Author: Thana
(க.கிஷாந்தன்) தலவாக்கலை நகரத்திலிருந்து தலவாக்கலை தோட்டப்பகுதியை நோக்கி அதிவேகமாக பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றின் முன் சில்லு திடீரென கழன்று விழுந்ததில், முச்சக்கரவண்டி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் இருவர் காயமடைந்ததாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் தற்போது லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து ஹட்டன்–நுவரெலியா பிரதான வீதியில் தலவாக்கலைப் பகுதியில் உள்ள புத்த சிலைக்கு அருகில், நேற்று (03) மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றது. அதிவேகமாக பயணித்த முச்சக்கர வண்டியின் முன் சில்லில் ஏற்பட்ட திடீர் இயந்திர கோளாறே விபத்திற்குக் காரணமாக இருந்ததாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் தலவாக்கலை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
காணவில்லை. பதுளை , தெல்பெத்த தோட்ட மேல் பிரிவை சேர்ந்த நல்லமுத்து ரஞ்ஜனி வயது 46 இரண்டு குழந்தைகளின் தாய் காணாமல் போய்யுள்ளதாக பதுளை பொலிஸ் நிலையத்தில் அவரது கணவர் புகார் ஒன்றை பதிவு செய்துள்ளார். குறித்த படத்தில் உள்ளவரை கண்டால் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது பதுளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி 0552222222 என்ற தொலை பேசிக்கோ அல்லது 0775216725,0762315106 என்ற தொலைபேசிக்கு அறிய தரவும். தகவல் -ராசலிங்கம் கருனன்.
அம்பலாங்கொடை நகர சபை வளாகத்தில் இன்று (4) காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்தார். பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவர் மோதர தேவாலய குழுவின் தலைவரான 56 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. வௌ்ளை நிற கார் ஒன்றில் பிரவேசித்த சிலர் இன்று (4) காலை இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டு தப்பிச் சென்றிருந்தனர். சம்பவம் தொடர்பில் 4 பொலிஸ் குழுக்கள் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அம்பலாங்கொடை நகர சபை வளாகத்தில் இன்று (4) காலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவருக்கு காயம் ஏற்பட்ட நிலையில் அவர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வௌ்ளை நிற கார் ஒன்றில் பிரவேசித்த சிலர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கரந்தெனிய சுத்தாவின் உறவினர் என தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் 4 பொலிஸ் குழுக்கள் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விரிவுரையாளர் ஒருவர் தனது விடுதியில் மாணவி ஒருவரை தடுத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணையத்தால் தற்போது முறையான விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், இது மிகவும் சுயாதீனமான மற்றும் பாரபட்சமற்ற ஒரு குழுவால் மேற்கொள்ளப்படுவதாகவும் பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். வயம்ப பல்கலைக்கழகத்தில் திங்கட்கிழமை (03) நடைபெற்ற தேசிய தொழில்நுட்பக் கல்லூரியை அதிகாரப்பூர்வமாக கையளிக்கும் தேசிய விழாவில் பங்கேற்ற பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இவ்வாறு கூறினார். விழாவுக்குப் பிறகு, பல்கலைக்கழகத்தின் தற்போதைய மாணவர் தலைவர் உட்பட மாணவர்கள் குழு ஒன்று சம்பவம் குறித்து புகார் அளிக்க வந்திருந்தது, மேலும் அவர்களில் இருவருக்கு பிரதமரைச் சந்தித்து சம்பவம் குறித்து எழுத்து மூலமாகவும் வாய்மொழியாகவும் தெரிவிக்க வாய்ப்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
வீட்டுப் பணிப் பெண்களுக்கான வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்கு தேவையான NVQ சான்றிதழ்களைப் போலியாக தயாரித்து வழங்கியமைக்காக, மாவனெல்லையில் உள்ள பயிற்சி நிறுவனத்தை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பயிற்சிகளை நடத்துவதற்கு, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குகிறது. இந்த நிறுவனங்கள் மூன்றாம் நிலைக் கல்வி ஆணைக்குழுவின் அங்கீகாரத்தைப் பெற வேண்டும். இந்நிலையில் குறித்த நிறுவனம் முதலில் கண்டியில் ஆரம்பிக்கப்பட்டு, பயிற்சிகளை வழங்கியுள்ளது. இருப்பினும், அவர்கள் தொடர்புடைய நிபந்தனைகளை மீறி தனிநபர்களுக்கு போலி சான்றிதழ்களை விற்பனை செய்து வந்துள்ளனர். இதற்கிடையில், இந்த ஆண்டு பெப்ரவரி 05 முதல், மாவனெல்ல பகுதியிலும் பயிற்சி படிப்புகளைத் தொடங்கியுள்ளனர், ஆனால் மாவனெல்ல கிளைக்கு மூன்றாம் நிலை கல்வி ஆணைக்குழு அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லை என தெரியவந்துள்ளது. நடத்தப்பட்ட விசாரணையில் பயிற்சி நிறுவனத்தை தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் பணியகத்தின் உள்ளக கணக்காய்வு…
சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடக்கு மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதேநேரம் நாட்டின் ஏனைய பகுதிகளில் சீரான வானிலை நிலவும் எனவும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும், அம்பாறை மாவட்டத்திலும் சில இடங்களில் காலை வேளையில் மூடுபனி நிலவக்கூடும். இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும். எனவே அவ்வாறான சந்தர்ப்பங்களில் ஆபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
1995 என்ற துரித தொலைபேசி இலக்கத்தின் ஊடாக வனப்பகுதி மற்றும் தொடர்புடைய சேதங்கள் குறித்து தகவல்களை வழங்கலாம். – சுற்றாடல் அமைச்சு வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம், வனப் பாதுகாப்புத் திணைக்களம், பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் முப்படையின் பிரதிநிதிகளுடன் இணைந்து “வன பாதுகாப்பு “என்ற கூட்டு செயல்பாட்டுப் பிரிவு நிறுவப்பட்டுள்ளது. இப்பிரிவின் திறப்பு விழா இன்று (03) கொழும்பு 07, ஹெக்டர் கொப்பேகடுவ வீதி, இலக்கம் 07 இல் அமைந்துள்ள சுற்றாடல் அமைச்சின் (வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்புப் பிரிவு) வளாகத்தில் சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக்க பட்டபெந்தி அவர்களின் தலைமையில் மற்றும் பிரதி அமைச்சர் அன்டன் ஜயக்கொடி அவர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது. 24 மணி நேரமும் செயல்படும் துரித அழைப்பு சேவை மூலம் இந்த நடவடிக்கைப் பிரிவு சுறுசுறுப்பாக இயங்கும். இலங்கையின் வனப் பகுதிகளுக்கும், அது தொடர்பான சேதங்களுக்கும் சேதங்கள் குறித்தும் 1995 என்ற இலக்கத்தின் ஊடாகப் பொதுமக்கள் இந்த…
இலங்கையின் டிஜிட்டல் கல்வியில் முப்பெரும் சக்திகள்: அரசாங்கம், இளைஞர்கள் மற்றும் சமூக ஊடகங்கள்
இலங்கையின் டிஜிட்டல் கல்வியில் முப்பெரும் சக்திகள்: அரசாங்கம், இளைஞர்கள் மற்றும் சமூக ஊடகங்கள் இலங்கையின் டிஜிட்டல் கல்விமுறை தற்போது புதிய பரிமாணத்தை அடைந்துள்ளது. இன்றைய கற்றல்முறை வகுப்பறைகளுக்கு அப்பால், தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக விரைவாக பரவுகிறது. இந்த மாற்றம் அறிவை அனைவருக்கும் கிடைக்கச் செய்யும் வாய்ப்பையும், அதே நேரத்தில் தரமான கல்வியை உறுதிசெய்யும் பொறுப்பையும் வழங்குகிறது. இதற்கு சிறந்த உதாரணமாக, இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து TikTok தளம் அண்மையில் அறிமுகப்படுத்திய STEM உள்ளடக்கப் பிரிவு திகழ்கிறது. இது அரசாங்கம், இளைஞர்கள் மற்றும் தனியார் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆகிய மூன்று தரப்பினரும் இணைந்து செயல்படும் புதிய கல்வி முறையின் ஆரம்பத்தைக் குறிக்கிறது. இந்த முத்தரப்பு அணுகுமுறை – அரசின் வழிகாட்டுதல், இளைய சமுதாயத்தின் பங்கேற்பு மற்றும் தனியார் துறையின் புத்தாக்கங்கள் – இலங்கையின் டிஜிட்டல் கல்வி எதிர்காலத்தை வடிவமைக்கும் முக்கிய காரணிகளாக அமைகின்றன. அரசாங்கம்: டிஜிட்டல் கற்றலுக்கான கொள்கையும், உட்கட்டமைப்பும்…
பேலியகொட வித்யாலங்கார பிரிவேனா நிறுவப்பட்டு 150 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் ‘யெலசிய அபிமன்’ நினைவு விழா ஜனாதிபதி தலைமையில்
பேலியகொட வித்யாலங்கார பிரிவேனா நிறுவப்பட்டு 150 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் ‘யெலசிய அபிமன்’ நினைவு விழா ஜனாதிபதி தலைமையில் – எதிர்கால தலைமுறையை போதைப்பொருட்களிலிருந்து காப்பாற்ற மகா சங்கத்தினர் உட்பட அனைவரின் ஆதரவையும் எதிர்பார்க்கிறோம் ஜனாதிபதி கிராமத்திற்கும் விகாரைக்கும் இடையே ஒரு ஆன்மீக தொடர்பு இருப்பதாகவும், சமூகத்தை மீட்டெடுக்க பிக்குமாரின் பங்களிப்பு இந்த சமூகத்திற்கு மீண்டும் அவசியம் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். களனி வித்யாலங்கார சர்வதேச பௌத்த மாநாட்டு மண்டபத்தில் நேற்று (02) பிற்பகல் நடைபெற்ற ‘யெலசிய அபிமன்’ நினைவு விழாவில் உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார். 1875 நவம்பர் 1ஆம் திகதி போதிசத்வ குணோபேத ரத்மலானே ஸ்ரீ தர்மாலோக மகா சுவாமிந்திர தேரினால் நிறுவப்பட்ட பேலியகொட வித்யாலங்கார பிரிவேனா, சமகால பௌத்த கல்வியின் தலைமையகங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. பேலியகொட வித்யாலங்கார பிரிவேனா நிறுவப்பட்டு இந்த ஆண்டு 150 ஆண்டுகள்…