட்டு நிறைவுசெய்யப்பட்டுள்ளது. 25 மாவட்டங்களில் மொத்தம் 156,805 குடும்பங்கள் இந்தக் கொடுப்பனவுக்காகக் கணக்கிடப்பட்டதுடன், அவற்றில் 109,512 குடும்பங்களுக்கு இதுவரை குறித்த தொகை வழங்கப்பட்டுள்ளது. நுவரெலியாவில் 1,191 குடும்பங்கள் இந்த உதவித்தொகையைப் பெற தகுதி பெற்றிருந்ததுடன், அந்த…

Read More

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு இன்றைய தினமும் (24) தொடர்வதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது. தமது பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் இதுவரையில் சாதகமான பதில்களை வழங்கவில்லை என அச்சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார். 48 மணித்தியாலங்களின் பின்னரும் பணிப்பகிஷ்கரிப்பை மேலும் நீடிப்பதா என்பது குறித்து எதிர்வரும் திங்கட்கிழமை தீர்மானிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நோயாளர்கள் கருத்துத் தெரிவிக்கையில், தாம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உதவியற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதேவேளை, மாளிகாவத்தை சிறுநீரக வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளரின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்வரும் 28ஆம் திகதி மீண்டும் ஒரு போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் சாணக்க தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.

Read More

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடமத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Read More

ஹல்தமுல்ல, கிரவணாகம பகுதியில் இன்று (23) மாலை இடம்பெற்ற பாரிய வீதி விபத்தில் ஆறு பயணிகள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தனியார் பேருந்து ஒன்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு (இ.போ.ச) உரித்தான பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு ஹல்துமுல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டதை அடுத்து, மேலதிக சிகிச்சைக்காக அவர்கள் தியத்தலாவ வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். “இரண்டு பேருந்துகளும் அதிவேகமாக வந்த நிலையில் கட்டுப்பாட்டை இழந்து மோதியிருக்கலாம் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவருகிறது. மோதிய வேகத்தில் இரண்டு வாகனங்களின் முன்பகுதிகளும் மிக மோசமான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன.” விபத்து நடந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹல்தமுல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். GeminiAI

Read More

கிணிகத்தேன: சிறுவர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் நோக்கில் கிணிகத்தேன, இலக்கம் மூன்று கெனில்வோர்த் தோட்டத்தில் கடந்த 18-01-2026 அன்று 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கான பிரம்மாண்ட மென்பந்து (Softball) கிரிக்கெட் சுற்றுப்போட்டி நடைபெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் மூன்று பலப்பரீட்சை அணிகள் மோதிக்கொண்டன. பங்குபற்றிய அணிகள்: இராவண தேசத்து வீரர்கள் பிளாக் ஈகிள் (Black Eagle) அடேங்கப்பா எட்டு பேர் சுற்றுப்போட்டி விபரம் ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய ‘இராவண தேசத்து வீரர்கள்’ அணி, இறுதிப் போட்டியில் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி கிண்ணத்தைத் தன்வசப்படுத்தியது. வெற்றி பெற்ற அணிக்கும், போட்டியில் பங்கேற்ற ஏனைய இரண்டு அணிகளுக்கும் பதக்கங்களும் கேடயங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. சிறுவர்களின் முயற்சியைப் பாராட்டும் விதமாக அனைத்து வீரர்களுக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. விருதுகளை அள்ளிய நட்சத்திரங்கள் இப்போட்டித் தொடரில் தனித்துவமான திறமைகளை வெளிப்படுத்திய வீரர்களுக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன: ஆட்ட நாயகன் (Man of the Match):…

Read More

இன்று (23) அதிகாலை வேளையில் நாட்டின் குறைந்தபட்ச வெப்பநிலையாக 5.0 பாகை செல்சியஸ் நுவரெலியா வானிலை அவதானிப்பு நிலையத்தில் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேபோல், இன்று அதிகாலை பண்டாரவளை பகுதியில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 12.5 பாகை செல்சியஸும், பதுளை பகுதியில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 14.8 பாகை செல்சியஸும் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மஹாஇலுப்பள்ளம பகுதியில் இன்று அதிகாலை பதிவான குறைந்தபட்ச வெப்பநிலை 19.3 பாகை செல்சியஸ் ஆகும். வளிமண்டலவியல் திணைக்களத்தின் பிரதேச தரவு சேகரிப்பு மையங்களிலிருந்து பெறப்பட்ட குறைந்தபட்ச வெப்பநிலை பெறுமானங்கள், வரைபடம் ஒன்றின் ஊடாகக் பின்வருமாறு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

Read More

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இரண்டு மகன்கள் உட்பட 5 சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஜனவரி 30 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் வத்தளை நீதவான் நீதிமன்றில் இன்று (23) முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபரான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில், சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறி ஒன்றை முறைக்கேடாக பயன்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

இன்று மாலையிலிருந்து வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள் உறைபனி உருவாகக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Read More