Author: Thana

செ,திவாகரன் ஹட்டனில் லொறி – வேன் மோதி விபத்து – இருவர் படுகாயம். ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் ஹட்டன் குடகம சந்தியில் இன்று பிற்பகல் (17) லொறியும் வேனும் மோதிய விபத்தில் வேனின் சாரதியும் மற்றொரு நபரும் படுகாயமடைந்து டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். https://youtu.be/9mCTvfmJglM விபத்து தொடர்பில் மேலும் தெரிவவருகையில் ஹட்டனில் இருந்து குடகம நோக்கிச் சென்ற லொறி பிரதான வீதியிலிருந்து இடது பக்கமாக திரும்பி குறுகிய வீதி ஒன்றுக்கு நுழைய முற்பட்ட போது டயகமவிலிருந்து ஹட்டன் நோக்கிச் சென்ற வேன் லொறியுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் லொறியும் வேனும் பலத்த சேதமடைந்துள்ளன, மேலும் லொறியின் சாரதி சந்தேகத்தின் பேரில் ஹட்டன் பொலிஸாரால் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Read More

கொழும்பு, ஜிந்துப்பிட்டி பகுதியில் நேற்று (16) இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம், இரு பாதாள உலகக் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலின் விளைவு என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யூ. வுட்லர் தெரிவித்தார். இதற்கமைய, இந்தச் சம்பவம் தொடர்பில் 3 பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார். சம்பவத்தில் 4 வயதுடைய சிறுவனும், 3 வயதுடைய சிறுமியும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்ததுடன், அவர்கள் சிகிச்சைக்காக கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரு பிள்ளைகளின் நிலைமை சீராக உள்ளதாகவும், மருத்துவக் குழுவினர் பிள்ளைகளுக்கு தேவையான சிகிச்சைகளை அளித்து வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த கொழும்பு 13 பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடைய நபர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். ஜிந்துப்பிட்டி 125 வத்தை…

Read More

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக வரட்சியான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள் உறைபனி உருவாகக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Read More

ஜனாதிபதி திரு அனுரா குமார திசாநாயக்க ஜனாதிபதி செயலகம் கொழும்பு 2026 ஜனவரி 15ம் திகதி பேரிடருக்கு பின்னர் அரச நிவாரணம் மற்றும் மீள் கட்டுமானச் செயற்பாடுகளில் மலையகத் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் இடர்பாடுகள் மற்றும் அது தொடர்பில் மக்கள் போராட்ட முன்னணி முன்வைக்கும் யோசனைகளும். நாடு முகம் கொடுத்த டித்வா பேரனர்த்தில் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு முன்மொழிந்த நிவாரணம் மற்றும் மீள் கட்டுமானச் செயற்பாடுகளில் மலையகத் தமிழ் மக்கள் தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டு வருகின்றார்கள் என்பதனை ஜனாதிபதி அவர்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம் . 1. பேரிடரில் பாதிப்புற்ற மலையகத் தமிழ் மக்களின் தகவல்களும் தரவுகளும் முறையாகவும் சரியாகவும் பதியப்படவில்லை. 2. தோட்டப் புறங்களில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாம்களில் உள்ள மக்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படுகின்ற நிவாரணப் பொருட்கள் முறையாக பகிர்ந்தளிக்கப் படுவதில்லை. 3. முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களின் அடிப்படை வசதிகள் முறையாக கவனிக்கப்படுவதில்லை (ஆண்கள் பெண்கள் என்ற வகையில்).…

Read More

பெண் பொலிஸ் பரிசோதகர் என ஆள்மாறாட்டம் செய்த பெண் ஒருவர், புறக்கோட்டை விடுதி ஒன்றிற்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு மத்திய குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகளினால் இந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் பொலிஸ் விளையாட்டு சீருடை அணிந்திருந்ததுடன், கைத்துப்பாக்கியை ஒத்த மரத்தினால் செய்யப்பட்ட ஆயுதம் ஒன்றையும் வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read More

நாடு முழுவதும் 31,218 வீடுகளை நிர்மாணிப்பதற்கான 2026 தேசிய வீட்டுத்திட்டம் யாழ்ப்பாணம், சாவகச்சேரியில் ஆரம்பம் வடக்கு மற்றும் கிழக்கில் யுத்தத்தினால் இடம்பெயர்ந்த குடும்பங்களை மீள்குடியேற்றுவதற்காக 2,500 வீடுகளின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. வடக்கு, தெற்கு அல்லது கிழக்கில் எந்த இடத்திலும் எந்த வடிவத்திலும், இனவாதத்திற்கு இடமில்லை. யுத்தத்தினால் இடம்பெயர்ந்த அனைத்து மக்களின் வீட்டுப் பிரச்சினையும் எமது பதவிக் காலத்தில் தீர்க்கப்படும். யாழ்ப்பாணத்தை அபிவிருத்தி செய்வதற்கும் அந்த மக்களை பொருளாதார ரீதியாக மேம்படுத்துவதற்குமான திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது – ஜனாதிபதி 10 இலட்சம் ரூபாவாக இருந்த வீட்டு உதவித்தொகையை 20 இலட்சம் ரூபாவாக அதிகரித்து, சிறந்த வீட்டை நிர்மாணிக்க முடியுமான சூழல் உருவாக்கப்பட்டுள்ளது – யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.இளங்குமரன் இன்றும் கூட, சிலர் தொல்பொருள் நினைவுச்சின்னங்கள் அல்லது மதத் தளங்களை மையமாகக் கொண்டு, ஆங்காங்கே இன மோதல்களைத் தூண்ட முயற்சித்தாலும், வடக்கு, தெற்கு, கிழக்கு அல்லது வேறு எந்த இடத்திலும் இனவாதம்…

Read More

தென் மாகாணத்தில் பேருந்து உரிமையாளர்களுக்கான விழிப்புணர்வு திட்டத்தின் ஒரு பகுதியாக, வங்கி அட்டைகள் மூலம் பேருந்து கட்டணங்களை செலுத்தும் முன்னோடி திட்டத்துடன் இணைந்து, தென் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் கீழ் உள்ள அனைத்து பேருந்து சங்க பிரதிநிதிகளுகளையும் விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சி அண்மையில் காலியில் நடைபெற்றது. டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு இந்த முன்னோடித் திட்டத்தைத் ஆரம்பித்துள்ளது. அப்போது, ​​பேருந்து உரிமையாளர்கள் எழுப்பிய பிரச்சினைகளுக்கான தீர்வுகள் மற்றும் வங்கி அட்டைகள் மூலம் கட்டணம் செலுத்தும் திட்டம் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது. அதன்படி, தென் மாகாணத்திலும் இந்த சேவையை விரிவுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Read More

இரவு நேரங்களில் வாகன உரிமையாளர்களை சிரமத்திற்கு உள்ளாக்கி, 92 ஆக்டேன் பெட்ரோல் இல்லை என பொய்யாக கூறி, அதற்கு பதிலாக அதிக விலை கொண்ட யூரோ 3 (Euro 3) பெட்ரோலை விற்பனை செய்வதாக, நாட்டின் சில எரிபொருள் நிலையங்கள் குறித்து நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு (CAA) தகவல்கள் கிடைத்திருந்தன. இந்த தகவலின் அடிப்படையில், களுத்துறை மாவட்ட நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகள், நேற்றுமுன்தினம் (14) இரவு பெருவளை பகுதியில் உள்ள முக்கிய எரிபொருள் நிலையம் ஒன்றை திடீர் முற்றுகைக்கு உட்படுத்தினர். முற்றுகையின் போது வெளிப்பட்ட தகவல்கள்: நுகர்வோருக்கு வழங்காமல் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 6,400 லிட்டர் 92 ஆக்டேன் பெட்ரோல் கையிருப்பு அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டது. இரவு நேரங்களில் 92 ஆக்டேன் பெட்ரோல் இல்லை என கூறி, யூரோ 3 பெட்ரோலை விற்பனை செய்யுமாறு சம்பந்தப்பட்ட நிறுவன அதிகாரிகளே அறிவுறுத்தியதாக, எரிபொருள் நிலைய நிர்வாகம் விசாரணையின் போது தெரிவித்துள்ளது. இது தொடர்பான…

Read More

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகை நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. அதில் மூன்றாம் நாளான மாட்டுப் பொங்கல், விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்கும் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் உன்னதமான நாளாகும். “மாடு” என்ற சொல்லுக்குச் “செல்வம்” என்றொரு பொருளும் உண்டு. தன் உழைப்பால் செல்வம் ஈட்டித் தரும் மாடுகளைத் தெய்வமாகக் கருதி வணங்கும் மரபு காலங்காலமாகத் தொடர்கிறது. விவசாயப் பணிகளில் உழவனுக்குத் துணையாக நின்று நிலத்தை உழுவது முதல், விளைச்சலை வீட்டிற்குச் சேர்ப்பது வரை மாடுகளின் பங்கு அளப்பரியது. தன் வியர்வையைச் சிந்தி உழைக்கும் விவசாயி, தனக்கு உதவியாக இருந்த கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த நாளைக் கொண்டாடுகிறான். கொண்டாட்ட முறைகள்: எப்படித் தயாராகிறார்கள்? மாட்டுப் பொங்கல் அன்று காலை முதலே வீடுகளில் உற்சாகம் களைகட்டும். நீராட்டுதல்: முதலில் மாடுகளைக் குளம் அல்லது ஆற்றிற்கு அழைத்துச் சென்று சுத்தமாகக் குளிப்பாட்டுவார்கள்.மாடுகள் ,ஆடுகளுக்கு அன்று பொங்கல் ஊட்டும்வரை விரத நாளாகும். மாடுகளின் கொம்புகளுக்கு…

Read More

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Read More