Author: Thana
கடந்த சில வாரங்களுடன் ஒப்பிடும்போது, இலங்கையில் தங்கத்தின் விலை 3 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாகக் குறைவடைந்துள்ளது. அதன்படி, 22 கரட் தங்கம் ஒரு பவுணின் விலை 298,000 ரூபாவாக இன்று பதிவாகியுள்ளது. இலங்கையில் தங்கத்தின் விலை ஒக்டோபர் 17 ஆம் திகதி வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும்போது சுமார் 80,000 ரூபா குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ஒக்டோபர் 17 ஆம் திகதி அன்று ஒரு பவுண் 22 கரட் தங்கத்தின் விலை 379,200 ரூபாவாக இருந்தது. இதற்கிடையில், ஒக்டோபர் 17 ஆம் திகதி 410,000 ரூபாவாக இருந்த ஒரு பவுண் தங்கம் இன்று 322,000 ரூபாவாக ஆகக் குறைவடைந்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு நகைக்கடை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2025 டிசம்பர் 9 ஆம் திகதி அன்று கொண்டாடப்படும் இலங்கை கடற்படையின் பெருமைமிக்க 75 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் பல நிலையான சூழல் நட்பு திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், இந்தத் திட்டத்தின் கீழ் மரம் நடும் திட்டம் தொடங்கப்பட்டு, மேலும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட அவர்களின் தலைமையில் 2025 அக்டோபர் 25 ஆம் திகதி காலை கொழும்பில் உள்ள காலி முகத்திடல் கடற்கரையில் தேங்காய் மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்தத் தொடரின் மரம் நடும் திட்டங்களின் கீழ், கடற்படைத் தளபதியின் அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதலின் பேரில், அனைத்து கடற்படை கட்டளைகளையும் உள்ளடக்கிய, தீவின் கடலோர, குளம் மற்றும் நிலப் பகுதிகளில் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு ஏற்ற தாவரங்களை நடும் நிகழ்வு கட்டளைத் தளபதிகளின் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, கிழக்கு, வடக்கு, வடமத்திய, மேற்கு, தென்கிழக்கு மற்றும் வடமேற்கு கடற்படை கட்டளைகளில் தொடர்ச்சியான மர நடுகை திட்டங்கள்…
உலக உணவுத் திட்டத்தின் (World Food Programme – Sri Lanka) இலங்கைக்கான பிரதிநிதியாகப் பதவியேற்ற பிலிப் வார்ட் (Philip Ward) மற்றும் பிரதி இயக்குநர் ரொபர்ட் ஒலிவர் (Robert Oliver) ஆகிய இருவரும் (27) பிரதமரின் அலுவலகத்தில், பிரதமரின் செயலாளர் திரு. பிரதீப் சபுதந்திரி அவர்களைச் சந்தித்தனர். 1968ஆம் ஆண்டு முதல் இலங்கையில் செயற்பட்டு வரும் உலக உணவுத் திட்டம் (WFP), இலங்கையில் உணவுப் பாதுகாப்பு, போசாக்குப் பாதுகாப்பு, பொருளாதார மற்றும் காலநிலைச் சவால்களை எதிர்கொள்ளும் சமூகங்களின் தாங்குதன்மை (Resilience) ஆகியவற்றை வலுப்படுத்துவதில் ஆதரவை வழங்கி வருகிறது. 2023 – 2027ஆம் ஆண்டுக்கான உலக உணவுத் திட்டத்தின் (WFP) வியூகத் திட்டம் (Strategic Plan) மற்றும் அதன் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதுடன், குறிப்பாக உணவுப் பாதுகாப்பு மற்றும் போசாக்குப் பாதுகாப்பிற்கான அரசாங்கத்தின் எதிர்கால வேலைத்திட்டத்திற்கமைய உலக உணவுத் திட்டத்துடன் (WFP) இணைந்து செயற்படுவது குறித்து கலந்துரையாடப்பட்டது. பிரதமரின்…
இந்தியாவின் ராஞ்சியில் நடைபெற்ற 2025 தெற்காசிய தடகள சாம்பியன்ஷிப்பில் இரண்டாம் இடத்தைப் பிடித்த இலங்கை அணியினர் இன்று (28) நாடு திரும்பினர். அவர்கள் இன்று காலை கட்டுநாயக்காவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர். இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே மற்றும் விளையாட்டு அமைச்சின் அதிகாரிகள் விளையாட்டு வீரர்களை வரவேற்க விமான நிலையத்திற்கு சென்றிருந்தனர். இந்த வெற்றியை அடைவதற்கு அவர்கள் வழங்கிய அர்ப்பணிப்பு, உற்சாகம் மற்றும் போட்டிக்கு அமைச்சகம் நன்றி தெரிவித்தார்.
ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் கோல்ஃப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற கயா தலுவத்த, நாடு திரும்பினார்
பஹ்ரைனில் நடைபெற்ற 3வது ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய கயா தலுவத்த கோல்ஃப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார். தனது போட்டியை வெற்றிகரமாக முடித்துவிட்டு, இன்று (27 ஆம் திகதி) இலங்கை திரும்பினார். விளையாட்டு அமைச்சின் அதிகாரிகள் மற்றும் தேசிய ஒலிம்பிக் கமிட்டியின் உறுப்பினர்களும் கட்டுநாயக்காவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குச் சென்று அவரை வரவேற்று, இலங்கைக்காக அவர் பெற்ற வெற்றிக்கு நன்றி தெரிவித்தனர்
தற்போது மாவட்டத்தில் அதிகரித்து வரும் மோட்டார் சைக்கிள் மற்றும் வாகன விபத்துக்களை தவிர்க்கும் நோக்குடன் இந்த விசேட செயல் திட்டம் இன்று காலை முன்னெடுக்கப்பட்டது இதன் போது பிரதான வீதிகள் ஊடாக பயணிக்கும் வாகனங்கள் மோட்டார் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகளினால் விசேட பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன் போக்குவரத்து பாவனைக்கு உரிய முறையில் காணப்படாத வாகனங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கும் முகமாக வாகனங்கள் முழுமையாக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அவற்றின் பிரேக்குகள் டயர்கள் சிக்னல் லைட்டுகள் என்பன பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு பாதுகாப்பற்ற முறையில் காணப்படும் வாகனங்களை திருப்பி அமைப்பதற்காக 14 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டது இதனை உரிய முறையில் கடை பிடிக்காத வாகன சாரதிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது இன்றைய பரிசோதனையின் போது சுமார் நூற்றுக்கணக்கான வாகனங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது இந்த விசேட பரிசோதனை செயல்திட்டத்தின் போது மட்டக்களப்பு தலைமையக போக்குவரத்து போலீஸ் பொறுப்பு அதிகாரி மற்றும் மோட்டார் திணைக்கள…
இலங்கையில் 12 வயதுக்குட்பட்ட பாடசாலைக் மாணவர்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதைத் தடை செய்ய நடவடிக்கை
இலங்கையில் 12 வயதுக்குட்பட்ட பாடசாலைக் குழந்தைகள் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதைத் தடை செய்ய திட்டமிட்டுள்ளதாக குழந்தைகள் நல அமைச்சர் சரோஜா போல்ராஜ் அறிவித்தார். பாடசாலை சிறார்கள் கலந்து கொண்ட விழாவில் பேசிய அமைச்சர், 12 வயதுக்குட்பட்ட எந்தப் பிள்ளையும் மொபைல் போன் வைத்திருக்கவோ அல்லது பயன்படுத்தவோ அனுமதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய அரசாங்கம் ஒரு முடிவை எடுக்கும் என்றார். இந்த நடவடிக்கை, குழந்தைகளை அதிகப்படியான திரை நேரத்திலிருந்தும், தீங்கு விளைவிக்கும் ஒன்லைன் உள்ளடக்கத்திற்கு ஆளாகாமல் பாதுகாப்பதையும், ஆரோக்கியமான குழந்தைப் பருவ வளர்ச்சி மற்றும் சமூக தொடர்புகளை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அவர் கூறினார்.
அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கத்தினால் நேற்று 26 நுவரெலியா புதிய நகர மண்டபத்தில் காலை 11 மணிக்கு தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி மற்றும் வீடு அமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன அவர்களின் தலைமையில் பிரதிநிதிகள் சந்திப்பு ஒன்று பாராளுமன்ற உறுப்பினர் கிட்னன் செல்வராஜ், கிருஷ்ணன் கலைச்செல்வி, மஞ்சுள சுரவீர ஆராய்ச்சி ஆகியோரின் பங்கு பற்றலுடன் நடைபெற்றது. இந்நிகழ்வில் உள்ளூராட்சி சபைகளின் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் தோட்ட தலைவர் ,தலைவிமார்கள் ,இளைஞர்கள், பொதுமக்கள் பங்கேற்றிருந்தனர். இதன்போது தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு நிச்சயமாக தேசிய மக்கள் சக்தி அரசு பெற்றுக் கொடுக்கும்.,அத்தோடு இந்நாட்டில் தலை தூக்கி உள்ள போதைப்பொருளை முற்றிலுமாக தடை செய்வோம் போன்ற முக்கிய விடயங்களை சுட்டி காட்டி கருத்துக்களை தெரிவித்தனர். கஜரூபன் திவ்யா நுவரெலியா
ஹட்டன் ஸ்ரீ நிக்ரோதாராம மகா விகாரையின் பிரதம விஹாராதிபதி அதிவணக்கத்திற்குரிய மகாகம விமல நாயக்க மகா தேரரின் மறைவிற்கு ஜீவன் தொண்டமான் இரங்கல்
“ஹட்டன் ஸ்ரீ நிக்ரோதாராம மகா விகாரையின் பிரதம விஹாராதிபதி அதிவணக்கத்திற்குரிய மகாகம விமல நாயக்க மகா தேரரின் மறைவிற்கு ஜீவன் தொண்டமான் இரங்கல்!” நேற்றைய தினம்(26) இறைபதம் அடைந்த, ஹட்டன் சமாதான நகரத்தின் சகல மதங்களையும் அரவனைத்து செயற்பட்ட அதிவணக்கத்திற்குரிய மகாகம விமல நாயக்க மகா தேரரின் மறைவு செய்தி எமக்குப் பெரும் துயரை ஏற்படுத்தியுள்ளது. என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹட்டன் பிரதேசத்தில் மிக நீண்ட காலமாக எல்லா இன மக்களாலும் நேசிக்கப்படும் கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமகிரி தர்ம மகா சங்க சபையின் மத்திய மாகாண பிரதம சங்கத் தலைவரும், ஹட்டன் ஸ்ரீ பாத தேசிய பாடசாலையின் ஓய்வுபெற்ற அதிபரும், தர்ஷபதி, ஹட்டன் ஸ்ரீ நிக்ரோதாராம மகா விகாரையின் பிரதம விஹாராதிபதியுமான அதி வணக்கத்திற்குரிய மகாகம விமல நாயக்க மகா தேரர், இலங்கை தொழிலாளர்…
கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த விசேட புகையிரதம் இன்று பகல் 1 மணியளவில் வட்டகொட புகையிரத நிலையத்தினருகே தடம் புரண்டுள்ளதால், பதுளைக்கான புகையிரத சேவை பாதிக்கப்பட்டுள்ளது. பின்னர் நானு ஓயாவில் இருந்து வருகை தந்த ஊழியர்கள் தடம் புரண்ட புகைபிரத பெட்டியையும் தண்டவாளத்தையும் சீர் செய்ததை தொடர்ந்து மாலை 4 மணியளவில் பதுளைக்கான புகையிரத சேவை வழமைக்கு திரும்பியது .