Author: Thana
நானுஓயா நிருபர் நானுஓயாவில் வீடுடைத்து நகை, பணத்தைத் திருடியவருக்கு விளக்கமறியல். நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமர்செட் பகுதியில் 810.000 ரூபாய் பெறுமதி வாய்ந்த தங்க நகையும், பணத்தினையும் திருடிய நபரை நவம்பர் மாதம் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுவரெலியா மாவட்ட நீதிமன்ற நீதிவான் (24) வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார். வீட்டில் உள்ளவர்கள் கடந்த (16) திகதி வெள்ளிக்கிழமை வெளியில் சென்றிருந்த நிலையில் வீடுடைத்து இந்தத் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றது சம்பவம் தொடர்பில் நானுஓயா குற்றத்தடுப்பு பிரிவில் (23) திகதி முறைப்பாடு வழங்கப்பட்டது. அதுதொடர்பில் நானுஓயா தலைமையகப் பொலிஸ் பொறுப்பதிகாரி முதன்மை பொலிஸ் பரிசோதகர் தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது பின்னர் நுவரெலியா தடயவியல் பொலிஸாரின் உதவியுடன் நானுஒயா சமர்செட் தோட்டத்தைச் சேர்ந்த 29 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டு மேற்கொண்ட விசாரணையின் பின்னர் அவரிடமிருந்து நகைகள்,பணம் மற்றும் தன்னியக்க பணப்பரிமாற்ற அட்டை என்பன கைப்பற்றப்பட்டன. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்…
பன்விலை-பாடசாலைகளில் போதை பொருள் பாவனையை தடுப்பது தொடர்பில் பாடசாலை அதிபர்களுக்கான விசேட கலந்துரையாடல்
பன்விலை பொலிஸ் பிரவிற்குட்பட்ட 22 கிராம சேவகர் பிரிவிலும், பாடசாலைகளிலும் போதை பொருள் பாவனையை தடுப்பதற்கும், குற்றச்செயல்களை ஒழிப்பதற்குமான பன்விலை கல்விக்கோட்ட பாடசாலை அதிபர்களுடனான சந்திப்பொன்று பன்விலை கோட்டக்கல்விக் காரியாலயத்தில் கோட்டக் கல்விப்பணிப்பாளர் ஜனாப் A.றஹீமின் ஏற்பாட்டில் இன்று 24.10.2025 இடம்பெற்றது. இதன்போது பன்விலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ரட்நாயக்க விடயங்களை தெளிவுபடதே்துவணதயும் கலந்துகொண்ட அதிபர்களையும் படங்களில் காணலாம். பன்விலை நிருபர் ம.நவநீதன்
பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பின் பரிந்துரைக்கமைய ,சப்ரகமுவ மாகாண கல்வி , தகவல் தொழில்நுட்ப மற்றும் கலாச்சார அமைச்சின் அனுசரணையுடன் இரத்தினபுரி மாவட்ட செயலகம் மற்றும் இரத்தினபுரி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சப்ரகமுவ மாகாணத்தின் முதலாவது மாகாண தீபாவளி விழா 2025 எதிர் வரும் 26 /10/2025 அன்று காலை 8:30 – பி.ப 5.00 ஹபுகஸ்தென்ன கீழ் வேவல் கெட்டிய ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வளாகத்தில் இடபெறவுள்ளது.நிகழ்வுகள் விசேட பூசை வழிபாடுகளுடன் ஆரம்பமாகி விஷேட மேளக் கச்சேரி.சிலம்பம் நிகழ்ச்சி. கலை நிகழ்ச்சிகள்.எமது பாரம்பரிய கிராமிய விளையாட்டுக்களுடன், இசை நிகழ்ச்சியும் இடம்பெறும் போட்டியில் பங்கு பற்றுபவர்களுக்கு பெறுமதியான பரிசில்களும் வழங்கி வைக்கப்படவுள்ளது.
நாவலப்பிட்டி கெட்டபுலா குருவாக்கலை தோட்டத்தில் இடம்பெற்ற கிரிக்கெட் போட்டியில் கெட்டபுலா RED DRAGONS முதலாமிடத்தைப்பெற்றது
நாவலப்பிட்டி கெட்டபுலா குருவாக்கலை தோட்டத்தில் தீபாவளியை முன்னிட்டு இடம்பெற்ற சினேகபூர்வமான கிரிக்கெட் போட்டியில் முதலாமிடத்தை ..கெட்டபுலா RED DRAGONS அணியும் ,இடண்டாம் இடத்தை கெட்டபுலா GAME CHANGERS அணியும் ,மூன்றாம் இடத்தை கெட்டபுலா SIXERS அணியும் பெற்றுக்கொண்டனர்.
Coca-Cola Sri Lanka நிறுவனம், பொருள் சேகரிப்பு மற்றும் பதப்படுத்தல் மையத்தை (MCPC) ஒக்டோபர் 16ஆம் திகதி அலவ்வையில் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தது. Coca-Cola அறக்கட்டளையின் (TCCF) நிதியுதவியுடன் நடைமுறைப்படுத்தப்படும் இந்த திட்டம், நிலைபேறான வளர்ச்சியை ஊக்குவிக்கும் இலாப நோக்கற்ற நிறுவனமான ஜனதாக்ஷன் GTE நிறுவனத்தால் செயல்படுத்தப்படுகிறது. இலங்கை அரசாங்கத்தின் 'கிளீன் ஸ்ரீ லங்கா' தொலைநோக்கு வேலைத்திட்டத்துடன் இணைந்து, மறுசுழற்சியை ஊக்குவித்தல், முறையான கழிவு சேகரிப்பு மேம்படுத்தல், மற்றும் பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றின் மூலம் நாட்டின் கழிவு மேலாண்மை அமைப்பை இத்திட்டம் மேம்படுத்துகிறது. Coca-Cola அறக்கட்டளையின் ஆதரவுடன் நிறுவப்பட்டுள்ள ஐந்து மையங்களில் ஒன்றான அலவ்வ மையம், பிளாஸ்டிக் (PET) கழிவுகளை சேகரித்து பதப்படுத்துவதில் கவனம் செலுத்தி, புதிய வாழ்வாதாரங்களை உருவாக்கி, சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஊக்குவிக்கிறது. புகைப்பட விளக்கம்: Coca-Cola குழுவினருடன் துலக்ஷா சத்ருவன் (உரிமையாளர் – Wayamba Eco), அலவ்வ பிரதேச சபைத் தலைவர், அலவ்வ…
கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்தின் பொது மற்றும் சர்வதேச சட்டப் பிரிவின் மாணவர்களும், இந்தியாவின் மும்பையில் உள்ள அமிட்டி சட்டக் கல்லூரியின் மாணவர்களும் அண்மையில் (21) இலங்கைப் பாராளுமன்றத்திற்கு ஒரு கல்விச் சுற்றுலா நோக்கமாக வருகை தந்தனர். கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்தின் பொது மற்றும் சர்வதேச சட்டப் பிரிவு, சுற்றாடல் சட்டம் மற்றும் கொள்கைக்கான நிலையம் (CELP) மற்றும் இந்தியாவின் மும்பையில் உள்ள அமிட்டி சட்டக் கல்லூரி ஆகியன இணைந்து ஏற்பாடு செய்யும் ”இந்து – இலங்கை சுற்றாடல் சட்ட வாரம் – 2025” ஐ முன்னிட்டு அமுல்படுத்தப்படும் கல்விசார் நிகழ்ச்சித் தொடரின் ஒரு அங்கமாகவே சட்ட மாணவர்கள் குழுவினர் இவ்வாறு பாராளுமன்றத்திற்கான கல்விச் சுற்றுலாவில் கலந்துகொண்டனர். பாராளுமன்றத்திற்கு வருகை தந்த இம்மாணவர்களுக்கு முதலாவதாக, பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களத்தின் பொதுமக்கள் சேவைப் பிரிவின் வழிகாட்டலின் கீழ் பாராளுமன்ற வளாகத்தையும் சபை மண்டபத்தையும் அவதானிக்கும் சுற்றுலாவில் பங்கேற்று அனுபவங்களைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு…
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு கோரிக்கை
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் மேல், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில்,…
கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி இந்தியாவிற்குத் தப்பிச் செல்லப் பயன்படுத்திய படகை கொழும்பு குற்றப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். யாழ்ப்பாணம், அராலித்துறை கடற்கரைப் பிரதேசத்தில் இருந்தே இந்தப் படகு பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்தப் படகு, இஷாரா இந்தியாவிற்குத் தப்பிச் செல்ல உதவிய ஏ. ஆனந்தன் என்பவருக்குச் சொந்தமான 400 குதிரைத் திறன் கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்ட படகு எனத் தெரியவந்துள்ளது. கொழும்பு குற்றப் பிரிவின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் கபில காரியவசம் தலைமையிலான அதிகாரிகள் குழு, ஆனந்தன் என்பவரிடம் மேற்கொண்ட நீண்ட விசாரணையின் பின்னரே இந்தப் படகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
‘போதைப்பொருள் பேரழிவை வேரோடு ஒழிப்பதற்கான ‘ முழு நாடுமே ஒன்றாக – தேசிய செயற்பாடு” தொடர்பாக ஊடக நிறுவனங்களின் தலைவர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது. – இந்த தேசியப் பொறுப்பை நிறைவேற்றுவதற்கு அனைத்து ஊடகங்களின் பங்களிப்பை எதிர்பார்க்கிறோம். – ஜனாதிபதி அரசியல் மற்றும் பொருளாதார விடயங்கள் குறித்து விவாதிக்க முடிந்தாலும், நாட்டிலிருந்து போதைப்பொருள் பேரழிவை ஒழிப்பதற்கான தேசிய பொறுப்பை நிறைவேற்றுவதில் இனிமேலும் விவாதித்துக் கொண்டிருப்பதற்கு இடமில்லை.போதைப்பொருள் பேரழிவை ஒழிப்பதற்கான துரித வேலைத்திட்டத்திற்காக முழு நாடும் ஒன்றுபட வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார். ‘போதைப்பொருள் பேரழிவை வேரோடு ஒழிப்பதற்கான ” முழு நாடுமே ஒன்றாக – தேசிய செயற்பாடு’ குறித்து ஊடக நிறுவனங்களின் தலைவர்களுக்கு விளக்கமளிப்பதற்காக இன்று (23) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். தற்போது தேசிய பேரழிவாக மாறி இளைஞர் சமூகத்தைப் போன்றே பாடசாலை மாணவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவித்து வரும்…
தேசிய விவசாய ஆராய்ச்சி சிறப்பு விருது வழங்கும் விழா ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது தேசிய விவசாய ஆராய்ச்சி சிறப்பு விருது வழங்கும் விழா 2023 மற்றும் 2025 ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (23) பிற்பகல் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. ஆராய்ச்சித் துறையில் சிறந்து விளங்க, விவசாய ஆராய்ச்சியாளர்களை ஊக்குவித்தல், அவர்களின் தொழில் எதிர்பார்ப்புகளை மேம்படுத்த உதவுதல் மற்றும் தேசிய விவசாயத் துறையின் வளர்ச்சிக்கு அளிக்கப்பட்ட பங்களிப்பைப் பாராட்டும் நோக்கங்களுக்காக இலங்கை விவசாய ஆராய்ச்சிக் கொள்கை சபை (SLCARP) இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த விருது வழங்கும் விழாவை ஏற்பாடு செய்கின்றது. இந்த ஆண்டு விருது வழங்கும் விழாவில், 2023 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளுக்கான வனவியல் மற்றும் ஏற்றுமதி விவசாயப் பயிர்கள் உள்ளிட்ட பெருந்தோட்ட பயிர்ச்செய்கை, மலர் வளர்ப்பு உள்ளிட்ட பெருந்தோட்டம் அல்லாத பயிர்ச்செய்கை, கால்நடைகள் மற்றும் மீன்வளர்ப்பு மற்றும் நீர்வாழ் வளங்கள்…