Author: Thana
மாரவில பகுதியில் 7ஆம் வகுப்பில் கல்வி பயிலும் 13 வயது பாடசாலைச் சிறுமியைப் பெற்றோரின் பராமரிப்பிலிருந்து கடத்திச் சென்று, பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் 35 வயதுடைய திருமணமான நபர் ஒருவரை மாரவில பொலிஸார் கைது செய்துள்ளனர். மஹாவெவ – குடாவெவ பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இச்சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ளாரெனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, சந்தேகநபர் பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றுள்ளதோடு, சிறுமியின் தந்தையுடன் நெருங்கிய நட்பைப் பேணி வந்துள்ளார். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திய சந்தேகநபர், சிறுமியுடன் அடிக்கடி உரையாடி காதல் வலையில் வீழ்த்தியுள்ளார். சந்தேகநபர் திருமணமானவர் என்பது தெரிந்திருந்தும், அச்சிறுமி அவரது பேச்சை நம்பி ஏமாந்துள்ளார். கடந்த ஜூலை 05ஆம் திகதி, “கடற்கரைக்குச் செல்வோம்” எனக் கூறிச் சிறுமியை அழைத்துச் சென்ற சந்தேகநபர், மஹாவெவ பகுதியில் உள்ள விடுதி ஒன்றுக்கு அழைத்துச் சென்று முதன்முறையாகத் துஷ்பிரயோகம் செய்துள்ளார். அதனைத் தொடர்ந்து,…
மின்னணு கட்டண அட்டை வசதியுடன் செப்டம்பர் 20 முதல் பயணிகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அறிவிப்பு
நாடு முழுவதும் உள்ள பொதுப் போக்குவரத்துச் சேவைகளின் தரத்தினையும் செயல்திறனையும் மேலும் மேம்படுத்தும் நோக்கில், இலங்கை போக்குவரத்துச் சபையின் (SLTB) துணை நிறுவனமான ‘மெட்ரோ டிரான்சிட்’ (Metro Transit) நிறுவனத்திற்காக இறக்குமதி செய்யப்பட்டுள்ள 104 புதிய பேருந்துகள் அடங்கிய புதிய தொகுதி நாட்டிற்கு வந்து சேர்ந்துள்ளது. பொதுமக்களுக்கு நவீன மற்றும் வசதியான போக்குவரத்துச் சேவையை வழங்கும் உயரிய நோக்கத்துடன் இப்புதிய பேருந்துகள் கொண்டுவரப்பட்டுள்ளதாகப் போக்குவரத்துத் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். 104 புதிய பேருந்துகள்: நவீன வசதிகளுடன் கூடிய 104 பேருந்துகள் நாட்டின் பொதுப் போக்குவரத்து அமைப்பில் புதிதாக இணையவுள்ளன. மின்கட்டண அட்டை முறை (Card-based Electronic Fare Payment): ரொக்கப் பணப் பரிவர்த்தனைகளைத் தவிர்த்து, பயணிகள் எளிதாகவும் பாதுகாப்பாகவும் கட்டணம் செலுத்துவதற்காக மின்னணு அட்டை முறைகள் இப் பேருந்துகளில் பொருத்தப்பட்டிருக்கும். சேவை தொடங்கும் திகதி: இப்புதிய பேருந்துகள் அனைத்தும் வரும் செப்டம்பர் மாதம் 20ஆம் திகதி முதல் பயணிகள் சேவையில்…
வரலாற்றுச் சிறப்புமிக்க ருஹுணு கதிர்காம மகா தேவாலயத்தின் எசல பெரஹரா உற்சவத்தில் ஜனாதிபதி பங்கேற்பு
வரலாற்றுச் சிறப்புமிக்க ருஹுணு கதிர்காம மகா தேவாலயத்தின் எசல பெரஹரா உற்சவத்தில் ஜனாதிபதி பங்கேற்பு அனைத்து இன மக்களையும் ஒரே புனிதஸ்தலத்தில் ஒன்றிணைக்கும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு, நமது நாட்டின் தேசிய தனித்துவத்தையும் தேசிய ஒற்றுமையையும் பிரதிபலிக்கிறது. – ஜனாதிபதி வரலாற்றுச் சிறப்புமிக்க ருஹுணு கதிர்காம மகா தேவாலயத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான எசல பெரஹராவின் இறுதிப் பெரஹரா நேற்று (29) இரவு வீதி உலா வந்ததுடன், பெரஹராவைப் பார்வையிட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவும் இணைந்துகொண்டார். நேற்று (29) பிற்பகல் வரலாற்றுச் சிறப்புமிக்க கிரிவெஹெர ராஜமகா விகாரைக்கு வருகை தந்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, ருஹுணு பிரதான சங்கநாயக்க, வரலாற்றுச் சிறப்புமிக்க கிரிவெஹெர ராஜமகா விகாராதிபதி வண. கொபவக தம்மிந்த தேரரைச் சந்தித்து ஆசி பெற்றார். பின்னர் ஜனாதிபதி, ஆயிரக்கணக்கான மக்களுடன் இணைந்து பெரஹராவைக் கண்டுகளித்தார். வரலாற்றுச் சிறப்புமிக்க கிரிவெஹெர அருகில் நடைபெற்ற மத அனுஷ்டானங்களில் கலந்துகொண்ட…
கங்கைப்புர பாதை அபிவிருத்தித் திட்டத்தின் முதலாவது கட்டப் பணிகள் இன்று அடிக்கல் நாட்டி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டன.
கங்கைப்புர பாதை அபிவிருத்தித் திட்டத்தின் முதலாவது கட்டப் பணிகள் இன்று அடிக்கல் நாட்டி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டன. கொட்டகலை பிரதேச சபை உறுப்பினர் புஷ்பா விஸ்வநாதன் அவர்களின் வேண்டுகோளுக்கு அமைவாக, கொட்டகலை பிரதேச சபையின் தவிசாளர் ராஜாமணி பிரசாந்த் தலைமையிலும் முழுமையான ஒத்துழைப்புடனும், ரூபாய் 200,0000/- செலவில் இத்திட்டத்தின் முதலாவது கட்டப் பணிகளுக்கான அடிக்கல் இன்று நாட்டி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கொட்டகலை பிரதேச சபையின் உறுப்பினர்களான கணபதி கண்ணதாசன் மற்றும் அமிதா ஆனந்த் அமிதா செயலாளர், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பெருமளவிலான பொதுமக்கள் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர். மேலும், நிகழ்வின் ஒரு பகுதியாக, சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஊக்குவிக்கும் நோக்கில் பிரதேச சபை உறுப்பினர்களால் பொதுமக்களுக்கு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.
நிறைவேற்று அதிகாரத்தின் தலையீட்டால் நீதிமன்றத்தின் சுதந்திரத்தை இழக்க அனுமதிக்க முடியாது-எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச
நிறைவேற்று அதிகாரத்தின் தலையீட்டால் நீதிமன்றத்தின் சுதந்திரத்தை இழக்க அனுமதிக்க முடியாது! அரசாங்கத்திற்கு ஆணை கிடைத்தது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்காகவே தவிர, கனம் நீதிமன்றத்தை நிறைவேற்று அதிகாரத்தின் கைபொம்மையாக்கிக் கொள்வதற்காக அல்ல. அண்மையில் இந்தியாவில் நடந்த சம்பவங்களை மறந்துவிட வேண்டாம் எனத் தற்போதைய அரசாங்கத்திற்கு ஞாபகமூட்டிக்கொள்கிறேன். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாட்டில் முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்தி ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கான ஆணையைப் பெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி தலைமையிலான தற்போதைய அரசாங்கம், நாட்டில் ஏகாதிபத்தியத்தையும், சர்வாதிகாரத்தையும், தனிக்கட்சி ஆட்சியையும் ஸ்தாபிப்பதற்கு எடுக்க முடியுமான சகல நடவடிக்கைகளையும், அதாவது அரசியலமைப்புத் திருத்தத்தைக் கூட செய்வதற்கு முற்பட்டு வருகின்றது. அரசியலமைப்புத் திருத்தம் மூலம் ஜனாதிபதி முறையை மாற்றுவதற்கே ஜனாதிபதிக்கு ஆணை கிடைத்ததே தவிர, நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை மாற்றி, நிறைவேற்று அதிகாரம் நீதிமன்றத்தின் மீது செல்வாக்குச் செலுத்தி, நீதிமன்றத்தை நிறைவேற்று அதிகாரத்தின் கைபொம்மையாக்கிக் கொள்வதற்காக அல்லவென எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். எமது…
நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு
நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு இந்திய அரசாங்கத்தின் உதவியின் கீழ் செயற்படுத்தப்படும் திட்டங்களில் நிலவும் சிக்கல்கள் குறித்துக் கலந்துரையாடல் இந்திய அரசாங்கத்தின் உதவியின் கீழ் இந்நாட்டில் செயற்படுத்தப்படும் நிர்மாணத் திட்டங்களில் எழுந்துள்ள சிக்கல்கள் தொடர்பில், தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோவுக்கும் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையிலான சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (27) முற்பகல் நடைபெற்றது. இந்திய உதவியின் கீழ் இந்நாட்டில் செயல்படுத்தப்படும் நிர்மாணத் திட்டங்களில் எழுந்துள்ள சிக்கல்கள் மற்றும் அவற்றைத் தீர்க்க எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், அந்த திட்டங்களின் ஒப்பந்தங்களைப் புதுப்பித்து தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள், வீடமைப்பு மற்றும் நீர்…
ஜனாதிபதிக்கும் இலங்கை கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவிற்கும் இடையில் சந்திப்பு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இலங்கை கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (27) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இலங்கையில் கிரிக்கெட் விளையாட்டை கட்டியெழுப்பும் போது எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் குறித்து இதன் போது கலந்துரையாடப்பட்டதுடன், நாட்டில் கிரிக்கெட் விளையாட்டின் முன்னேற்றத்திற்காக அரசாங்கத்தினால் வழங்கக்கூடிய பங்களிப்பு மற்றும் ஒத்துழைப்பு குறித்தும் ஜனாதிபதியின் அவதானம் செலுத்தப்பட்டது. இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்ரகீர்த்தி, இலங்கை கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவின் தலைவர் எரான் விக்ரமரத்ன மற்றும் அதன் ஏனைய உறுப்பினர்களான ரொஷான் மஹாநாம, அவந்தி கொழம்பகே, உபுல் குமரப்பெரும, துஷிர ரதெல்ல, சிதத் வெத்தமுனி,டினால் பிலிப் ஆகியோரும் இந்த சந்திப்பில் இணைந்து கொண்டனர். ஜனாதிபதி ஊடகப் பிரிவு 2026-07-27
செ.திவாகரன், நுவரெலியாவில் ஊழல் ஒழிப்புக்காக அரச அதிகாரிகளின் விழிப்புணர்வு நடைபவனி . அரசாங்கத்தின் ‘கிளீன் சிறிலங்கா தேசிய திட்டத்தின் கீழ் “தேசிய நேர்மை வாரம் ” ஆரம்பத்தை முன்னிட்டு நுவரெலியா மாவட்டச் செயலாளர் திருமதி துஷாரி தென்னகோன் அவர்களின் தலைமையில் (28) இன்று விழிப்புணர்வு நடைபவனி நுவரெலியா பிரதான நகரில் உள்ள மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு அருகில் ஆரம்பிக்கப்பட்டது. ஊழலற்ற மற்றும் முன்மாதிரியான நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்கும் நோக்கத்துடன் அமைச்சரவையின் ஒப்புதலுடன் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது மேலும் தனிப்பட்ட இலாபங்களை விடப் பொது நலனுக்கு முன்னுரிமை அளித்து, சுய ஒழுக்கம் மற்றும் நெறிமுறைகளுடன் சேவையாற்றும் அரச அதிகாரிகளை உருவாக்குவதே இதன் முதன்மை நோக்கமாகும். நுவரெலியா மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு அருகில் தொடங்கிய விழிப்புணர்வு நடைபவனி நுவரெலியா பிரதான வழியாக பதுளை வீதியூடாக நுவரெலியா சினிசிட்டா நகர மண்டபத்தை நோக்கிச் சென்றது இப்பேரவையில் முப்படையினர் அடங்கறளாக சுமார் 500 அரச அதிகாரிகள் பங்கேற்றனர் தொடர்ந்து…
நாட்டில் தற்போது எல் நினோ (El Niño) காலநிலை நிலவியபோதிலும், நாட்டின் எந்தவொரு பகுதியிலும் நீர் விநியோகத்தைக் கட்டுப்படுத்துவதற்கு இதுவரை எவ்வித ஆயத்தமும் இல்லை என்றும், எதிர்காலச் சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு அத்தகைய நடவடிக்கைகள் குறித்து அவதானம் செலுத்தப்படும் என்றும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. குடிநீரைப் பெற்றுக்கொள்ளும் பிரதான நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான நீர்ப்பாசனத் திணைக்களம் அல்லது மகாவலி அதிகாரசபை இதுவரை நீரைக் பெற்றுக்கொள்வதற்கு எவ்விதக் கட்டுப்பாடுகளையும் விதிக்கவில்லை என்பதால், சபை தனது அதிகபட்ச நீர் உற்பத்தித் திறனை அதே மட்டத்தில் பேணி வருவதாக அதன் தலைவர் சந்தன பண்டார சுட்டிக்காட்டுகிறார். இருப்பினும், எதிர்காலத்தில் நீர்மட்டம் மிகவும் குறைந்த மட்டத்திற்குச் சரிந்து, நீர்ப்பாசனத் திணைக்களம் அல்லது மகாவலி அதிகாரசபைக்குக் கட்டுப்பாடுகளை விதிக்க நேரிட்டால் மட்டுமே, அந்த நேரத்தில் ஏற்படும் சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு நீர் விநியோகத்தைக் கட்டுப்படுத்துவது போன்ற எதிர்கால நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியிருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். வளிமண்டலவியல் திணைக்களத்தின்…
மலையக வரலாற்றின் தனியான தோர் அத்தியாயம் தவசி அய்யாத்துரை- முன்னாள் எம்பி திலகர் இரங்கல் தோட்டத் தொழிலாளியாக வேலை செய்து தொழிற்சங்க, அரசியல், இலக்கிய தளத்தில் மேலெழுந்து வந்த தொழிற்சங்க அரசியல்வாதியான தவசி அய்யாத்துரை, மாத்தளை ரோகிணி’ எனும் பெயரில் எழுதியுள்ள மலையகத்தில் உரிமைப் போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகள் குறித்த ஆய்வுப் பதிவு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இவரது இந்த பணி மலையக வரலாற்றின் தனியான அத்தியாயமாகும். அதற்காகவே அவரது பெயர் வரலாற்றில் நிலைபெறும். அன்னாருக்கு அரங்கத்தின் சார்பிலும் தனிப்பட்ட முறையிலும் எனது ஆழ்ந்த அஞ்சலிகளைப் பதிவு செய்கிறேன் என மலையக அரசியல் அரங்கத்தின் செயல்திபரும் முன்னாள் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜா தெரிவித்துள்ளார். முன்னாள் தோழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மத்திய மாகாண சபை உறுப்பினரும் எழுத்தாளருமான தவசி அய்யாத்துரை யின் மறைவினை அடுத்து விடுத்திருக்கும் இரங்கல் செய்தியிலேயே திலகர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். குறித்த இரங்கல்…