Author: Thana

இலங்கையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட ‘2025 ஜனாதிபதி சுற்றாடல் விருது வழங்கல்’ நிகழ்வு இன்று காலை (23) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் நடைபெற்றது. சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்கு சிறந்த பங்களிப்பு வழங்கிய கைத்தொழில்கள், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், ஊடக நிறுவனங்கள், சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் பாடசாலைகள் மற்றும் சமூகப் பங்களிப்பை வரவேற்கும் வகையில் நாட்டில் சுற்றுச்சூழலுக்கு உகந்த கைத்தொழில்கள், வர்த்தகங்கள் மற்றும் சேவைக் கலாசாரத்தை கட்டியெழுப்புதல் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் செயல்படுவதற்காக சமூகத்தை ஊக்குவித்தல் மற்றும் நிலைபேறான அபிவிருத்திக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பை மேம்படுத்துதல் ஆகிய நோக்கத்தில் மத்திய சுற்றாடல் அதிகார சபையால் ஜனாதிபதி சுற்றாடல் விருது வழங்கல் நிகழ்வு ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்த ஆண்டு ஜனாதிபதி சுற்றாடல் விருது வழங்கல் நிகழ்வு…

Read More

ஹெரோயின் போதைப்பொருள் சகிதம் மூன்று சந்தேக நபர்கள், கம்பளை குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். 26, 34 மற்றும் 43 வயதுடைய நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கம்பளை குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய கம்பளை, தொலுவ வட்டகொடவத்த பகுதியிலுள்ள வீடொன்று சோதனைக்குட்படுத்தப்பட்டது. இதன்போது 26 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 2,173 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டது. அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பிரகாரம் பேராதனை, சியதகலவத்த பகுதியில் 34 வயது நபரொருவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 2,840 மில்லி கிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து அதே பகுதியை சேர்ந்த 43 வயது நபரொருவர் கைது செய்யப்பட்டார். அவர் வசமிருந்தும் 2,530 ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டது. சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட பின்னர், 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். க.யோகா

Read More

நுவரெலியா மாவட்டத்தில் காணிகளை கையகப்படுத்திய அரசியல் வாதிகளின் பெயர்களை, தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீர நாடாளுமன்றத்தில் இன்று (23) வெளியிட்டார். நுவரெலியா மாவட்ட மக்களுக்கு காணி இல்லாத நிலையிலேயே இவ்வாறு காணி கொள்ளை இடம்பெற்றுள்ளது என சுட்டிக்காட்டிய அவர், இது தொடர்பில் விசாரணை வேண்டும் என வலியுறுத்தினார். எல்.ஆர்.சியால் மாற்று காணி வழங்கப்பட்டுள்ள நபர்களின் பட்டியலில் அரசியல்வாதிகளின் பெயர் உள்ளதா என கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி நீர்பாசனம் அமைச்சரிடம் மஞ்சுள சுரவீர எம்.பி. கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு அமைச்சு தரப்பில் பிரதி அமைச்சர் பதிலளிக்கையில், ” அரசியல்வாதிகளுக்கு ஆணைக்குழுவால் சட்டத்திற்குட்பட்ட வரையறைக்குள் காணி வழங்கப்படவில்லை.” எனக் கூறினார். இதனையடுத்து கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரவீர, “நுவரெலியா மாவட்டத்தில் மக்களுக்கு காணி இல்லை, இந்நிலையில் பிரதி அமைச்சரால் வழங்கப்பட்ட பதில் தொடர்பில் எமக்கு பிரச்சினை உள்ளது.” என சுட்டிக்காட்டினார். அதன்பின்னர் கீழ்வரும் அரசியல் வாதிகளின்…

Read More

கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது நாட்டில் தங்கத்தின் விலை சுமார் 77,000 ரூபாய் குறைந்துள்ள அதேவேளை, இன்று (23) மட்டும் 10,000 ரூபாய் குறைந்துள்ளது. அதன்படி, இன்று (23) காலை கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 302,300 ரூபாயாக குறைந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இதன் விலை 379,200 ரூபாயாக காணப்பட்டது. இதற்கிடையில், கடந்த வெள்ளிக்கிழமை 410,000 ரூபாயாக இருந்த 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று 330,000 ரூபாயாக குறைந்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.

Read More

கொழும்பு நகரில் நடைபாதையில் ஒரு கடை அல்லது பாதசாரி குடை கடைக்கு இடமில்லை என்றும், அரசியல் அதிகாரத்தையோ அல்லது வேறு எந்த சக்தியையோ இதுபோன்ற முன்னேற்றங்களைச் செய்ய ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என்றும் கொழும்பு மாநகர சபையின் மேயர் திருமதி வ்ராய் கெல்லி பால்தாசர் கூறியுள்ளார். கொழும்பு மாநகர சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற மேற்படி நகராட்சியின் அக்டோபர் மாத கவுன்சில் கூட்டத்தில் மேயர் வ்ராய் கெல்லி பால்தாசர் இவ்வாறு கூறினார். கொழும்பு மாநகர சபையில் நடைபாதையில் கடைகள் மற்றும் பிற கட்டுமானங்கள் கட்டப்படுவதால், மக்கள் பிரதான சாலையில் நடக்க வேண்டியுள்ளது என்றும், மக்கள் பிரதான சாலையில் நடந்து செல்லும்போது ஏதேனும் விபத்து ஏற்பட்டால், அந்தப் பொறுப்பும் நகராட்சி மன்றத்தின் மீது விழும் என்றும், நகரத்தில் இதுபோன்ற கட்டுமானங்கள் குறித்து முழுமையான அறிக்கை கிடைத்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மேயர் கூறினார். கொழும்பில் நடந்த மாவட்டக் குழுக் கூட்டத்தில் நகரத்தை அழகுபடுத்துவது…

Read More

உலகளாவிய மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் அல்லது இளஞ்சிவப்பு மாதமாகக் கருதப்படும் ஒக்டோபர் மாதத்தில் இந்த விழிப்புணர்வூட்டலுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் பிரதமர் (கலாநிதி) ஹரினி அமரசூரிய மற்றும் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன ஆகியோருக்கு மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வூட்டலுக்கான சின்னம் மற்றும் கைப்பட்டி அணிவிக்கும் நிகழ்வு நேற்று (22) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி, குழுக்களின் பிரதித் தவிசாளர் கௌரவ ஹேமாலி வீரசேகர, ஆளும் கட்சியின் முதற்கோலாசான், அமைச்சர் (வைத்தியர்) நலிந்த ஜயதிஸ்ஸ, எதிரிக்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் கயந்த கருணாதிலக ஆகியோருக்கு சின்னங்களும், கைப்பட்டிகளும் அணிவிக்கப்பட்டன. அத்துடன், பாராளுமன்ற உறுப்பினர்களின் நுழைவாயில் பகுதியில் சகல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் மார்பகப் புற்றுநோய்க்கு எதிரான விழிப்புணர்வூட்டும் வகையிலான சின்னமும், கைப்பட்டியும் அணிவிக்கப்பட்டன. அத்துடன், ஒன்றியத்தினால் பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம்…

Read More

நுவரெலியா, மட்டக்களப்பு, பொலன்னறுவை மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களில் நான்கு பிரதேச செயலகப் பிரிவுகளில் நுண் நிதிக் கடன்களை மீளச்செலுத்த முடியாதவர்கள் பற்றிய தகவல்களைத் திரட்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவினால் நியமிக்கப்பட்ட உபகுழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. நுண்நிதிக் கடன் வழங்கல் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான எதிர்கால நடவடிக்கைகள் பற்றி ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குறித்த உபகுழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலீ குணசிங்ஹ அவர்களின் தலைமையில் அண்மையில் (10) கூடியபோதே இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. நாடு முழுவதிலும் நுண் நிதிக் கடன்களால் பாதிக்கப்பட்டவர்களின் நிலுவைத் தொகை உள்ளிட்ட தகவல்களைத் திரட்டுவதற்கு முன்னோடியாக நுவரெலியா, மட்டக்களப்பு, பொலன்னறுவை மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களில் முறையே ஹட்டன், கோரளைப்பற்று தெற்கு, வெலிக்கந்தை மற்றும் வெள்ளவத்தை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் தரவுகளைச் சேகரிக்கத் திட்டமிட்டிருப்பதாக உபகுழுவின் தலைவர் தெரிவித்தார்.…

Read More

அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு நீர் பெறும் பிரதான நீர் உட்கொள்ளும் பம்பிங் நிலையத்திற்கான மின்சாரம் இன்று (23) நிறுத்தப்படுவதால், பல பகுதிகளுக்கு இன்று (23) காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை நீர் விநியோகம் நிறுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, கொழும்பு 01 முதல் 15 வரை, பத்தரமுல்ல, பெலவத்த, ஹோகந்தர, கொஸ்வத்த, தலவதுகொட, கோட்டை, ராஜகிரிய, மிரிஹான, மாதிவெல, நுகேகொட, நாவல, கொலன்னாவ, IDH, கொட்டிகாவத்த, அங்கொட, வெல்லம்பிட்டிய, ஒருகொடவத்த, மஹரகம மற்றும் பொரலஸ்கமுவ ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் துண்டிக்கப்படும். நீர் விநியோகத் தடையால் நுகர்வோருக்கு ஏற்படும் சிரமத்திற்கு வருத்தம் தெரிவிப்பதோடு, முன்கூட்டியே தண்ணீரை சேமித்து வைக்குமாறும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை கேட்டுக்கொண்டுள்ளது.

Read More

புப்புரஸ்ஸ லெவலன் தோட்டத்தில் ஜஸ் போதை பொருள் வைத்திருந்த கள உத்தியோகத்தர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று (22) இடம்பெற்றுள்ளது. ஜனவசம லெவலன் தேயிலை தோட்டத்தை பராமரிக்கும் நேற்று மதியம் லெவலன் தோட்டத்தில் உள்ள விடுதியில் இருக்கும் சந்தரப்பத்தில் புப்புரஸ்ஸ பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கு அமைய உடனடியாக குறித்த விடுதியை சுற்றிவளைத்து சோதனை செய்த போது நபரிடம் இருந்து ஜஸ் போதை பொருள் மீட்க்கப்பட்டுள்ளது. சந்தேக நபரை கைது செய்து இன்று கம்பளை நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதற்கான நடவடிக்கைகள் புப்புரஸ்ஸ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் . க,யோகா

Read More

இலங்கையில் இன்றைய தினம் (22) தங்கத்தின் விலை 20,200 ரூபாய் குறைந்துள்ளது. செட்டியார் தெரு தங்கச் சந்தை தரவுகளின்படி, நேற்றைய தினம் (21) 342,200 ரூபாயாக காணப்பட்ட 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்றைய தினம் (22) 322,000 ரூபாயாக குறைந்துள்ளது. அதேநேரம் நேற்றைய தினம் (21) 370,000 ரூபாவாக காணப்பட்ட 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்றைய தினம் (22) 350,000 ரூபாவாக குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக 410,000 ரூபாய் வரை அதிகரித்த தங்கத்தின் விலை தற்போது படிப்படியாக குறைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More