Author: Thana

இலங்கையில் தங்கத்தின் விலை நேற்றுடன் (17) ஒப்பிடுகையில் 20,000 ரூபாவினால் குறைந்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி, இன்று (18) காலை கொழும்பு செட்டித்தெரு தங்கச் சந்தையில் ’22 கரட்’ ஒரு பவுண் தங்கத்தின் விலை 360,800 ரூபாவாக குறைந்துள்ளது. நேற்று இதன் விலை 379,200 ரூபாவாக காணப்பட்டது. இதேவேளை, நேற்று (17) 410,000 ரூபாவாக இருந்த ’24 கரட்’ ஒரு பவுண் தங்கத்தின் விலை இன்று 390,000 ரூபாவாக குறைந்துள்ளதாக கொழும்பு செட்டித்தெரு தங்கச் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Read More

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் தென் மாகாணங்களில் கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில், தற்காலிகமாக அதிகரித்து வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Read More

போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் தமது விருப்பத்துடன், புனர்வாழ்வு பெறக்கூடிய பத்து மையங்கள் நாடு முழுவதும் நிறுவப்படும் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். போதைப்பொருள் இல்லாத தேசத்தைக் கட்டியெழுப்பும் நோக்கில் செயல்படுத்தப்படும் திட்டத்தின் கீழ் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களின் விருப்பத்துடன் புனர்வாழ்வு செயல்முறையை ஆரம்பித்து வைக்கும் போது அமைச்சர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். புனர்வாழ்வு பணியகத்தின் முதல் தன்னார்வ புனர்வாழ்வு மையம் வெலிகந்த நவ சேனாபுர நவோதயா தொழிற்கல்வி பயிற்சி மையத்தில் நிறுவப்பட்டுள்ளது.

Read More

மத்திய மாகாணத்திலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் (21.10.2025) மத்திய மாகாண ஆளுநரால் விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. நுவரெலியா கல்வி வலயத்தின் நிர்வாகத்திற்குப் பொறுப்பான பிரதி கல்விப் பணிப்பாளர் எம்.கணேஸ்ராஜ் பெருந்தோட்ட சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பிடம் முன்வைத்த வேண்டுகோளுக்கிணங்க இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இவ்விடுமுறைக்கு பதிலாக எதிர்வரும் (25) சனிக்கிழமை பாடசாலைகளை நடாத்துமாறு சகல அதிபர்களுக்கு மத்திய மாகாண ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார். இதேவேளை, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாண பாடசாலைகளுக்கு தீபாவளிக்கு மறுநாள் 21 ஆம் திகதி விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

2024-2025 கல்வியாண்டுக்கான பொது அனுமதி நடைமுறையின் கீழ் பல்கலைக்கழகங்களுக்குச் சேரத் தகுதி பெற்ற மாணவர்களுக்கான மஹாபொல புலமைப்பரிசில் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான கடைசி நாள், 2025 அக்டோபர் 20 ஆம் திகதியுடன் முடிவடையவிருந்தது, இது நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விண்ணப்பங்களை அக்டோபர் 31 ஆம் திகதி வரை சமர்ப்பிக்கலாம் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Read More

புற்றுநோய் மற்றும் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் புகைப்படங்களைப் பயன்படுத்தி பணம் வசூலிக்கும் மோசடியில் ஈடுபட்ட மூவர் நேற்று (16) கைது செய்யப்பட்டனர். முதற்கட்ட விசாரணைகளில், சந்தேகநபர்கள் பேஸ்புக் கணக்குகளில் வெளியிடப்படும் பதிவுகளைப் பயன்படுத்தி இந்த மோசடியை மேற்கொண்டு, அதன் மூலம் பெறப்படும் பணத்தைப் பயன்படுத்தி போதைப்பொருள் உட்கொள்வது தெரியவந்துள்ளது. புற்றுநோய் மற்றும் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் படங்களைப் பயன்படுத்தி, இந்தக் குழு போலி பேஸ்புக் கணக்குகளை நிர்வகித்து இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளது. இந்தக் கணக்குகளில், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவி தேவை எனக் கூறி பதிவுகள் வெளியிடப்பட்டிருந்த நிலையில், அதனை பார்த்து உணர்ச்சிவசப்பட்டவர்கள் நிதி உதவிகளை வழங்கியுள்ளனர். ஆனால், அந்தக் குழந்தைகளின் உறவினர்கள், பேஸ்புக்கில் பரவிய அந்தப் பதிவுகளைப் பார்த்து, விசாரணை செய்து, தங்கள் குழந்தைக்கு உதவி தேவையில்லை என அறிவித்துள்ளனர். நிதி உதவி வழங்கிய ஒருவர் இது தொடர்பாக முறைப்பாடு அளித்ததை அடுத்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின்…

Read More

அரசாங்க காணியின் ஒரு பகுதியை பயிர்ச்செய்கைக்கு வழங்குவதற்காக ஒருவரிடமிருந்து 1.2 மில்லியன் ரூபாயை இலஞ்சமாக கோரி பெற்றதற்காக விவசாய ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உதவியாளர் ஒருவர் நேற்று (16) இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டார். மஹவ பகுதியைச் சேர்ந்த ஒருவர் அளித்த முறைப்பாட்டை தொடர்ந்து இந்த கைது இடம்பெற்றுள்ளது. சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டு பயிரிடப்பட்ட சுமார் 20 ஏக்கர் அரசாங்க காணி ஒன்றில், 12 ஏக்கர் அளவில் முறைப்பாட்டாளருக்கு பயிர்ச்செய்கைக்கு வழங்குவதற்காக அந்த இடத்திற்கு சந்தேகநபரால் ஏக்கர் வரி செலுத்திப்பட்டதாக பற்றுச்சீட்டு வழங்கப்பட்டது. தேவையான பணிகளை மேற்கொள்வதற்கு ரூ. 3.5 மில்லியன் தொகை கோரப்பட்டது. அதிலிருந்து ரூ. 1.0 மில்லியனையும் மீதமுள்ள 2.5 மில்லியனில் இருந்து ரூ. 1.2 மில்லியனை இலஞ்சமாக கோரி பெற்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார். தியலும விவசாய சேவை மையத்தின் விவசாய ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உதவியாளர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று மதியம்…

Read More

மாத்தறை மாவட்டத்தில் QR குறியீடு மூலம் தேயிலை உர மானியம் வழங்கும் முதல் திட்டம் அண்மையில் பிடபெத்தர நகரில் மாத்தறை மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் லால் பிரேமநாத் தலைமையில் நடைபெற்றது. QR முறையின் கீழ் தேயிலை உரத்தைப் பெற, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தேயிலை விவசாயிகள் நவம்பர் 15 ஆம் திகதிக்கு முன் சிறு தேயிலைத் தோட்ட அபிவிருத்தி அதிகாரசபையின் பிராந்திய அலுவலகங்களில் அல்லது தேயிலை ஆலோசகர்/விரிவாக்க அதிகாரியை சந்திப்பதன் மூலம் அல்லது தேயிலை சங்கங்கள் மூலம் பதிவு செய்ய வேண்டும். இந்தப் புதிய முறை ஊடாக, பெற வேண்டிய உரம் மற்றும் மானியத்தின் அளவு எந்த தாமதமும் இல்லாமல் முறையாக கிடைப்பதை உறுதி செய்கிறது. QR குறியீடு மூலம் உங்களுக்கு விருப்பமான அங்கீகரிக்கப்பட்ட உர நிறுவனத்திடமிருந்து தேவையான தரமான உரத்தை எளிதாகப் பெற முடியும், ஆவணங்களை எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமில்லை, அனைத்து விடயங்களும் உடனடியாகவும் தொழில்நுட்பத்தின் மூலமாகவும்…

Read More

(க.கிஷாந்தன்)   நோர்வூட் பிரதேசத்தில் நேற்று இடியுடன் கடும் மழை பெய்தது. இதன்போது மின்னல் தாக்கியதில் வேனொன்றும், வீடொன்றும் சேதமடைந்துள்ளன.   அத்துடன், வீட்டில் இருந்த நபரொருவர் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.   குறித்த மின்னல் தாக்கத்தையடுத்து நேற்று மாலை நோர்வூட்டில் பல பகுதிகளில் மின்தடையும் ஏற்பட்டுள்ளது.   அடுத்து வரும் நாட்களிலும் சீரற்ற வானிலை நிலவும் என்பதால் மக்கள் அவதானத்துடன் இருக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Read More

(க.கிஷாந்தன்) பேக்கரி பொருள் விற்பனை என்ற போர்வையில் கஞ்சா கலந்த மதனமோதக போதைப்பொருளை விற்பனை செய்தார் எனக் கூறப்படும் சந்தேக நபர், நோர்ட்டன் பிரிட்ஜ் பொலிஸாரால் இன்று (16) கைது செய்யப்பட்டுள்ளார். 56 வயது நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். லொறியொன்றில் பேக்கரி பொருள் விற்பனை என்ற போர்வையில் கஞ்சா கலந்த மதனமோதக போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக புலனாய்வு பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதற்கமைய நோட்டன் பிரிட்ஜ் ஊடாக குறித்த லொறி ஹட்டன் நோக்கி  பயணித்துக்கொண்டிருக்கையில் அதனை பொலிஸார் பரிசோதனைக்குட்படுத்தினர். இதன்போது லொறிக்குள் இருந்து 250 மதனமோதக உருண்டைகள் கைப்பற்றப்பட்டன.  சந்தேக நபரை நீதிமன்றத்தில் இன்று முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Read More