Author: Thana
நேற்றைய தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய இன்று (21) மத்திய, ஊவா, கிழக்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் உள்ள அனைத்துத் தமிழ் மொழிப் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மாகாண ஆளுநர்கள் இந்த விடுமுறை தினத்தை அறிவித்துள்ளனர். இந்த விடுமுறைக்கான கல்வி நடவடிக்கைகளை எதிர்வரும் சனிக்கிழமை (25) நடத்துமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் வட மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகள் இன்றைய தினம் வழமைப்போல் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு கிழக்காக விருத்தியடைந்த கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை எதிர்வரும் மணித்தியாலங்களில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசமாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இத் தொகுதியின் தாக்கம் காரணமாக நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், தென் மற்றும் வடக்கு மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. பிற்பகல் 1 மணிக்கு பின்னர் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில், தற்காலிகமாக அதிகரித்து வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்களை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
ஜனாதிபதி மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனத்துக்கும் (FUTA) இடையில் சந்திப்பு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனத்துக்கும் (FUTA) இடையிலான சந்திப்பு இன்று (20) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. கடந்த காலத்தில் பல்வேறு காரணங்களினால் பல்கலைக்கழக பட்டப்படிப்பு பாடநெறிகளில் ஏற்பட்ட தாமதங்கள் மற்றும் அவற்றை குறித்த காலத்தில் நிறைவு செய்ய முடியாமை காரணமாக பல்கலைக்கழகக் கட்டமைப்பில் உருவாகியுள்ள சிக்கல்கள் மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர்கள் முகங்கொடுக்கும் சவால்கள் தொடர்பிலும் இங்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனத்தின் (FUTA) பிரதிநிதிகள் ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தினர். அவ்வாறு தாமதமான பட்டப்படிப்புகளின் தரத்தைப் பாதுகாத்து, அவற்றை விரைவில் நிறைவுசெய்யவும் இதுவரை முடிக்கப்படாத பணிகளை திறம்பட முடிக்கவும், ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேம்படுத்த தேவையான திட்டத்தை தயாரித்து சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி இங்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனத்திற்கு தெரிவித்ததுடன், அந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தத் தேவையான வசதிகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும்…
தலவாக்கலை நகரத்தில் பட்டாசுகள் கொளுத்திக்கொண்டிருந்த இரண்டு இளைஞர்களை மோதிவிட்டு தப்பிச் சென்ற லொறி சாரதி
(க.கிஷாந்தன்) தலவாக்கலை நகர மையத்தில் பட்டாசுகள் கொளுத்திக்கொண்டிருந்த இரண்டு இளைஞர்களை மோதிவிட்டு தப்பிச் சென்ற பொலேரோ வகை லொறியின் சாரதி ஒருவர் (20) கைது செய்யப்பட்டுள்ளதாக என தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று (20) அதிகாலை 12.30 மணியளவில் இடம்பெற்றது. தலவாக்கலை நகர மையத்தில் பட்டாசுகள் பற்றவைத்துக் கொண்டிருந்த இரு இளைஞர்கள் மீது, நகர மையத்தின் வழியாக அதிக வேகத்தில் சென்ற லொறி மோதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்த இரு இளைஞர்களும் பலத்த காயங்களுடன் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். விபத்துக்குப் பிறகு தப்பிச் சென்ற சந்தேகநபர் தலவாக்கலை கிரேட்வெஸ்டன் தோட்டத்தில் உள்ள வீட்டொன்றில் மறைந்திருந்தபோது பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். இச் சம்பவம் தொடர்பாக தலவாக்கலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
உலகெங்கிலும் வாழும் இந்து பக்தர்களால் மிகுந்த பக்தியுடன் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகை இன்று (20) கொண்டாடப்படுகிறது. கிருஷ்ண பகவான் நரகாசுரனை அழித்தமையை நினைவு கூர்ந்து, அதர்மத்தை தோற்கடித்து அநீதியை வென்றது போன்று, அனைவரின் இதயங்களிலும் இருள் நீங்கி ஒளி பரவட்டும் என்ற பிரார்த்தனையை தாங்கி அவர்கள் மத அனுஷ்டானங்களில் ஈடுபடுகின்றனர். இந்த கொண்டாட்டம் தீமைக்கு எதிராக நன்மை வெற்றி பெற்றதை குறிக்கிறது. தற்போது நம்முன்பாக உள்ள பாரிய சவாலைப் போன்றே நாட்டின் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் போதைப்பொருள் மற்றும் மறைந்துள்ள குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த அரசாங்கம் பாரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது . அனைவரினதும் வாழும் உரிமையை உறுதி செய்வதும், அதை ஒரு சிறந்த மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கான உரிமையாக மேம்படுத்துவதும் எங்கள் முயற்சிகளின் முக்கிய நோக்கமாகும். அதேபோல், நமது பிரஜைகள் மட்டுமன்றி இந்த நாட்டில் வசிக்கும் மற்றும் வருகை தரும் அனைத்து மக்களின் உடல், மன, பௌதீக மற்றும்…
மலையக மக்கள் சமய வழிபாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து தீபாவளி பண்டிகையை இன்று வெகுவிமர்சியாக கொண்டாடிவருகின்றர்
(க.கிஷாந்தன்) மலையக மக்கள் சமய வழிபாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து தீபாவளி பண்டிகையை (20.10.2025) இன்று வெகுவிமர்சியாக கொண்டாடினார்கள். அட்டன் பகுதியில் அட்டன் அருள் மிகு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் பிரதான குருக்கள் சிவஸ்ரீ சற்குண சன்மதுரன் குருக்கள் தலைமையில் தீபாவளி விசேட சமய வழிபாடுகள் நடைபெற்றன. விசேட பூஜை வழிபாடுகளில் ஆலய பரிபாலன சபையினர் உட்பட பொது மக்களும் இவ்வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர். அத்தோடு மலையகத்தில் பல ஆலயங்களில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. இந்து மக்கள் தங்களது பண்டிகையை புத்தாடைகள் அணிந்து சமய வழிபாடுகளில் ஈடுப்பட்டு, உறவினர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து, வீடுகளில் சிறப்பாக கொண்டாடினர்.
தொழில்முறை பொறுப்பை முறையாக நிறைவேற்றும் ஒரு அரச சேவை நாட்டுக்கு அவசியம்- இந்த விடயத்தில் இலங்கை விமானப்படையின் பங்களிப்பு முன்மாதிரியானது
தொழில்முறை பொறுப்பை முறையாக நிறைவேற்றும் ஒரு அரச சேவை நாட்டுக்கு அவசியம்- இந்த விடயத்தில் இலங்கை விமானப்படையின் பங்களிப்பு முன்மாதிரியானது – ஜனாதிபதி ஒவ்வொரு தொழிலுக்கும் தொழில்முறை, திறன், அந்த தொழிலுடன்பிணைந் ஒழுக்கம் மற்றும் பொறுப்பு என்பவற்றுடன் கூடிய அரச சேவை நாட்டிற்கு தேவை. பெருமைமிக்க மற்றும் கௌரவமான வரலாற்றைக் கொண்ட இலங்கை விமானப்படை, அந்த தொழில்முறையை தொடர்ந்து பாதுகாத்து வரும் ஒரு படையினர் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். இலங்கை விமானப்படைக்கு ஜனாதிபதி வர்ண விருது வழங்கல் மற்றும் கெடெட் அதிகாரிகளை விமானப்படை அதிகாரிகளாக நியமிப்பது தொடர்பில் இன்று (18) காலை சீனக்குடா விமானப் படைக் கல்விப்பீடத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார். கடல் மார்க்கத்தில் இடம்பெறும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளை கண்காணிப்பதில் இலங்கை விமானப்படைக்கு வழங்கப்பட்டுள்ள பங்களிப்பையும் ஜனாதிபதி நினைவு கூர்ந்தார். அனர்த்த காலங்களில்…
————————————————————————————- பன்னூலாசிரியரும் சிரேஷ்ட ஒலி, ஒளிபரப்பாளருமான அஷ்ரஃப் சிஹாப்தீன் எழுதிய “ஒரு குடம் கண்ணீர்” நூல் வாசிப்பனுபவப் பகிர்வும் மீளறிமுகமும் எதிர்வரும் 26.10.2025 அன்று ஞாயிற்றுக் கிழமை பி.ப. நான்கு மணிக்கு கொழும்பு – 12, பண்டாரநாயக்க மாவத்தையில் உள்ள பாத்திமா மகளிர் கல்லூரி மண்டபவத்தில் நடைபெறவுள்ளது. டாக்டர் முனீர் அபூபக்கர் அவர்களின் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் கொலன்னாவ பள்ளிவாசல்கள் சம்மேளனத் தலைவரும் கொலன்னாவ பள்ளிவாசல் நிர்வாகத்தின் செயலாளருமான அல்ஹாஜ் எம்.ஜே. பெரோஸ் முகம்மத் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பிப்பார் முதல் பிரதியை அக்பர் பிரதர்ஸ் சந்தைப் படுத்தல் முகாமையாளர் இன்ஷாப்டீன் அவர்கள் பெற்றுக் கொள்வார். இலங்கைத் திறந்த பல்கலைக் கழக விரிவுரையாளரும் ஊடகவியலாளருமான திருமதி தேவகௌரி மகாலிங்க சிவம், இளைஞர் பயிற்றுவிப்பாளரும் பௌதிகவியல் ஆசிரியரான ஹூஸ்னி ஜாபிர், பேருவளைப் பிராந்திய எழுத்தாளர் ஒன்றியத்தின் உபசெயலாளர் திருமதி ஷஹாமா ஸனீர் ஆகியோர் நூல் வாசிப்பனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவுள்ளனர். கௌரவ அதிதிகளாக…
கல்முனை ரஹ்மத் பவுண்டேசனினால் சாய்ந்தமருது கமு/மழ்ஹருஸ் ஷம்ஸ் மகா வித்தியாலயத்தின் கலைப் பிரிவு மாணவிகளுக்கு இலவச கருத்தரங்கு
கல்முனை ரஹ்மத் பவுண்டேசனினால் சாய்ந்தமருது கமு/மழ்ஹருஸ் ஷம்ஸ் மகா வித்தியாலயத்தின் கலைப் பிரிவு மாணவிகளுக்கு இலவச கருத்தரங்கு! ~~~~~~~~~~~ ஏ.எஸ்.எம்.அர்ஹம் நிருபர் இன்றைய (18) தினம் சாய்ந்தமருது கமு/மழ்ஹருஸ் ஷம்ஸ் மகா வித்தியாலயத்தின் ஸ்மார்ட் வகுப்பறையில், கல்முனை ரஹ்மத் பவுண்டேசன் ஏற்பாட்டில் கலை உயர் பிரிவு மாணவிகளுக்காக புவியியல் பாடத்தின் சிறப்பு இலவச கருத்தரங்கு வெற்றிகரமாக இடம்பெற்றது. பாடசாலை அதிபர் திருமதி ரிப்கா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக கல்முனை முன்னாள் மாநகரசபை பிரதி முதல்வரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளரும், ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபக தலைவருமான ரஹ்மத் மன்சூர் அவர்கள் கலந்து கொண்டு மாணவிகளுக்கு ஊக்கமூட்டும் உரையினையும் ஆற்றி இந்நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார். இந் நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவிகள் மற்றும் அமைப்பின் உறுப்பினர்கள் பலரும் பங்கேற்று நிகழ்வை சிறப்பித்தனர்.
அடுத்த கல்வியாண்டில், தரம் 1 மற்றும் தரம் 6 மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படாது என்று கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார். புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதன்படி, தரம் 1 மற்றும் தரம் 6 மாணவர்களுக்கு சுய கற்றல் கையேடுகள் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த சுய கற்றல் கையேடுகள் தற்போது அச்சிடப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, குறித்த தரங்களில் கற்கும் மாணவர்களுக்கான பாடசாலை பைகளின் எடையும் குறைக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.