Author: Thana

இலங்கை பத்திரிகையாளர்களுக்காக  சுகாதார மேம்பாட்டு திட்டத்துடன் இணைந்து, பத்திரிகையாளர்களுக்கான விசேட கண் சிகிச்சை மையம் இன்று காலை கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர், டாக்டர் அனில் ஜாசிங்கவின் தலைமையில் நடைபெற்றது. இந்நாட்டில் வாழும் மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் ஊடகங்கள் பெரும் பங்கு வகிப்பதால், சுகாதார மேம்பாட்டில் ஊடகங்களின் முக்கியத்துவத்தை  கருத்தில் கொண்டு பத்திரிகையாளர்களுக்காக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவின் சிந்தனையின் வெளிப்பாடாக “மூன்றாம் கண்ணுக்கு ஆரோக்கியத்தை கொண்டு வருவோம்” சுகாதார மேம்பாட்டு திட்டம் தொடங்கப்பட்டது. இந்த “மூன்றாம் கண்ணுக்கு ஆரோக்கியத்தை கொண்டு வருவோம்” திட்டத்தின் முதன்மை நோக்கங்களாக நாடு முழுவதும் பத்திரிகைத் துறையில் ஈடுபட்டுள்ள அனைத்து பத்திரிகையாளர்களின் தற்போதைய சுகாதார நிலைமைகளை ஆராய்ந்து சிகிச்சை அளித்தல், மேலதிக சிகிச்சை தேவைப்படும் பத்திரிகையாளர்களை மருத்துவமனைகளுக்கு பரிந்துரைத்தல், மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை வழங்குதல் ஆகும். தற்போதைய அரசாங்கத்தின் ஆரோக்கியமான…

Read More

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (31) மழையற்ற வானிலை நிலவும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பை வௌியிட்டு அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இன்று அதிகாலை மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் பனிமூட்டம் நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Read More

நாடளாவிய ரீதியில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தால் இன்று காலை 8.00 மணி முதல் முன்னெடுக்கப்படவிருந்த வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வௌியிட்டு அந்த சங்கம் இதனை அறிவித்துள்ளது. நேற்று (30) இரவு சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ (தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு), சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் அரசு வைத்திய அதிகாரிகள் சங்கம் இடையே நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போது எட்டப்பட்ட இணக்கங்களின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறையை மீறி, தன்னிச்சையாக நடைமுறைப்படுத்த முயற்சித்த வைத்தியர்களின் இடமாற்றங்களை இடைநிறுத்தவும், அதற்குப் பதிலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறையின் மூலம் ஒரு கால அட்டவணையுடன் வைத்தியர்களின் இடமாற்றங்களை நடைமுறைப்படுத்தவும் இணக்கம் ஏற்பட்டதாக அந்த சங்கம் தெரிவிக்கின்றது. அத்துடன், இந்த இணக்கங்கள், இன்று நடைபெறும் சுகாதார அமைச்சின் நிர்வாக வைத்தியர்களின் விசேட கலந்துரையாடலில் உறுதிப்படுத்தப்படும்…

Read More

போதைப்பொருட்களுக்கு எதிரான சவாலை எதிர்கொள்ளத் தயார் – ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாட்டு அங்குரார்ப்பண நிகழ்வில் ஜனாதிபதி வலியுறுத்தல் போதைப் பொருள்களுக்கு எதிரான பரந்த பொதுமக்கள் இயக்கத்தை கட்டியெழுப்புவதன் மூலம், நிச்சயமாக போதைப் பொருள் அச்சுறுத்தலை நாட்டிலிருந்து முற்றாக ஒழித்து, எதிர்கால சந்ததியினரையும் சமூகத்தையும் அதிலிருந்து மீட்டெடுப்போம் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார். இன்று (30) முற்பகல் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாட்டு அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் உயிரைப் பறித்து, நாட்டின் பொருளாதாரத்தையும் சமூகத்தையும் அழிக்கும் ஒரு தேசிய பேரழிவாக மாறியுள்ள போதைப்பொருள் வர்த்தகத்திற்கு இனிமேலும் இடமளிக்க தமது அரசாங்கம் தயாராக இல்லை என்று வலியுறுத்திய ஜனாதிபதி, கைது செய்தல், புனர்வாழ்வு, தடுப்பு, பொதுமக்கள் அழுத்தம், மதம், விளையாட்டு மற்றும் கலாசாரம்…

Read More

போதைப்பொருள் பற்றிய தகவல்களைத் தெரிவிக்க துரித தொலைபேசி இலக்கம் – 1818 போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கு “முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாட்டுடன் இணைந்த வகையில் 24 மணித்தியாலமும் செயற்படும் வகையிலான துரித தொலைபேசி இலக்கம் ஒன்றை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு அறிமுகப்படுத்தியுள்ளது. “முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாட்டு சபையின் வேண்டுகோளுக்கு இணங்க அறிமுகப்படுத்தியுள்ள ‘1818’ துரித தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பொதுமக்களுக்கு நாடு பூராகவும் இயங்கும் போதைப்பொருள் வர்த்தகம், விநியோகம் அல்லது அதனுடன் தொடர்புடைய சந்தேகத்திற்கு இடமான செயற்பாடுகள் குறித்து சரியான தகவல்களை வழங்க முடியும். ஜனாதிபதி ஊடகப் பிரிவு

Read More

(க.கிஷாந்தன்) பெருந்தோட்ட மக்களை அவமானப்படுத்தும் வகையில் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட அறிக்கைக்கு எதிராக ஹட்டன் நகரில் இன்று (30) தமிழ் சிவில் சமூக அமைப்பு ஒன்றின் முன்னெடுப்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சமீபத்தில் இந்தியாவில் நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் இருந்து திரும்பிய இலங்கை வீரர்களை வரவேற்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட பெருந்தோட்ட பகுதியை சேர்ந்த ஒரு சிவில் சமூக ஆர்வலர், “பெருந்தோட்டத்துறை ஒரு பட்டினியால் வாடும் நாடு போன்றது; அந்த சமூகத்திலிருந்தே ஆசிய தடகளப் போட்டிகளில் வீரர்கள் பங்கேற்றுள்ளனர்” என குறிப்பிட்டிருந்தார். அந்தக் கருத்தை அவர் சமூக ஊடகங்களில் வெளியிட்டதைத் தொடர்ந்து, பெருந்தோட்ட மக்களிடையே கடும் எதிர்ப்பும் அதிருப்தியும் எழுந்தது. இதனை எதிர்த்து இன்று ஹட்டனில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், தோட்டத் துறை மக்கள் தற்போதைய நிலையில் பொருளாதார ரீதியாக வலுவடைந்து வரும் சமூகக் குழுவாக உள்ளனர் என்றும், அவர்களை இழிவுபடுத்தும்…

Read More

அமரர். சௌமியமூர்த்தி தொண்டமானின் 26 ஆவது சிரார்த்த தினம் இன்று(30) அனுஷ்டிக்கப்பட்டது. கொழும்பு பழைய நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு இ.தொ.காவின் பிரதிநிதிகள் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், தலைவர் செந்தில் தொண்டமான், நிதிச்செயலாளரும், தவிசாளருமான மருதபாண்டி ராமேஷ்வரன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதித் தலைவர்களான கணபதி கனராஜ், அனுசியா சிவராஜா, பிரதி பொதுச்செயலாளர் செல்லமுத்து, உப தலைவர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற தலைவர்கள், உறுப்பினர்கள் உப்பட இ.தொ.கா முக்கியஸ்தர்கள் என பலர் பங்கேற்றிருந்தனர். இந்நிகழ்வின் பின்னர் இ.தொ.காவின் தலைமையகமான சௌமியபவனிலும் பூஜை வழிபாடுகள் இடம்பெற்றிருந்தன. சுதந்திர இலங்கையில் உருவான முதலாவது நாடாளுமன்றத்தில் உறுப்பினராக அங்கம் வகித்தவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான். இலங்கை, இந்திய காங்கிரஸ் உருவாக்கத்துக்கு முக்கிய பங்களிப்பு வழங்கிய அவர் அதன் தலைவராகவும் செயற்பட்டுள்ளார். இலங்கை, இந்திய காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸாக பெயர்…

Read More

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகள் தொடர்பில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவின் பொலிஸ் பிரிவுக்கு கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில், (28) ஒரே நாளில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடியில் ஈடுபட்ட நால்வரை விசாரணை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கனடாவில் தாதியர் சேவை வேலைவாய்ப்புகளை வழங்குவதாகக் கூறி, எட்டுப் பேரிடம் இருந்து ஒரு கோடியே இருபத்தெட்டு இலட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்த ஒருவரை பணியகத்தின் விசாரணை அதிகாரிகள் நேற்று மஹரகம பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளனர். சந்தேகநபர் YR Immigration என்ற பெயரில் கம்பஹா வோட் சிட்டி பிரதேசத்தில் சர்வதேச ஆலோசனையகம் ஒன்றை நடத்தி வந்துள்ளதுடன், அதன் மூலம் ஆலோசனை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக இளைஞர் யுவதிகளை இணைத்து வந்துள்ளார். பணியகத்தின் செல்லுபடியான அனுமதிப்பத்திரம் இன்றி வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை வழங்குவதற்காகப் பணம் பெற்றமை என்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், இன்று (29) கடுவலை நீதவான்…

Read More

மட்டக்குளி மற்றும் பமுனுகம பொலிஸ் நிலையங்களுக்கு கிடைத்த தகவலின் பேரில், அடையாளம் தெரியாத மூன்று ஆண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. நேற்று (29) சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையங்களுக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்குளி, காக்கைத் தீவு கடற்கரைப் பகுதியிலும், களனி கங்கையின் முகத்துவாரத்திற்கு அருகிலும் அடையாளம் தெரியாத இரண்டு ஆண்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மற்றொரு ஆணின் சடலம், பமுனுகம, எபாமுல்ல பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் இரண்டு மாடி வீடொன்றின் பின்புற காணியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த மூன்றாவது நபர், இறுதியாக கருப்பு நிற சாரம் மற்றும் இளம் நீல நிறக் குறுகிய கை சட்டை அணிந்திருந்ததாகவும், அவர் 50 முதல் 60 வயதுக்கு இடைப்பட்ட, சுமார் 5 அடி 7 அங்குல உயரம் கொண்ட, ஒல்லியான உடல்வாகைக் கொண்டிருந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சடலங்களின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மட்டக்குளி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வரும்…

Read More

சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 4 மணிக்குப் பிறகு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read More