Author: Thana
துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த வெலிகம பிரதேச சபையின் தலைவர் ‘மிதிகம லசா’ என்ற லசந்த விக்ரமசேகர உயிரிழந்துள்ளார். அவர் இன்று (22) காலை பிரதேச சபையில் தலைவர் நாற்காலியில் அமர்ந்திருந்த போது மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த அடையாளம் தெரியாத இரு துப்பாக்கிதாரிகள், இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பின்னர், படுகாயமடைந்த அவரை பிரதேச சபை அதிகாரிகள் மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்தனர். துப்பாக்கிதாரிகள், பிரதேச சபை தலைவரிடம் கடிதம் ஒன்றில் கையொப்பம் பெறுவது போன்று பிரவேசித்து இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.
சட்டத்தரணிகள் மற்றும் வைத்தியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கார் பாஸ் ஸ்டிக்கர்களை அகற்ற அவசியமில்லை
சட்டத்தரணிகள் மற்றும் வைத்தியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கார் பாஸ் ஸ்டிக்கர்களை அகற்றுவது தொடர்பாக எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லையென சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ இன்று பாராளுமன்றத்தில் அறிவித்தார். சபையில் உரையாற்றிய அமைச்சர் ஜெயதிஸ்ஸ, மோட்டார் போக்குவரத்து மற்றும் பொலிஸ் உட்பட அரசாங்கத்தால் அத்தகைய எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றார். வைத்தியர்களை அடையாளம் காணவும், மருத்துவமனைகளுக்கு எளிதாகச் செல்லவும் கார் பாஸ்கள் வழங்கப்படுகின்றன என்று அவர் மேலும் கூறினார். “அரசாங்கம் அத்தகைய எந்த அடையாள ஆவணத்தையும் நீக்க எதிர்பார்க்கவில்லை,” என்று அவர் மேலும் கூறினார். எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக சுகாதார அமைச்சர் இந்தக் கருத்துக்களை தெரிவித்தார்.
இலங்கையின் வடக்கு கரையோரப் பகுதியை அண்டியதாக நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் மேலும் வலுவடைந்து கொண்டு மேற்கு – வடமேற்குத் திசையில் நகரக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. அது இன்று (22ஆம் திகதி) மாலையளவில் வட தமிழ்நாடு மற்றும் தென் ஆந்திரப் பிரதேச கரையோரப் பிரதேசங்களுக்கு மேலாக ஒரு தாழமுக்கமாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் மேல், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும்…
பொலிஸ் தலைமையகமாகப் பயன்படுத்தப்படும் பழைய கட்டிடத்தில், பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் தலைமையில், புதிதாக நிறுவப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு (PCID) (20) திறந்து வைக்கப்பட்டது. பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன, பொலிஸ் மா அதிபர், சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய மற்றும் விசாரணைப் பிரிவுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 2438/51 ஆம் இலக்க, 27.05.2025 திகதியிட்ட வர்த்தமானியின் படி, 01.06.2025 அன்று நடைமுறைக்கு வந்த 2025 ஆம் ஆண்டின் 05 ஆம் இலக்க குற்றவியல் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் இலங்கை பொலிஸுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களில் முக்கிய பங்கு வகித்த சிரேஷ்ட உப பொலிஸ் ஆய்வாளர், சட்டத்தரணி அசங்க கரவிட்ட, இந்தப் புதிய பிரிவின் பணிப்பாளர் நாயகமாகச் செயல்படுவார். போதைப்பொருள் கடத்தல், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் அல்லது பிற சட்டவிரோத குற்றச்…
நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்றிரவு 8.30 வரை அமுலில் காணப்படும் வகையில் குறித்த மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, பதுளை, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தாயாரின் கள்ள காதலநினால் 5 வயதுடைய சிறுமியின் உடல் முழுக்க சூடு வைத்து அடித்து சித்திரவதை செய்ததில் சிறுமி படுகாயமடைந்து (19) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சித்திரவதை செய்த நபர் தலைமறைவாகியுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர். மட்டு. கொக்கட்டிச்சோலை பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயது பெண் ஒருவர் கணவரை பிரிந்து தன் குழந்தையுடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில் அவர் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள நாவற்குடா பகுதியைச் சேர்ந்த திருமணம் முடித்த ஆண் ஒருவருடன் அறிமுகமாகி பேசிவந்துள்ள நிலையில் அவர், குறித்த பெண்ணுக்கு கொழும்பில் வேலை பெற்றுத்தருவதாக கூறி பெண்ணையும் அவரது 5 வயது குழந்தையையும் கொழும்புக்கு அழைத்துச் சென்றுள்ளார். இதனை தொடர்ந்து அவர்கள் கொழும்பில் தங்கியிருந்த விடுதியில் வைத்து குறித்த ஆண், சிறுமிக்கு சூடு வைத்து அடித்து சித்திரவதை செய்துள்ளதுடன் இதனால் சிறுமியின் வாய் மற்றும் கை ,கால், முதுகு உட்பட உடல் முழுக்க காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சிறுமியுடன் தாயார்,…
ஹிக்கடுவ, மாவதகம பகுதியில் உள்ள ஒரு வீட்டை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கிச் சூட்டில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் சுமார் 4 துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டதாகவும், வீட்டின் மதில் மற்றும் ஜன்னல் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. சம்பவம் குறித்து ஹிக்கடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்றைய தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய இன்று (21) மத்திய, ஊவா, கிழக்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் உள்ள அனைத்துத் தமிழ் மொழிப் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மாகாண ஆளுநர்கள் இந்த விடுமுறை தினத்தை அறிவித்துள்ளனர். இந்த விடுமுறைக்கான கல்வி நடவடிக்கைகளை எதிர்வரும் சனிக்கிழமை (25) நடத்துமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் வட மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகள் இன்றைய தினம் வழமைப்போல் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு கிழக்காக விருத்தியடைந்த கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை எதிர்வரும் மணித்தியாலங்களில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசமாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இத் தொகுதியின் தாக்கம் காரணமாக நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், தென் மற்றும் வடக்கு மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. பிற்பகல் 1 மணிக்கு பின்னர் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில், தற்காலிகமாக அதிகரித்து வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்களை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
ஜனாதிபதி மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனத்துக்கும் (FUTA) இடையில் சந்திப்பு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனத்துக்கும் (FUTA) இடையிலான சந்திப்பு இன்று (20) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. கடந்த காலத்தில் பல்வேறு காரணங்களினால் பல்கலைக்கழக பட்டப்படிப்பு பாடநெறிகளில் ஏற்பட்ட தாமதங்கள் மற்றும் அவற்றை குறித்த காலத்தில் நிறைவு செய்ய முடியாமை காரணமாக பல்கலைக்கழகக் கட்டமைப்பில் உருவாகியுள்ள சிக்கல்கள் மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர்கள் முகங்கொடுக்கும் சவால்கள் தொடர்பிலும் இங்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனத்தின் (FUTA) பிரதிநிதிகள் ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தினர். அவ்வாறு தாமதமான பட்டப்படிப்புகளின் தரத்தைப் பாதுகாத்து, அவற்றை விரைவில் நிறைவுசெய்யவும் இதுவரை முடிக்கப்படாத பணிகளை திறம்பட முடிக்கவும், ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேம்படுத்த தேவையான திட்டத்தை தயாரித்து சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி இங்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனத்திற்கு தெரிவித்ததுடன், அந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தத் தேவையான வசதிகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும்…