Author: Thana
ஹட்டன் ஹைலண்ட்ஸ் ஆரம்ப பாடசாலையின் விளையாட்டு மைதானத்திற்கு அருகில் அதிக எண்ணிக்கையிலான நரிகள் சுற்றித் திரிவதால் மாணவர்களும் ஆசிரியர்களும் கடும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். நரிகள் காலையில் விளையாட்டு மைதானத்திற்கு அருகில் வருவதாகவும், தற்போதைய சூழ்நிலை காரணமாக, குழந்தைகள் விளையாட்டு மைதானத்தில் விளையாடக்கூட முடியாத நிலை இருப்பதாகவும் கூறுகின்றனர். பாடசாலைக்கு அருகில் சுற்றித் திரியும் நரிகளின் கூட்டத்தைப் பிடித்து, வேறு பொருத்தமான இடத்திற்கு கொண்டு சென்று விடுவிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பாடசாலை நிர்வாகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாத்தளை, பிடகந்த தோட்டத்தில் உள்ள பழைய தேயிலைத் தொழிற்சாலைக்கு அருகிலுள்ள வடிகாணில், பிறந்த சிசு ஒன்று வீசப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கந்தேனுவர பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சிசு மீட்கப்பட்டது. சிசு, மாத்தளை பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிசுவின் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை. கந்தேனுவர பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று (04) மாலை இடியுடன் கூடிய மழை பெய்ய சாதகமான வளிமண்டல நிலைமைகள் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனவே, பலத்த மழை, பலத்த காற்று மற்றும் பலத்த மின்னல் தாக்கங்கள் காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
தீபாவளி பண்டிகைக் காலத்திற்காக ஹட்டன் டிக்கோயா நகர சபையில் வணிக நடவடிக்கைகளுக்காக தற்காலிகமாக ஒதுக்கப்பட்ட 146 நிலத் துண்டுகளை டெண்டர் செய்ததன் மூலம் ஹட்டன் டிக்கோயா நகர சபை ரூ. 36 இலட்சத்திற்கும் அதிகமான (ரூ. 36,68,000) வருமானத்தை ஈட்டியுள்ளது. குறித்த டெண்டர் அழைப்பு குறித்து கருத்து தெரிவித்த ஹட்டன் டிக்கோயா நகர சபைத் தலைவர் அசோக கருணாரத்ன நேற்று (03) இவ்வாறு தெரிவித்தார். தீபாவளி பண்டிகை காலத்தில் ஹட்டன் நகரில் நடைபாதைகளில் வர்த்தகம் அனுமதிக்கப்படாத நிலையில், ஹட்டன் நட்சத்திர சதுக்கம் மற்றும் சக்தி மண்டபத்திற்கு அருகிலுள்ள பகுதிகள் வணிக நடவடிக்கைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அரசாங்க மதிப்பீட்டுத் திணைக்களத்தின் அறிக்கை அடிப்படையில் இந்த நிலத் துண்டுகளுக்கான டெண்டர்கள் கோரப்பட்டன. நிதிக் குழு உறுப்பினர்களின் மேற்பார்வையில், மாநகர சபையின் செயலாளர் ஷியாமலி ரூபசிங்க நேற்று டெண்டர்களைத் திறந்து இந்த வருமானத்தை பெற்றார். இந்த டெண்டர்கள் மூலம் நிலங்களை பெற்றவர்களிடமிருந்து டெண்டர் தொகைக்கு மேலாக குப்பை…
அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ‘USS FITZGERALD’ என்ற கப்பல் விநியோக மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது அமெரிக்க கடற்படைக் கப்பலான ‘USS FITZGERALD’ (DDG 62) நேற்று (2025 அக்டோபர் 03) காலை கொழும்பு துறைமுகத்திற்கு விநியோக மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்ய வந்தடைந்தது, இந்தக் கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளின்படி வரவேற்றனர். இவ்வாறு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ள Destroyer வகைக் கப்பலான ‘USS FITZGERALD’ (DDG 62) கப்பல் 154 மீட்டர் நீளம் கொண்டதுடன் இந்தக் கப்பலின் கட்டளை அதிகாரியாக கமாண்டர் Paul Richardson கடமையாற்றுகின்றார். மேலும், விநியோக மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்யதப் பின் ‘USS FITZGERALD’ கப்பலானது தீவில் இருந்து புறப்படவுள்ளது.
பிரதேச அபிவிருத்தி வங்கியின் பயிலுனர் வங்கி உதவியாளர் பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான போட்டிப் பரீட்சை -2024 (2025)
பிரதேச அபிவிருத்தி வங்கியின் பயிலுனர் வங்கி உதவியாளர் பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான போட்டிப் பரீட்சை -2024 (2025) தொடர்பாக இலங்கை பரீட்சை திணைக்களம் அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. அதன்படி அவ்வறிவித்தல் பின்வருமாறு;
2025 ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கிண்ணத்தின் உத்தியோகபூர்வ குளிர்பான பங்காளராக இணைந்து மகளிர் கிரிக்கெட் வளர்ச்சிக்கு கைகொடுக்கும் Coca-Cola
2025 ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கிண்ணத்தின் உத்தியோகபூர்வ குளிர்பான பங்காளராக இணைந்து மகளிர் கிரிக்கெட் வளர்ச்சிக்கு கைகொடுக்கும் Coca-Cola இலங்கையில் கிரிக்கெட் என்பது வெறும் விளையாட்டு அல்ல, அது மக்களின் உணர்வுகளைத் தட்டியெழுப்பும் ஒரு மகத்தான கொண்டாட்டமாகும். அந்த உணர்வை இன்னும் சிறப்பாக்கும் வகையில், சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ஐசிசி) பெருமைக்குரிய உலகளாவிய பங்காளியான Coca-Cola, 2025 செப்டம்பர் 30ஆம் திகதி முதல் நவம்பர் 2ஆம் திகதி வரை இந்தியாவும், இலங்கையும் இணைந்து நடத்தும் ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரின் “உத்தியோகபூர்வ குளிர்பான பங்காளர்” என்ற முறையில் தனது அனுசரணையை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது. இம்முறை மகளிர் ஒருநாள் உலகக் கிண்ணத்தில் இலங்கை அணி 7 போட்டிகளில் விளையாடவுள்ள நிலையில், இதில் 5 போட்டிகள் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும். இதன்படி, அவுஸ்திரேலியாவை ஒக்டோபர் 4ஆம் திகதியும், இங்கிலாந்தை ஒக்டோபர் 11ஆம் திகதியும், நியூசிலாந்தை ஒக்டோபர் 14ஆம் திகதியும், தென்னாப்பிரிக்காவை ஒக்டோபர் 17ஆம் திகதியும், பாகிஸ்தானை ஒக்டோபர் 24ஆம் திகதியும் இலங்கை அணி சந்திக்கவுள்ளது. உலகின் தலைசிறந்த பெண் கிரிக்கெட் வீராங்கனைகள் இலங்கை மண்ணில் விளையாடுவது நாட்டிற்கு பெருமை சேர்க்கும் மறக்க முடியாத தருணமாக அமையவுள்ளது. Coca-Cola நிறுவனத்தின் இலங்கை கிரிக்கெட்டுடனான உறவு வெறும் புத்துணர்ச்சியைத் தாண்டி, மக்களை ஒன்றிணைக்கும் பாலமாக இருந்து வருகிறது. நமது நாட்டின் பப்பரே இசையையும், இலங்கையர்களின் உணர்வுகளையும் பிரதிபலிக்கும் விளம்பரங்கள் முதல், நாடு முழுவதும் கிரிக்கெட் மகிழ்ச்சியைப் பரப்பும் அடிமட்ட திட்டங்கள் வரை, Coca-Cola எப்போதும் ரசிகர்கள், வீரர்கள் மற்றும் விளையாட்டின் உண்மையான உணர்வுக்கு துணையாக இருந்துள்ளது. தற்போது மகளிர் கிரிக்கெட் முன்னணி விளையாட்டாக உருவெடுத்திருக்கும் நிலையில், 2025 ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கிண்ணத்தில் வெளிப்படுத்தப்படும் திறமைகளையும், உறுதியான மனப்பான்மையையும், உலகிற்கு அளிக்கும் ஊக்கத்தையும் கொண்டாடுவதில் Coca-Cola மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறது. இதுதொடர்பில் Coca-Cola நிறுவனத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுகளின் தலைவர் மரியோ பெரேரா கருத்து தெரிவிக்கையில், “உலக நாடுகளை வரவேற்க இலங்கை தயாராகும் வேளையில், இம்முறை ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரை நமது மக்களின், நமது பாரம்பரியத்தின், மற்றும் கிரிக்கெட் மீதான நமது பற்றின் உண்மையான கொண்டாட்டமாக மாற்ற Coca-Cola உறுதி பூண்டுள்ளது. கிரிக்கெட்டில் சாதிக்க கனவு காணும் ஒவ்வொரு சிறுமியும், ஒவ்வொரு குடும்பமும், அயலவரும் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணத்தின் ஒரு பகுதியாக உணர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்” என தெரிவித்தார். பப்பரே மேளங்கள் மைதானங்களிலும், வீடுகளிலும் எதிரொலிக்கத் தயாராக உள்ள நிலையில், Coca-Cola அனைத்து ரசிகர்களையும் ஒரு Coke ஐ உயர்த்தி, உற்சாகமாக ஆரவாரித்து, கிரிக்கெட் கொண்டுவரும் ஒற்றுமையைக் கொண்டாட அழைக்கிறது. ஏனெனில், இலங்கையில் கிரிக்கெட் என்பது வெறும் விளையாட்டல்ல, அது வாழ்வின் ஒரு அங்கமாகும்.
ஹட்டன் -பொய்யான தகவல்களை பரப்பி அவதூறை ஏற்படுத்தும் நோக்கில் வெளியிடப்பட்ட வீடியோவை உடனடியாக அகற்றக் கோரி இடைக்கால தடையுத்தரவு.
ஹட்டன் -பொய்யான தகவல்களை பரப்பி அவதூறை ஏற்படுத்தும் நோக்கில் வெளியிடப்பட்ட வீடியோவை உடனடியாக அகற்றக் கோரி இடைக்கால தடையுத்தரவு. கடந்த 2025.09.25 அன்றைய தினம் வாடிக்கையாளர் ஒருவர் அட்டன் நகரில் உள்ள பேக்கரி எனும் வெதுப்பகத்துக்கு சென்று பாண் இறாத்தல் பொதியொன்றை வாங்கிச் சென்றதாகவும் பின்னர் அதனை பரிசோதித்தபோது அதில் “மனித விரலின் தோல் பகுதி ஒன்று காணப்பட்டதாகவும் அது தொடர்பாக 2025.09.26 அன்றைய தினம் குறித்த வாடிக்கையாளரால் அட்டன் நகரசபைக்குட்பட்ட பொது சுகாதார உத்தியோகத்தர் காரியாலயத்திற்கு முறைப்பாடு செய்யப்பட்டதாகவும் அதன் பின்னர் குறித்த வியாபார நிலையத்திற்கு சென்ற பொது சுகாதார உத்தியோகத்தர்கள் அட்டன் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவிருப்பதாகவும் அறிவித்துள்ளனர். அதே நேரம் “ குறித்த வியாபார நிலையத்தில் விற்கப்பட்ட பாண் பொதியில் மனித விரலின் தோல் பகுதியொன்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதாகவும் குறித்த வியாபார நிலையத்தின் உரிமையாளருக்கு எதிராக இதற்கு முன்னரும் பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு…
கொழும்பு பல்கலைக்கழகத்தின் உயிர்வேதியியல், மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப நிறுவனம், புற்றுநோய் செல்களைக் கொல்லும் ஊட்டச்சத்து மருந்தைக் கண்டுபிடிப்பதில் வெற்றி பெற்றுள்ளது. மனித உடலின் ஒரு பகுதியில் அசாதாரண செல்களின் கட்டுப்பாடற்ற வளர்ச்சி புற்றுநோய் என்று அழைக்கப்படுவதுடன், அது ஆரம்ப கட்டத்தில் கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படாவிட்டால், அது மரணத்திற்கு கூட வழிவகுக்கும். உலகளவில், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10 மில்லியன் மக்கள் புற்றுநோயால் இறப்பதுடன், இலங்கையில், ஒவ்வொரு ஆண்டும் புற்றுநோயால் இறக்கும் மக்களின் எண்ணிக்கை 15,000 முதல் 20,000 வரை காணப்படுகிறது. இந்த சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, உலகளவில் மற்றும் உள்ளூர் அளவில் ஒவ்வொரு நாளும் புற்றுநோய் பரவுவதில் விரைவான அதிகரிப்பு ஏற்பட்டுள்ள அதே நேரத்தில், புற்றுநோயை எதிர்த்துப் போராட வேண்டியதன் அவசியத்தில் உலகின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதன்படி, புற்றுநோய்க்கு எதிரான உலகளாவிய போராட்டத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லைக் குறிக்கும் வகையில், என்டோரோமைக்ஸ் எனப்படும் வெற்றிகரமான புற்றுநோய் தடுப்பூசியை தயாரிப்பதில் ரஷ்யா…
மல்வத்து, அஸ்கிரிய மகா நாயக்க தேரர்களை ஜனாதிபதி சந்தித்தார் அஸ்கிரிய மற்றும் மல்வத்து தரப்பு மகாநாயக்க தேரர்களை இன்று (03) பிற்பகல் சந்தித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களிடம் ஆசி பெற்றார். முதலில், மல்வத்து மகா விஹாரைக்கு சென்ற ஜனாதிபதி, மல்வத்து மகா நாயக்க தேரர் அதி வணக்கத்திற்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரை சந்தித்து ஆசி பெற்றதோடு அவருடன் சிறிது நேரம் உரையாடலில் ஈடுபட்டார்.பின்னர், அஸ்கிரிய மகா விஹாரைக்கு சென்ற ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, அஸ்கிரிய மகா நாயக்க தேரர் அதி வணக்கத்திற்குரிய வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரர் அவர்களின் நலம் குறித்து கேட்டறிந்ததோடு அவருடனும் சிறு உரையாடலில் ஈடுபட்டார். ஜனாதிபதி ஊடகப் பிரிவு 2025-10-03