Author: Thana

பேலியகொட வித்யாலங்கார பிரிவேனா நிறுவப்பட்டு 150 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் ‘யெலசிய அபிமன்’ நினைவு விழா ஜனாதிபதி தலைமையில் – எதிர்கால தலைமுறையை போதைப்பொருட்களிலிருந்து காப்பாற்ற மகா சங்கத்தினர் உட்பட அனைவரின் ஆதரவையும் எதிர்பார்க்கிறோம் ஜனாதிபதி கிராமத்திற்கும் விகாரைக்கும் இடையே ஒரு ஆன்மீக தொடர்பு இருப்பதாகவும், சமூகத்தை மீட்டெடுக்க பிக்குமாரின் பங்களிப்பு இந்த சமூகத்திற்கு மீண்டும் அவசியம் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். களனி வித்யாலங்கார சர்வதேச பௌத்த மாநாட்டு மண்டபத்தில் நேற்று (02) பிற்பகல் நடைபெற்ற ‘யெலசிய அபிமன்’ நினைவு விழாவில் உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார். 1875 நவம்பர் 1ஆம் திகதி போதிசத்வ குணோபேத ரத்மலானே ஸ்ரீ தர்மாலோக மகா சுவாமிந்திர தேரினால் நிறுவப்பட்ட பேலியகொட வித்யாலங்கார பிரிவேனா, சமகால பௌத்த கல்வியின் தலைமையகங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. பேலியகொட வித்யாலங்கார பிரிவேனா நிறுவப்பட்டு இந்த ஆண்டு 150 ஆண்டுகள்…

Read More

மிரிஹான, கிம்புலாவல பகுதியில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற இசை நிகழ்ச்சியின் போது, ​​போதைப்பொருள் வைத்திருந்ததாக ஆண்கள் மற்றும் பெண்கள் உட்பட 31 இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். மிரிஹான பொலிஸாரும் மிரிஹான பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து இசை நிகழ்ச்சி நடைபெற்ற “கமதா” மைதானத்தில் நடத்திய சிறப்பு நடவடிக்கையின் போது இந்தக் கைதுகள் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த நிகழ்வில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சந்தேக நபர்களிடம் பல்வேறு வகையான போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read More

வெப்பமான வானிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இன்றைய தினம் (03) கிழக்கு மாகாணத்திலும், பொலன்னறுவை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் உள்ள சில பகுதிகளில் வெப்பச் சுட்டியானது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய மட்டத்தில் நிலவக்கூடும் என அத்திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, போதுமான அளவு தண்ணீர் அருந்துமாறும், நிழலான இடங்களில் முடிந்தவரை ஓய்வெடுக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

Read More

ஹொரணை சிரில்டன் வத்தை பகுதியில் நேற்று (2) இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். தனிப்பட்ட தகராறு காரணமாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 12 போர் ரக துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சந்தேகநபர் தற்போது அப்பகுதியில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Read More

சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் பிற பகுதிகளில் பெரும்பாலும் மழையற்ற வானிலை நிலவக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் நிலவக்கூடும். இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் காரணமாக ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

Read More

முச்சக்கரவண்டியை கழுவுவதற்காக நீரை எடுக்க சென்ற இளம் பெண் ஒருவர், களனி ஆற்றில் விழுந்து உயிரிழப்பு உயிரிழந்த சோக சம்பவம் நேற்று (1) மாலை பதிவாகியுள்ளது. நுவரெலியா, பொகவந்தலாவையில் உள்ள தேயிலைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் ஐந்து பேர் கொண்ட குழுவினர், கொழும்பு நோக்கிப் பயணிக்கும் வழியில், முச்சக்கரவண்டியை கழுவுவதற்காக கோகிலவத்தை பகுதியில் களனி கங்கை அருகே உள்ள வாகனங்களை கழுவும் நிலையத்திற்குச் சென்றுள்ளனர். அப்போது, முச்சக்கரவண்டியை கழுவுவதற்காக ஆற்றில் இருந்து வாளியில் தண்ணீர் எடுக்க முற்பட்ட குறித்த இளம் பெண், எதிர்பாராத விதமாக ஆற்றுக்குள் தவறி வீழ்ந்துள்ளதாக கூறப்படுகின்றது. இதைப் பார்த்த அவருடைய 25 வயதுடைய காதலன், அவரைக் காப்பாற்றும் நோக்குடன் உடனடியாக ஆற்றுக்குள் குதித்துள்ளார். காதலன் அவருடன் வந்த குழுவினரால் பத்திரமாக மீட்க மீட்கப்பட்ட போதிலும் ஆற்றில் மூழ்கிய இளம் பெண்ணைக் காப்பாற்ற முடியவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் குறித்து கோகிலவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Read More

ரயில் ஒன்று தடம் புரண்டதால் பிரதான மார்க்கத்தில் ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மீரிகம மற்றும் வில்வத்த ரயில் நிலையங்களுக்கு இடையில் இன்று (02) எரிபொருள் ஏற்றிச் சென்ற ரயில் ஒன்றே தடம் புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. தடம்புரண்ட ரயிலை மீண்டும் தடம் ஏற்றும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Read More

சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்கள் மற்றும் அம்பாறை மாவட்டத்தில் இன்று (02) பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது நாட்டின் ஏனைய பகுதிகளில் சீரான வானிலை நிலவும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் மூடுபனி காணப்படலாம். இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படும் ஆபத்துக்களை குறைத்துக் கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

Read More

ருமேனியாவில் வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறி, 74 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த மஹரகமையில் இயங்கி வந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தின் பணிப்பாளர் ஒருவரை குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர். சந்தேகநபர் நேற்று (31) நுகேகொடை பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு 400க்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவு-1 மேற்கொண்ட விசாரணைகளின் போது, வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கும் இது குறித்து 117 முறைப்பாடுகள் கிடைத்துள்ளமை தெரிய வந்துள்ளது. விசாரணைகளின்படி, வெளிநாட்டு வேலைவாய்ப்பை எதிர்பார்த்து வந்த நபர்களிடமிருந்து குறித்த முகவர் நிலையம் 850,000 ரூபா முதல் 1,850,000 ரூபா வரையான தொகையை வசூலித்துள்ளது தெரியவந்துள்ளது.

Read More

இந்த ஆண்டு கல்விப் பொதுத் தராதரப் பத்திர (க.பொ.த) உயர்தரப் பரீட்சைக்கான தனியார் வகுப்புக்கள், விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவது எதிர்வரும் நவம்பர் 04ஆம் திகதி நள்ளிரவுக்குப் பின்னர் தடை செய்யப்படுவதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சை முடியும் வரை இந்தத் தடை அமுலில் இருக்கும் என்று பரீட்சைத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சையானது நவம்பர் மாதம் 10ஆம் திகதி ஆரம்பமாகி, டிசம்பர் மாதம் 05ஆம் திகதி வரை நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.

Read More