Author: Thana
அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயாவின் 26வது சிரார்த்த தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது! -பெருமாள் கோபிநாத், ஊடகப் பிரிவு-இ.தொ.கா 1913 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி பிறந்த சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்கள் மலையக அரசியல் வரலாற்றில் என்றும் மறவாத மாமனிதராக திகழ்கின்றார். இலங்கைவாழ் இந்தியர்களின் உரிமைகளுக்காகவும், பாதுகாப்பிற்காகவும் போராடிய அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்கள் 1936 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இலங்கை இந்திய காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவராவார். தோட்ட தொழிலார்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்த அன்னார் மலையகத்தின் மன்னராகவும், மாமனிதராகவும் இன்றுவரைக்கும் போற்றப்படுகின்றார். மலையகத்தின் மூத்த அரசியல் தலைவரான அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் 1999 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30 ஆம் திகதி இயற்கை எய்தினார். தனது 89வது வயதில் இயற்கை எய்தும் போது அன்னார், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவராகவும், இலங்கை அமைச்சரவையில் வயது கூடிய அமைச்சராகவும் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது. மலையக மக்களுடைய…
லக்கம் ஆரம்ப தமிழ் வித்தியாலயத்திற்கு புதிய பாடசாலை கட்டிடம் கையளிப்பு மஸ்கெலியாவில் அமைந்துள்ள லக்கம் ஆரம்ப தமிழ் வித்தியாலய மாணவர்களின் பத்து ஆண்டுகால கனவு இன்று நனவானது. அனைத்துலக மருத்துவ நல அமைப்பின் (IMHO) பூரண நிதிப் பங்களிப்பில் நிர்மாணிக்கபட்ட புதிய பாடசாலை கட்டடம் நேற்று (28.10.2025) பாடசாலை சமூகத்தின் பாவனைக்காக அதிகாரப்பூர்வமாக கையளிக்கப்பட்டது. இப்பாடசாலை 2014ஆம் ஆண்டு 1000 பாடசாலைகள் திட்டத்தில் உள்வாங்கப்பட்டு, இதுவரை அயல் பாடசாலையின் தற்காலிக கட்டிடங்களில் எந்த வித அடிப்படை வசதிகளுமின்றி கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதிபர் திருமதி எஸ். விஜயகாந்தி மற்றும் பெற்றோர்களின் வேண்டுகோளுக்கிணங்க, IMHO நிறுவனம் மூன்று வகுப்பறைகள் கொண்ட நிரந்தரக் கட்டடத்தை சுமார் ரூ. 90 லட்சம் செலவில் மிக நேர்த்தியாக நிறைவு செய்து கையளித்துள்ளது. இந்நிகழ்வில், அமெரிக்காவின் கலிபோர்னியா ஸ்டெம்போர்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், அனைத்துலக மருத்துவ நல அமைப்பின் செயலாளருமாகிய வைத்தியர் யாசோ…
(க.கிஷாந்தன்) நுவரெலியாவில் டொப்பாஸ் வனப்பகுதியில் இன்று (29) காலை ஒரு ஆண் நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸார் மேலும் தெரிவித்ததாவது, கண்டெடுக்கப்பட்டவர் நுவரெலியாவின் சாந்திபுர பகுதியைச் சேர்ந்த 27 வயதான ரோஷன் லக்மால் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் இம்மாதம் 8 ஆம் திகதி முதல் வீட்டிலிருந்து காணாமல் போயிருந்ததாகவும், இதுகுறித்து அவரது குடும்பத்தினர் நுவரெலியா பொலிஸில் காணாமற்போனவர் தொடர்பான புகார் ஒன்றை முன்வைத்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை டொப்பாஸ் வனப்பகுதியில் விறகு வெட்டச் சென்ற தொழிலாளர்கள் குழுவொன்று வனப்பகுதியில் ஒரு சடலம் இருப்பதை கண்டறிந்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து, நுவரெலியா பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை ஆரம்பித்தனர். பின்னர், சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்ட சடலம் அவரது தந்தையால் அடையாளம் காணப்பட்டதாகவும், பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சட்ட மருத்துவ அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக…
நாரஹேன்பிட, டபரே மாவத்தையில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்புத் தொகுதி ஒன்றில் தீ விபத்து
நாரஹேன்பிட, டபரே மாவத்தையில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்புத் தொகுதி ஒன்றில் இன்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த குடியிருப்புத் தொகுதியின் ஐந்தாவது மாடியில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தீயைக் கட்டுப்படுத்துவதற்காக மூன்று தீயணைப்பு வாகனங்கள் குறித்த இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
கணேமுல்ல சஞ்சீவவை படுகொலை செய்வதற்காக, இஷாரா செவ்வந்திக்கு, பிஸ்டல் துப்பாக்கியை மறைத்துக் கொள்வதற்காக ‘தண்டனைச் சட்டக்கோவை’ நூலின் பிரதியொன்றை வழங்கிய பெண் சட்டத்தரணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சட்டத்தரணி கடவத்தை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பல்வேறு திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களில் உள்ள 8,547 வெற்றிடங்களை நிரப்புவதற்கு அனுமதி வழங்குவதற்காக பிரதமர் சமர்ப்பித்த பிரேரணைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அரசாங்க சேவைக்கு ஆட்சேர்ப்புச் செய்யும் செயன்முறையை மீளாய்வு செய்வதன் மூலம் தேவைகள், முன்னுரிமைகள் மற்றும் காலக்கெடு ஆகியவற்றை இனங்கண்டு, அத்தியாவசியமாக மேற்கொள்ளப்பட வேண்டிய ஆட்சேர்ப்பு அளவுகள் குறித்து தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக, பிரதமரின் செயலாளர் தலைமையில் அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்றை நியமிப்பதற்கு கடந்த ஆண்டு அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது. அந்தந்த அமைச்சுகளின் கீழ் உள்ள திணைக்களங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களில் நிலவும் பதவிகளில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்காக குறித்த குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கைகளை கருத்திற்கொண்டு, 02-10-2025 அன்று நடைபெற்ற குழுவின் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளின்படி, பல்வேறு அமைச்சுகளின் கீழ் உள்ள சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்கு அனுமதி வழங்குமாறு கோரி பிரதமரால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களில் உள்ள பயணிகளும் ஆசனப் பட்டி அணிவது கட்டாயமாகும்
அதிவேக நெடுஞ்சாலைகளில் நாளுக்கு நாள் வாகன விபத்துகள் அதிகரித்து வருவதன் காரணமாக உயிரிழப்புகள் மற்றும் பாரிய காயங்கள் ஏற்படுவதைக் குறைக்கும் நோக்குடன், 2025-09-25 ஆம் திகதியிடப்பட்ட 2455/29 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் (203 ஆம் அத்தியாயமான) மோட்டார் வாகனச் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் உருவாக்கப்பட்ட 2011 ஆம் ஆண்டின் இல. 2 மோட்டார் வாகன (அதிவேக நெடுஞ்சாலைகள்) கட்டளைகள் திருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம், அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களில் உள்ள அனைத்து ஆசனங்களிலும் பயணிக்கும் நபர்கள் ஆசனப் பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருத்தப்பட்ட அந்தக் கட்டளைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அங்கீகாரம் பெறுவதற்கான பதில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
(BYD Automobile Industry Co., Ltd நிறுவனத்தின் அறிக்கை – 24.10.2025) BYD நிறுவனத்தின் வாகனங்கள் மீள் அழைப்பு: இலங்கையில் பாதிப்பு இல்லை BYD நிறுவனம் பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு, சுமார் 1.15 இலட்சம் BYD Tang மற்றும் Yuan Pro வாகனங்களை மீள அழைப்பதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. வாகன தயாரிப்பில் உயர்தர நிலையை பேணும் முகமாக, வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை முன்னிறுத்தி, இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை BYD நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இந்த மீள் அழைப்பு நடவடிக்கை 2015 மார்ச் முதல் 2017 ஜூலை வரை தயாரிக்கப்பட்ட குறிப்பிட்ட BYD Tang வாகனங்கள் மற்றும் 2021 பெப்ரவரி முதல் 2022 ஆகஸ்ட் வரை தயாரிக்கப்பட்ட சில Yuan Pro மின்சார வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதையும், இது இலங்கைக்கு பொருந்தாது என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறோம். அதேபோல், இந்த இரண்டு வாகன மாதிரிகளும் இலங்கைக்கு அறிமுகப்படுத்தப்படவோ அல்லது விற்பனை செய்யப்படவோ இல்லை. எனவே தற்போது…
கண்டி மகாமாயா பெண்கள் கல்லூரி மாணவர் பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வு ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அலுவலகம், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பாராமன்ற தொடர்பாடல் பிரிவு ஆகியவற்றால் பாடசாலை மாணவர்களுக்களுக்காக செயல்படுத்தப்படும் ‘Vision’ தொடர் நிகழ்ச்சித் திட்டத்துடன் இணைந்ததாக, கண்டி மகாமாயா பெண்கள் கல்லூரி மாணவர் பாராளுமன்ற ஆரம்ப அமர்வு இன்று (28) பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தின் பழைய பாராளுமன்ற சபாபீடத்தில் நடைபெற்றது. இதன்போது, மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிர்கால தலைமை, பாராளுமன்ற மரபு தொடர்பான வரலாறு மற்றும் பாராளுமன்றத்தின் வகிபாகம் மற்றும் ஜனாதிபதி நிதியத்தின் தற்போதைய செயல்பாடு குறித்து தெளிவுபடுத்தப்பட்டது. மாணவர் பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வைத் தொடர்ந்து சபாநாயகர் தெரிவு செய்யப்படல், சபாநாயகர் பதவியேற்பு மற்றும் உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் என்பன இடம்பெற்றன. கண்டி மகாமாயா பெண்கள் கல்லூரி அதிபர் சசிகலா சேனாதீர, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு விசேட…
மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு மாகாணம் மற்றும் அனுராதபுரம் மாவட்டத்தில் சில நேரங்களில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய மலைகளின் மேற்கு சரிவுகளிலும், மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு (50-60) கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். பலத்த காற்றினால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.