Author: Thana
இன்று (22) பதிவான குறைந்தபட்ச வெப்பநிலை நுவரெலியாவில் பதிவாகியுள்ளதுடன், அது 3.5 பாகை செல்சியஸாக காணப்பட்டதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இன்அண்மைக்காலத்தில் பதிவான மிகக் குறைந்த வெப்பநிலை இதுவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய ஏனைய பிரதேசங்களில் பதிவான வெப்பநிலை விபரம் வருமாறு: பண்டாரவளை: 11.5 பாகை செல்சியஸ் பதுளை: 15.1 பாகை செல்சியஸ் கட்டுகஸ்தோட்டை: 15.9 பாகை செல்சியஸ் இதேவேளை, அதிகபட்ச வெப்பநிலையாக முல்லைத்தீவில் 25.3 பாகை செல்சியஸ் பதிவாகியுள்ளது. அம்பாந்தோட்டையில் 22 பாகை செல்சியஸாகவும், கொழும்பில் 22.1 பாகை செல்சியஸாகவும் வெப்பநிலை பதிவாகியிருந்தது.
‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு CORZENT EDGE (PVT) LTD இனால் 25 இலட்சம் ரூபா நன்கொடை வழங்கப்பட்டது. இதற்கான காசோலையை, CORZENT EDGE (PVT) LTD இன் பிரதம நிறைவேற்று அதிகாரி சமீர குணசிங்க மற்றும் Cato Eliassen (Managing Director, Contracting Works) ஆகியோர் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் அண்மையில் கையளித்தனர். ஜனாதிபதி ஊடகப் பிரிவு 2026-01-22
2026 FIFA உலகக் கிண்ண கால்பந்து திருவிழாவை உலகெங்கிலும் உள்ள ரசிகர்களிடம் புதிய பரிமாணத்தில் கொண்டு செல்லும் நோக்கில், TikTok நிறுவனத்துடன் FIFA வரலாற்றுச் சிறப்புமிக்க உலகளாவிய ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம், FIFA உலகக் கிண்ண வரலாற்றிலேயே முதல்முறையாக அதன் ‘முன்னுரிமை பெற்ற தளம்’ (Preferred Platform) என்ற அந்தஸ்தை TikTok பெறுகிறது. இதன் விளைவாக, உலகக் கிண்ணப் போட்டிகள் தொடர்பான விரிவான அதிகாரப்பூர்வத் தகவல்கள், மைதானத்திற்குப் பின்னால் நடக்கும் சுவாரஸ்யமான பிரத்யேகக் காட்சிகள் மற்றும் ரசிகர்கள் நேரடியாகப் பங்கேற்கும் வகையிலான நவீன அனுபவங்கள் ஆகியவற்றை TikTok தளம் வழங்கவுள்ளது. 2026-ஆம் ஆண்டு இறுதி வரை நீடிக்கவுள்ள இந்த ஒப்பந்தமானது, கால்பந்தின் மாபெரும் திருவிழாவை ரசிகர்கள் டிஜிட்டல் தளங்களில் அனுபவிக்கும் முறையில் ஒரு புதிய பரிணாமத்தை ஏற்படுத்தவுள்ளது. நேரடி போட்டி ஒளிபரப்புகளையும் கடந்து, உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் மற்றும் உள்ளடக்கப் படைப்பாளர்களை (Creators) கால்பந்து உலகக் கிண்ணத்துடன் ஒன்றிணைக்கும் பாலமாக…
மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசமொன்றில் 14 வயது சிறுவனிடம் பாலியல் சேஷ்டை செய்ய முயற்சித்த சம்பவம் தொடர்பாக சிறுவனின் மாமனார் (20) கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுவன் தாய் தந்தை பிரிந்து வாழ்ந்து வருவதுடன் தந்தையார் வெளிநாட்டில் பணிபுரிந்து வருவதாகவும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் குறித்த சிறுவன் உட்பட அவரது சகோதரர்கள் மாமா வீட்டிற்கு சென்று தந்தையாருடன் தொலைபேசியில் பேசி வருவதாக தெரியவந்துள்ளது. மேலும் அவர்களுக்கு மாதாந்தம் 30 ஆயிரம் ரூபாய் பணத்தை மாமனார் ஊடாக தந்தை அனுப்பி வந்துள்ளார். இந்நிலையில் சிறுவன் கடந்த டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி மாமனார் வீட்டிற்கு சென்றிருந்த சந்தர்ப்பத்தில் மாமனார் சிறுவனின் அந்தரங்க உறுப்பை தொட்டு பாலியல் சேஷ்டை செய்ய முயற்சித்துள்ளார். பின்னர் மீண்டும் கடந்த 27 ஆம் திகதி மாமனார் வீட்டுக்கு சென்ற சிறுவனிடம் பாலியல் சேஷ்டை செய்ய முயற்சித்துள்ளார். இது தொடர்பாக குறித்த சிறுவன் தனது தாயாரிடம் தெரிவித்ததையடுத்து அவர்கள்…
மஸ்கெலியா ப்ரௌன்லோ தோட்ட பு ப்ரௌன்லோ பிரிவில் குளவி கொட்டு ஐந்து தொழிலாளர்கள் வைத்தியசாலையில்
குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் ஐந்து ஆண் தொழிலாளர்கள் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.குறித்த சம்பவம் நேற்று (21) மதியம் 1 மணிக்கு இடம் பெற்றுள்ளது மஸ்கெலியா ப்ரௌன்லோ தோட்ட பு ப்ரௌன்லோ பிரிவில் பணி புரிந்து கொண்டு இருந்த வேளையில் குளவி கூடு கலைந்து கொட்டியதில் ஆண் தொழிலாளர்கள் ஐவர் மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்கானவர்கள் எம்.சிசி குமார் (வயது 31) வீ.நந்தராஜ் (வயது 36), ஜி.முருகையா (வயது 56) ஆர்.ரவி (வயது 50) ஏ.கோகிலன் (வயது 55) ஆகியவர்கள் தோட்ட நிர்வாகி தோட்ட வைத்தியர் மூலம் முச்சக்கர வண்டியில் வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல பட்டனர்.
“புத்த பெருமானின் புனித சின்னங்கள் தரிசனம்” பெப்ரவரி 04 ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை ஹுனுப்பிட்டி கங்காராம விகாரையில்
“புத்த பெருமானின் புனித சின்னங்கள் தரிசனம்” பெப்ரவரி 04 ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை ஹுனுப்பிட்டி கங்காராம விகாரையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தலையீட்டின் கீழ் இந்திய அரசாங்கத்தின் முழு அனுசரணையுடன் இலங்கைக்குக் கொண்டுவரப்படவுள்ள “ புத்த பெருமானின் புனித சின்னங்கள்” தரிசனம் பெப்ரவரி 04 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை ஏழு நாட்கள் கொழும்பு, ஹுனுப்பிட்டி கங்காராம விகாரையில் நடைபெறும். அதன், ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் இன்று (21) முற்பகல் ஜனாதிபதி அலுலகத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த இடமான குஜராத்தில் 1960களில் அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட புத்த பெருமானின் உடல் சார்ந்த புனித சின்னங்கள் இதுவரை இந்தியாவுக்கு வெளியே கொண்டு செல்லப்படவில்லை என்பதுடன்,…
மத்திய மலைநாட்டைப் பாதுகாத்து மீண்டும் கட்டியெழுப்ப அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்த புதிய கட்டமைப்பு-ஜனாதிபதி
மத்திய மலைநாட்டைப் பாதுகாத்து மீண்டும் கட்டியெழுப்ப அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்த புதிய கட்டமைப்பு நிறுவப்படும் – ஜனாதிபதி நிர்மாணம் மற்றும் நிலப் பயன்பாடு, விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு போன்றவற்றுடன் தொடர்புடைய நிறுவனங்களின் ஒருங்கிணைப்பற்ற தனித்தனியான செயல்பாடு, டித்வா சூறாவளியால் அழிவடைந்த மத்திய மலைநாட்டை மீட்டெடுப்பதில் தடையாக உள்ளதாகவும், மத்திய மலைநாட்டை விரைவாகப் பாதுகாத்து மீண்டும் கட்டியெழுப்புவதற்கு தொடர்புடைய அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைக்கும் புதிய கட்டமைப்பை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். மத்திய மலைநாட்டைப் பாதுகாப்பதுடன், காடுகளை மீண்டும் வளர்க்கும் திட்டம் குறித்து ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB), ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தித் திட்டம் (UNDP) மற்றும் குறித்த அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் இன்று (21) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார். டித்வா சூறாவளி காரணமாக…
நாளை (23) முதல், தற்போது நிலவும் வறட்சியான வானிலையில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வறட்சியான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள் உறைபனி உருவாகக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சபரகமுவ, மத்திய, வடமேல், வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை, அம்பாறை மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம் என அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
நானுஓயாவில் மாணவர்களுக்கு ஆபாச காணொளி காண்பித்தவர் கைது. பாடசாலை மாணவர்களுக்கு பல சந்தர்ப்பங்களில் ஆபாச காணொளிகளை காண்பித்த குற்றச்சாட்டில் கடந்த (20) சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக நானுஓயா காவல்துறையின் பொறுப்பதிகாரி தலைமை பரிசோதகர் ஜனக பண்டார தெரிவித்தார். பாடசாலை செல்லும் 11-14 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு சந்தேக நபர் ஆபாச காணொளிகளை காண்பித்ததாக நானுஓயா பகுதியில் உள்ள பல பாடசாலையில் மாணவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக காவல் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார். மாணவிகளான சிறுமிகளிடம் இருந்து வாக்கு மூலத்தை பதிவு செய்ததுடன் நானுஓயா பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான சந்தேக நபரை (21) இன்று நுவரெலியா மாவட்ட நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக காவல் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார் நானுஓயா காவல்துறை மகளிர் பணியகத்தின் பொறுப்பதிகாரி பி.எஸ். சஞ்சீவனி (2435) மற்றும் அவரது காவல்துறை அதிகாரிகள், நானுஓயா பகுதி மக்கள்,…
நிட்டம்புவ பிரதேசத்தில் 60 கிலோ கிராமிற்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கோணஹேன பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலொன்றிற்கு அமைய, நிட்டம்புவ – அரலிய ஒழுங்கை, பின்னகொல்லவத்தை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்தப் போதைப்பொருள் தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. இதன்போது, 61 கிலோ 838 கிராம் ஐஸ் போதைப்பொருளை முச்சக்கர வண்டி ஒன்றில் கடத்திச் சென்றுகொண்டிருந்த போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன் பெறுமதி 90 கோடி ரூபாவிற்கும் அதிகம் என பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர். இந்தச் சந்தேக நபர், தற்போது வெளிநாட்டில் உள்ள திட்டமிடப்பட்ட குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களான ‘டுபாய் வருண’, ‘மொஹமட் சித்திக்’ மற்றும் தற்போது சிறையிலுள்ள திலிந்து சஞ்சீவ அல்லது “லேனா” ஆகியோரின் நெருங்கிய சகா என்பது தெரியவந்துள்ளது.