Author: Thana
செ.திவாகரன். மண்ணில் புதைந்த வாகனங்கள் – ரேந்தபொல பகுதியில் சம்பவம். மண் சரிவால் கடும் பாதிப்பை சந்தித்த கிராமத்தின் தற்போதைய நிலை என்ன? நாட்டில் ஏற்பட்ட மோசமான காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டமும் அதிகம் பாதிக்கப்பட்டது இதில் வெலிமடை – நுவரெலியா பிரதான வீதியில் ரேந்தபொல பகுதியில் மண்சரிவு ஏற்பட்ட இடங்களில் மொத்தமாக நான்கு வாகனங்கள் புதைந்தன அவற்றில் சில வாகனங்களை இன்றுவரை மீட்டெடுக்க முடியாத நிலை காணப்படுகின்றன. இதே மண்சரிவில் புதையுண்டு எட்டு பேர் உயிரிழந்தனர் இவர்களின் உடல்களை நீண்ட போராட்டத்திற்கு மத்தியில் சில நாட்களுக்குப் பிறகே மீட்கப்பட்டன காரணம் மீட்பு பணியின் போது இடையூறு ஏற்படும் வகையில், அடிக்கடி மழையும் பெய்து வந்ததும் குறிப்பிடத்தக்கது . குறித்த பகுதியில் பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகையில் – நவம்பர் 27ஆம் திகதியன்றும் காலையிலிருந்து வழக்கமான மழைதான் பெய்துகொண்டிருந்தது. பிற்பகலுக்கு மேல் மழையின் தீவிரம் அதிகமானது மாலையில் திடீரென சேறும் சகதியும் கலந்த…
நாட்டில் தற்போது நிலவும் வரட்சியான வானிலை ஜனவரி 23ஆம் திகதியிலிருந்து மாற்றம் அடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக வரட்சியான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள் உறைபனி உருவாகக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்தியப் பல்கலைக்கழகங்கள் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட பட்டங்களை, குறைந்த செலவிலேயே வழங்குகின்றன – ஆளுநர்
இந்தியப் பல்கலைக்கழகங்கள் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட பட்டங்களை, பெரும்பாலான மேற்குலக நாடுகளிலுள்ள பல்கலைக்கழகங்களின் செலவில் நான்கில் ஒரு பங்கு செலவிலேயே வழங்குகின்றன. இது உயர்தரக் கல்வியை எமது சமூகம் இலகுவாகப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக மாற்றுகின்றது. இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் சுட்டிக்காட்டினார். யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் அனுசரணையில், சிகரம் அக்கடமி மற்றும் சேப் (SAPE) நிறுவனம் இணைந்து நடாத்திய ‘இந்தியாவில் கல்வி’ (Study in India) கல்வி வழிகாட்டல் கண்காட்சி யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் இன்று திங்கட் கிழமை காலை (19.01.2026) நடைபெற்றது. இந்த நிகழ்வில் விருந்தினராகக் கலந்து கொண்ட ஆளுநர் கண்காட்சியைப் பார்வையிட்ட பின்னர் தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது, இந்த நிகழ்வானது ஒரு சாதாரணக் கண்காட்சி மட்டுமல்ல. இது எமது இளைஞர்கள் உலகத்தரம் வாய்ந்த கல்வியைப் பெற்றுக்கொள்வதற்கான ஒரு நுழைவாயில். அத்தோடு, இது வலுவடைந்து வரும் ‘இந்தியா – இலங்கை அறிவுசார் பங்காண்மையின்’ ஒரு…
ஜனவரி மாதம் 01 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் விதத்தில் தனியார் துறையின் சம்பளம் அதிகரிக்கும்
2025 ஆம் ஆண்டு 11 ஆம் இலக்க ஊழியர்களின் குறைந்த பட்ச தேசிய சம்பள திருத்தச் சட்டத்தின் விதிமுறைகளுக்கு அமைவாக 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 01 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தனியார் துறையின் தேசிய குறைந்த சம்பளம், 27,000 ரூபாவில் இருந்து 30,000 ரூபாய் வரை அதிகரிப்பதுடன் நாளாந்த சம்பளம் 1,080 ரூபாய் முதல் 1,200 ரூபாய் வரை அதிகரிப்பு என தொழில் ஆணையாளர் நாயகம் எச்.எம்.டி. என். கே. வடலியத்த தெரிவித்துள்ளார்.
(க.கிஷாந்தன்) கினிகத்தேன பகுதியில் அமைந்துள்ள பிரதான பாடசாலையொன்றில் 11ஆம் வகுப்பில் கல்வி பயிலும் பாடசாலை மாணவி ஒருவரை பல தடவைகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவி, கினிகத்தேன – பகுதியைச் சேர்ந்த இளைஞரொருவருடன் காதல் தொடர்பில் இருந்ததாகவும், அவரை சந்திக்கச் சென்ற சந்தர்ப்பங்களில் அவர் தனது நண்பரின் வீட்டிற்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு காதலனும் அவரது நண்பனும் இணைந்து தன்னை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகவும் பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் வழங்கியுள்ளார். இந்த மாணவி தனது பாட்டியின் பாதுகாப்பில் வசித்து வருவதாகவும், கடந்த 17ஆம் திகதி காலை வீட்டைவிட்டு வெளியேறி இரவு தாமதமாக வீடு திரும்பியதைத் தொடர்ந்து சந்தேகமடைந்த பாட்டி கினிகத்தேன பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. அந்தப் முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், மாணவி பல தடவைகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானது உறுதிப்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனைத்…
ரூ.280 மில்லியனுக்கும் அதிகமான பணம் மற்றும் வாகனங்களுடன் சந்தேக நபர் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். 19.01.2026 அன்று, சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் சோதனை நடத்தி, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் ரூ.283,300,000 (ரூ.283,300,000/=) மற்றும் சட்டவிரோதமாகப் பெறப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு வாகனங்களுடன் ஒரு சந்தேக நபரைக் கைது செய்தனர். சந்தேக நபர் இப்பாகமுவையைச் சேர்ந்த 40 வயதுடையவர். இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில், சந்தேக நபர் வெளிநாட்டில் மறைந்திருப்பதாக சந்தேகிக்கப்படும் ஒரு போதைப்பொருள் கடத்தல்காரருடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டிருந்ததாகவும், போதைப்பொருள் கடத்தல்காரரின் அறிவுறுத்தலின் பேரில், நாட்டில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்களிடமிருந்து மேற்கண்ட பணத்தைச் சேகரித்து, போதைப்பொருள் கடத்தலில் இருந்து சம்பாதித்த பணத்தில் தொடர்புடைய வாகனங்களை வாங்கியதாகவும் தெரியவந்துள்ளது. சந்தேக நபர் 20.01.2026 அன்று குருநாகல் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார் . சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
தந்தையின் அரவணைப்பில் இருந்த குழந்தை, தந்தைக்குத் தூக்கம் ஏற்பட்டதால் அவரது கைகளிலிருந்து தவறி விழுந்து, தலை சீமெந்து தரையில் மோதியதில் குழந்தை உயிரிழந்த சம்பவம் ஒன்று அளுபோமுல்ல பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. படதொப துடுவ பிரதேசத்தை சேர்ந்த ருசேலி கெயாஷா என்ற இரண்டரை மாத குழந்தை இவ்வாறு துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தது. இந்நிலையில் சம்பவம் தொடர்பில் குழந்தையின் தந்தை அளுபோமுல்ல பொலிஸாரால் (18) கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குழந்தை உயிரிழந்ததுடன், தலையின் வலது பக்கம் ஏற்பட்ட காயம் காரணமாக மூளையில் இரத்தக்கசிவு ஏற்பட்டு இரத்தம் உறைந்தமையே மரணத்திற்குக் காரணம் என தெரியவந்துள்ளது. அதற்கமைய, மரண விசாரணை அதிகாரி இந்த மரணம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு, குழந்தையின் தாய் மற்றும் தந்தையை அழைத்து இது குறித்து விசாரித்துள்ளார். அச்சந்தர்ப்பத்தில், மரணம் தொடர்பில் எவ்வித சந்தேகமும் இல்லை எனவும், குழந்தைக்கு எவ்வித விபத்தும் ஏற்படவில்லை…
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வறட்சியான வானிலை- நுவரெலியாவில் அதிகாலை வேளையில் துகள் உறைபனி
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வறட்சியான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள் உறைபனி ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையின் வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய வானிலை முன்னறிவிப்பு மையத்தினால் இன்று காலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, நாட்டின் பல பகுதிகளில் நிலவும் வானிலை குறித்த தகவல்கள் வருமாறு: பொதுவான நிலைமை: நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக வரட்சியான வானிலை நிலவும். நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில் அதிகாலை வேளையில் தரைப்பனி (Ground frost) ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. மூடுபனி: மேல், சபரகமுவ, மத்திய, வடமேல், வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் அதிகாலை வேளையில் சில இடங்களில் மூடுபனி நிலவக்கூடும்.
கொழும்பில் இருந்து வெலிமடை நோக்கிப் பயணித்த பேருந்து ஒன்று, ஹல்துமுல்லை – ஊவதென்ன பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் பேருந்தின் சாரதி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த பகுதியில் பேருந்து பயணித்துக் கொண்டிருந்த போது, சாரதி ஆசனத்திற்கு அருகிலுள்ள கதவு திடீரெனத் திறந்துள்ளது. அந்த நேரத்தில் சாரதி அக் கதவை மூட முயற்சி செய்துள்ளார். இதன்போது, பேருந்து கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த மண் திட்டில் மோதி வீதியிலேயே கவிழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்தில் மேலும் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் பேருந்தின் நடத்துனர், ஒரு சிறுவன் மற்றும் ஒரு பெண் அடங்குவதாகப் பொலிஸார் தெரிவித்தனர். விபத்து காரணமாக வீதியின் ஒரு வழித்தடம் தடைப்பட்டுள்ளதுடன், அந்தத் தடையை விரைவாகச் சீர்செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகப் பொலிஸார் குறிப்பிட்டனர். விபத்து நடந்த நேரத்தில் சாரதி ஆசனப்பட்டி அணிந்திருக்கவில்லை எனப் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.