Author: Thana
நாட்டிலிருந்து தொழுநோயை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்ட ‘தேசிய தொழுநோய் மாநாடு’ ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்றது
நாட்டிலிருந்து தொழுநோயை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்ட ‘தேசிய தொழுநோய் மாநாடு’ ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்றது அடுத்த 10 ஆண்டுகளில் இலங்கையில் இருந்து தொழுநோயை ஒழிப்பதற்கான வரைபடமும் வெளியிடப்பட்டது நாட்டிலிருந்து தொழுநோயை ஒழிப்பதற்கான பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லைக் குறிக்கும் வகையில், தேசிய தொழுநோய் மாநாடு இன்று (06) காலை கொழும்பு சினமன் கிரேண்ட் ஹோட்டலில் ஆரம்பமானதோடு அதன் ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கலந்து கொண்டார். அடுத்த 10 ஆண்டுகளில் இலங்கையில் இருந்து தொழுநோயை ஒழிப்பதற்கான வரைபடம் இதன்போது வெளியிடப்பட்டது. உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) மற்றும் சசகாவா மன்றம் என்பவற்றின் ஒத்துழைப்புடன் சுகாதார அமைச்சின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய தொழுநோய் மாநாடு இன்றும் (06) நாளையும் (07) கொழும்பில் நடைபெறும். நிகழ்வில் உரையாற்றிய சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ,பொது சுகாதாரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் இலங்கை1995 ஆம் ஆண்டில் தொழுநோயை…
அனுராதபுரம், எப்பாவல பகுதியில் 20 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள ஹெராயினுடன் ஒரு அதிபர் மற்றும் அவரது 22 வயது மகன் கைது செய்யப்பட்டுள்ளனர். எப்பாவல பகுதியில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின் போது, ஹோட்டல் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருட்களுடன் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் எப்பாவல பகுதியைச் சேர்ந்த 54 மற்றும் 22 வயதுடையவர்கள். சந்தேக நபர்கள் நீண்ட காலமாக இந்தக் கடத்தலில் ஈடுபட்டு வந்ததாகவும், இந்தச் சம்பவம் குறித்து விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்தனர்.
கண்டி பல்லேகலையில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலை ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த தீப்பரவலை கட்டுப்படுத்த கண்டி தீயணைப்பு படையின் 3 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
வருமான வரிக்கு பதிவு செய்துள்ள அனைத்து நபர்களும் தங்கள் 2024/2025 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி அறிக்கையை 2025 நவம்பர் மாதம் 30ஆம் திகதியோ அல்லது அதற்கு முன்னரோ இணையவழியில் (Online) சமர்ப்பிப்பது கட்டாயமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இறைவரித் திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட திகதிக்குள் வருமான வரி அறிக்கையினை சமர்ப்பிக்கத் தவறும் நபர்களுக்கு எதிராக, 2017ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க இறைவரி சட்டத்தின்படி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலதிக விவரங்களை 1944 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாகவோ, http://www.ird.gov.lk என்ற இணையதளம் மூலமாகவோ அல்லது உங்கள் அருகிலுள்ள பிராந்திய அலுவலகத்திலோ பெற்றுக் கொள்ள முடியும்.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்குச் சாதகமான வளிமண்டல நிலைமைகள் உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா மற்றும் காலி மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக அதிகரித்து வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தலவாக்கலை நகரில் தீபாவளி தினத்தன்று இடம்பெற்ற விபத்து தொடர்பாக வாகன சாரதிக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்
தலவாக்கலை நகரில் தீபாவளி தினத்தன்று இடம்பெற்ற விபத்து தொடர்பாக வாகன சாரதியை எதிர்வரும் 11ஆம் திகதி வரை தடுப்பு காவலில் வைக்குமாறு நுவரெலியா மாவட்ட நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார். தலவாக்கலை நகர மத்தியில் தீபாவளி தினத்தன்று அதிகாலை பட்டாசு கொளுத்திக்கொண்டிருந்த இளைஞர்கள் மீது கெப் ரக வாகனம் மோதியதில் இருவர் படுகாயமடைந்து நுவரெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் ஒருவர் சிகிச்சை பலனின்றி (31) உயிரிழந்தார். சென்ட்கிளையார் புகையிரத விடுதியை தற்காலிக வசிப்பிடமாக கொண்ட 28 வயதுடைய செல்வநாதன் புஸ்பகுமார் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவத்தன்று லொறியின் சாரதி தலவாக்கலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். குறித்த இளைஞனின் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டு அவரின் வீட்டுக்கு கொண்டு வரும் வழியில் பிரதான வீதியை மறித்து அணிதிரண்ட மக்கள் குறித்த இளைஞனின் மரணத்திற்கு நீதி கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது சம்பந்தப்பட்ட…
பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய ஒற்றுமைக்கான இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு வத்திக்கான் பாராட்டு
பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய ஒற்றுமைக்கான இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு வத்திக்கான் பாராட்டு நாட்டில் பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தி இலங்கையை மீண்டும் இயல்புநிலைக்குக் கொண்டுவர ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளை பெரிதும் பாராட்டுவதாகவும் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தவும் தேசிய ஒற்றுமையை மேம்படுத்தவும் இலங்கை மேற்கொள்ளும் முயற்சிகளை வத்திக்கான் ஆதரிப்பதாகவும் வத்திக்கானின் நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடனான உறவுகளுக்கான செயலாளர் பேராயர் போல் ரிச்சர்ட் கல்லாகர் ஆண்டகை தெரிவித்தார். உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள வத்திக்கானின் நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடனான உறவுகளுக்கான செயலாளர் பேராயர் போல் ரிச்சர்ட் கல்லாகர் , இன்று (04) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தபோது இவ்வாறு தெரிவித்தார். பேராயர் போல் ரிச்சர்ட் கல்லாகர் ஆண்டகைக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அமோக வரவேற்பளித்ததோடு, நாட்டின் தற்போதைய நிலைமை மற்றும் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் அடைந்துள்ள பொருளாதார முன்னேற்றங்கள் குறித்து…
நுவரெலியா மாவட்டத்தில் குடியிருப்புப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டுமாயின் 150,000 வீடுகள் கட்டப்பட வேண்டும்
நுவரெலியா மாவட்டத்தில் குடியிருப்புப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டுமாயின் 150,000 வீடுகள் கட்டப்பட வேண்டும். அரசாங்கம் என்ற வகையில் நாம் அதற்கான கட்டம் கட்டமான நடவடிக்கைகளை எடுப்போம். வீடமைப்புத் திட்டத்தை முன்னெடுப்பதில் பல்வேறு சிக்கல்கள் காணப்படுகின்றன என நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஞ்சுள எம்.பி. தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் (03) கினிகத்தேன கெனில்வத்த பகுதியில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இத்தாலி நாட்டு நிதியுதவியில் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட வீடுகளை மக்கள் பாவனைக்கு கையளித்துவிட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன் போது மேலும் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீர ஆராய்ச்சி, இந்த வேலைத்திட்டத்தை இத்தாலி நாட்டின் ஒத்துழைப்போடும் தேசிய மக்கள் சக்தியும் இணைந்து 03 மில்லியன் செலவில் முழுமையாக இந்த வீடுகளைப் புனரமைப்புச் செய்து மக்கள் பாவனைக்குக் கையளித்திருக்கின்றோம். இலங்கை நாட்டில் உள்ள மக்கள் நாட்டினை வளர்ச்சிப்…
உலக சுனாமி பேரிடர் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, இந்தியப் பெருங்கடல் சுனாமி ஒத்திகை பயிற்சி இன்று (05) நடைபெறுகிறது. யுனெஸ்கோவின் மாநிலங்களுக்கு இடையேயான கடலியல் ஆணைக்குழுவின் சுனாமி எச்சரிக்கை மற்றும் தணிப்பு அமைப்பு மூலம் ஒருங்கிணைக்கப்பட்ட பிராந்தியப் பயிற்சியாக இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சியை இலங்கையின் இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் உறுதி செய்துள்ளது. இந்தத் திட்டத்திற்காக, இலங்கையின் கடலோர மாவட்டங்களான மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், காலி மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 5 கிராம அலுவலர் பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதில் பிரதான தேசிய ஒத்திகை பயிற்சி களுத்துறை மாவட்டத்தில் நடைபெறுகிறது. இது இன்று காலை 8.30 மணிக்கு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சியில் இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC), வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology), கல்வி அமைச்சு, சுகாதார அமைச்சு, மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்கள், முப்படைகள் (இராணுவம், கடற்படை, விமானப்படை), பொலிஸ், தேசிய பேரிடர்…
மேல், சப்ரகமுவ, மற்றும் மத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மற்றும் வடக்கு மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக அதிகரித்து வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.