Author: Thana

சுங்கத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களை விடுவிப்பது தொடர்பான புதிய நிபந்தனைகளை உள்ளடக்கிய வர்த்தமானி அறிவிப்பை நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வெளியிட்டுள்ளார். இந்த ஒழுங்குமுறை நேற்று முன்தினம் (24) முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறையின்படி, வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்ட நாடு அல்லாத வேறு ஒரு நாட்டில் சர்வதேச நாணய கடிதம் திறக்கப்பட்டு இறக்குமதி செய்யப்பட்டிருந்தால், அந்த வாகனங்களை விடுவிக்க அனுமதிக்கப்படுகிறது.

Read More

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார அவர்களின் வழிகாட்டுதலுக்கிணங்க மாவட்ட சமுர்த்தி முகாமையாளரும் நலன்புரி சங்க தலைவருமாகிய எச்.சஞ்ஜீவ உட்பட நலன்புரி சங்க குழுவின் ஏற்பாட்டில் (24) மாவட்ட செயலக வளாகத்தில் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் இல்லா சூழல் ஒன்றை உருவாக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. இந்நிகழ்வின் போது சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் பொலித்தீன் பொருட்கள் திருகோணமலை மீள்சுழற்சி மையத்திடம் ஒப்படைக்கப்பட்டன. இதன் மூலம், நலன்புரி சங்கத்தின் நிதிக்கு பணம் சம்பாதிக்க ஒரு வாய்ப்பும் உருவாக்கப்பட்டது. நலன்புரிச் சங்கம் இந்தத் திட்டத்தினை தொடர்ந்து செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளது. அதே நேரத்தில், டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்களை சுத்தம் செய்வதற்கான சிரமதான நடவடிக்கையும் இதன்போது மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன், மாவட்ட பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Read More

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேல், மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில், தற்காலிகமாக அதிகரித்து வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள…

Read More

.பொகவந்தலாவ இராணிகாடு மற்றும் சென்விஜயன்ஸ் ஆகிய தோட்டங்களில் தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த ஆறு தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கபாபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர் இந்த சம்பவம் 24.10.2025.வெள்ளிக்கிழமை காலை 10.30மணியளவில் இடம் பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். பொகவந்தலாவ சென்விஜயன்ஸ் தோட்டத்தில் தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த நான்கு தொழிலாளர்களை தாக்கிய குளவி இராணிகாடு தோட்ட பகுதியில் தெழிலில் ஈடுபட்டு கொண்டிருந்த தொழிலாளர்களையும் தாக்கியுள்ளது. இதில் 05பெண் தொழிலாளர்களும் 01ஆண் தொழிலாளர் ஒருவருக்கு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். காயங்களுக்கு உள்ளான தொழிலாளர்கள் ஆறு பேரு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

Read More

வயோதிபப் பெண் ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, முகத்தில் மிளகாய்த் தூள் தூவி, கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட ஒரு துயரச் சம்பவம் மினுவாங்கொடை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் மினுவாங்கொடை, யட்டியன பிரதேசத்தில் வசிக்கும் 71 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அந்தப் பெண்ணின் கணவர் இரண்டு வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளார். அதன் பின்னர் கொலை செய்யப்பட்ட இந்தப் பெண் தனியாகவே வீட்டில் வசித்து வந்துள்ளார். நேற்று (24) அயல் வீட்டில் வசிக்கும் பெண் ஒருவர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, மிளகாய்த் தூள் முகத்தில் பூசப்பட்டு கீழே விழுந்து கிடந்ததைக் கண்டு பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். மினுவாங்கொடை பதில் நீதவான் இந்திராணி ரத்நாயக்க சம்பவ இடத்தை பார்வையிட்டதன் பின்னர், சடலத்தை உடற்கூற்றுப் பரிசோதனைக்காக கம்பஹா சட்ட வைத்திய அதிகாரிக்கு அனுப்புமாறு பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். சம்பவம் தொடர்பில் மினுவாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

(க.கிஷாந்தன்) மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையின் வைத்தியர்கள், செவிலியர்கள் மற்றும் இளைய ஊழியர்கள் இன்று (25) காலை 11.00 மணி முதல் 11.30 மணி வரை அரைமணிநேரம் பணியிலிருந்து விலகி, கருப்புப் பட்டி அணிந்து வைத்தியசாலை முன்பாக அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டம், (23) இரவு குடிபோதையில் இருந்த ஒருவர் வைத்தியசாலை வார்டு வளாகத்துக்குள் நுழைந்து ஒரு இளைய ஊழியரைத் தாக்க முயன்ற சம்பவத்தையடுத்து முன்னெடுக்கப்பட்டது. குறித்த நபர் சம்பவத்திற்குப் பிறகு வைத்தியசாலயை விட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. வைத்தியசாலை ஊழியர்கள் தெரிவித்ததாவது: “சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட நபருக்கு எதிராக சட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட வேண்டும்,” என அவர்கள் வலியுறுத்தினர். இச்சம்பவம் தொடர்பாக மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டுள்ளது. விசாரணை மேற்கொண்ட பொலிஸ் பொறுப்பதிகாரி கூறுகையில், சம்பவத்தில் தொடர்புடைய நபர் மஸ்கெலியா…

Read More

TikTok இன் 2025 இரண்டாவது காலாண்டுக்கான சமூக வழிகாட்டுதல் நடைமுறைப்படுத்தல் அறிக்கை வெளியீடு. TikTok நிறுவனம் 2025 இரண்டாம் காலாண்டிற்கான சமூக வழிகாட்டுதல் நடைமுறைப்படுத்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை, பயனர்களுக்கு பாதுகாப்பான டிஜிட்டல் சூழலை உருவாக்குவதில் நிறுவனத்தின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது. 2025 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தை உள்ளடக்கிய இந்த அறிக்கையில், TikTok தனது சமூக வழிமுறைகளை மீறும் உள்ளடக்கங்களை முன்கூட்டியே அடையாளம் கண்டு அகற்றுவதற்கான நடவடிக்கைகள் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், உலகெங்கிலும் உள்ள பயனர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்குவதற்கான முயற்சியை நிறுவனம் உறுதிப்படுத்துகிறது. 2025ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில், TikTok நிறுவனம் இலங்கையில் சமூக வழிகாட்டு நெறிமுறைகளை மீறிய 1,438,046 வீடியோக்களை அகற்றியுள்ளது. இதில் 99% முன்னெச்சரிக்கை நீக்கமாகவும், 79% வீடியோக்கள் 24 மணி நேரத்திற்குள் அகற்றப்பட்டனவாகவும், 1,108,371 வீடியோக்கள் தானியங்கி கண்காணிப்பு மற்றும் கண்டறியும் தொழில்நுட்பங்களின் (automated detection technologies) உதவியுடனும் நீக்கப்பட்டுள்ளன.…

Read More

எல்ல பிரதேச சபை பகுதியில் வீதி பாதுகாப்பு செயல்முறைக்காக வீதி விபத்துக்களைக் குறைக்கும் ‘A Little More Care’ வீதி பாதுகாப்பு திட்டத்திற்கு தேசிய லொத்தர் சபை (23) ரூ. 2.5 மில்லியனை நன்கொடையாக வழங்கியது. போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன தலைமையில் இந்த விழா நடைபெற்றது, மேலும் எல்ல பிரதேச சபையின் தலைவர் வேணுர மலிந்த திசாநாயக்க மற்றும் தேசிய லொத்தர் சபையின் தலைவர் எம். டி. சி. ஏ. பெரேரா ஆகியோர் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

Read More

தற்போது நிலவும் அதிக மழையின் காரணமாக நாட்டில் பல மாவட்டங்களுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்திருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கையை மேலும் நீடிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை நேற்று (24) மாலை 4.00 மணி முதல் இன்று மாலை 4.00 மணி வரை அமுலில் இருக்கும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி, சில பிரதேச செயலாளர் பிரிவுகளை அவதானத்துடன் இருக்குமாறும், மேலும் சில பிரதேச செயலாளர் பிரிவுகளை விழிப்புடன் இருக்குமாறும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. அவதானத்துடன் இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ள பிரதேசங்கள் காலி மாவட்டம்: எல்பிட்டிய , பத்தேகம , நாகொடை. கண்டி மாவட்டம்: யட்டிநுவர. கேகாலை மாவட்டம்: கேகாலை, அரநாயக்க, யட்டியாந்தோட்டை, மாவனெல்ல, ரம்புக்கனை , தெஹியோவிட்ட. இரத்தினபுரி மாவட்டம்: எஹலியகொட, கலவான. விழிப்புடன் இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ள பிரதேசங்கள் கொழும்பு மாவட்டம்: சீதாவக்க , பாதுக்க. காலி மாவட்டம்: யக்கலமுல்ல, நெலுவ.…

Read More

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ள திணைக்களம், இப் பகுதிகளில் சில இடங்களில் 75 mm இற்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும். மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், மேற்கு, வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும், அத்துடன் திருகோணமலை மாவட்டத்திலும் இடைக்கிடையே மணித்தியாலத்துக்கு 40-50 km வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More