Author: Thana

எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் புதிய தலைவரும் உறுப்பினர்களும் நியமனம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் புதிய தலைவராகவும் உறுப்பினராகவும் எம். கே. சமன் ஸ்ரீ ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். அதன் ஏனைய உறுப்பினர்களாக எம். பி. ரோஹண புஷ்பகுமார மற்றும் கே. தவலிங்கம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான நியமனக் கடிதங்கள் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து இன்று (24) பிற்பகல் அவர்களிடம் கையளிக்கப்பட்டன. எல்லை நிர்ணய ஆணைக்குழு உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறைவடைந்தமையால் ஏற்பட்ட வெற்றிடங்களுக்காகவே இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி ஊடகப் பிரிவு 2026-07-24

Read More

கண்டி எசல பெரஹரா ஏற்பாடுகள் குறித்த கலந்துரையாடல் வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி எசல பெரஹரா – 2026 ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (24) முற்பகல் நடைபெற்றது. வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி எசல பெரஹராவை விமர்சையாக நடத்துவதற்கு அரசாங்கத்தின் பங்களிப்பு மற்றும் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வது குறித்தும் அதற்கான தயார்நிலை மற்றும் பெரஹரா ஏற்பாடுகளின் தற்போதைய முன்னேற்றம் குறித்தும் இங்கு விரிவாக ஆராயப்பட்டது. பெரஹராவை வெற்றிகரமாக நடத்துவதற்கு அனுசரணை வழங்கும் அனைத்து அரச நிறுவனங்கள் மற்றும் நிதி அனுசரணை வழங்கும் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் வழங்கும் பங்களிப்புகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. பெரஹராவைக் காண்பதற்காக வருகை தரும் பக்தர்களுக்குத் தேவையான நீர், மின்சாரம், சுகாதார வசதிகள், போக்குவரத்து உள்ளிட்ட வசதிகளை வழங்குவது குறித்தும், பெரஹராவிற்கு யானைகளைச் பெற்றுக்கொள்வது குறித்தும் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது. கண்டி எசல பெரஹராவை…

Read More

வெளிநாட்டில் தொழில்புரியும் இலங்கையர்கள் தமது சேவைக்காலம் முடிவடைந்து மீண்டும் நாட்டிற்குத் திரும்பிய பின்னர், அவர்களின் எதிர்கால முன்னேற்றம் மற்றும் முதலீடுகளுக்காக, செயற்திட்டச் சேவைகளுடன் கூடிய பயன்படுத்தப்படாத காணிகளை வழங்குவதற்கான வேலைத்திட்டம் ஒன்றை தயாரிக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சம்பந்தப்பட்ட துறையினருக்கு அறிவுறுத்தினார். ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (24) பிற்பகல் இடம்பெற்ற, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சுக்கு 2026ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடுகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் 2027ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் குறித்த கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார். பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் கீழ் உள்ள பெருந்தோட்டப் பிரிவு, சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரிவு, அரச பெருந்தோட்டக் கம்பனிகளுக்கு உரிய நிறுவனங்கள் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் 2027ஆம் ஆண்டிற்கான திட்டங்கள், அத்துடன் நிதி…

Read More

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்காரவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை 116 மேலதிக வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது. இந்த பிரேரணைக்கு எதிராக 152 வாக்குகளும், ஆதரவாக 36 வாக்குகளும் வழங்கப்பட்டன. அண்மையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவத்தின் போது, கைதிகள் மற்றும் அதிகாரிகளின் பாதுகாப்பு தொடர்பான தனது பொறுப்பையும் பொறுப்புக்கூறலையும் நிறைவேற்ற அமைச்சர் தவறியதன் காரணமாக, அவருக்கு எதிராக எதிர்க்கட்சியினரால் நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

Read More

*சைபர் பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் ஆளுகை குறித்த தேசிய சட்ட மாநாடு ஆகஸ்ட் 1-இல் கொழும்பில்!* *கொழும்பு:* தகவல் தொடர்பு தொழில்நுட்ப சட்ட மாநாடு 2026 தொடர்பான ஊடக சந்திப்பு நேற்றைய தினம் மாலை கொழும்பில் நடைபெற்றது. இதில் உரையாற்றிய இலங்கை தகவல் தொடர்பு தொழில்நுட்ப சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கலாநிதி சுனில் அபேரத்ன, இம்மாநாடு வரும் ஆகஸ்ட் மாதம் 1-ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பு ‘சினமன் லைஃப்’ ஹோட்டலில் காலை 8:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை நடைபெறவுள்ளதாகத் தெரிவித்தார். இலங்கை தகவல் தொடர்பு தொழில்நுட்ப சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த மாநாட்டில் முன்னணி நீதிபதிகள், சட்ட வல்லுநர்கள், சட்டவேதியர்கள், அரசு பிரதிநிதிகள் மற்றும் தகவல் தொடர்பு துறை நிபுணர்கள் ஒரே மேடையில் ஒன்று கூடி டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கான சட்டக் கட்டமைப்பு மற்றும் அதை வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கவுள்ளனர். …

Read More

*ஆசிரியையினால் தாக்கப்பட்ட மாணவி – மனநிலை பாதிப்பு; கற்றல் செயற்பாடுகள் பாதிப்பு – கொழும்பில் சம்பவம்* ஆசிரியையினால் தாக்கப்பட்ட மாணவி ஒருவர் நோய்வாய்ப்பட்டு, மனநல சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். ஆசிரியர் சமூகம் பழிவாங்கும் செயல்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கொழும்பிலுள்ள தமிழ் மகளிர் பாடசாலையில் கல்வி கற்கும் தரம் 05 மாணவிகள், வகுப்பாசிரியையினால் அடுத்தடுத்த இரு தினங்களில் பிரம்பால் தழும்பு வருமளவுக்கு தாக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒரு மாணவி கடுமையான சுகயீனத்துக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்துள்ளார். சிகிச்சைகள் பயனளிக்காத நிலையில், வைத்தியர்களின் மேலதிக பரிசோதனைகளில், மாணவிக்கு ஏற்பட்டுள்ள நோய் பயம் மற்றும் மனஅழுத்தம் காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என பெற்றோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பின்னர் மனநல வைத்திய நிபுணரின் பரிசோதனையிலும் அது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, குறித்த பாடசாலையின் அதிபரிடம் விபரத்தை தெரிவித்து வகுப்பு மாற்றம் கோரப்பட்டபோது, அவ்வாறு மாற்றம் செய்து வழங்கப்பட்டுள்ளது. ஒரு நாள் புதிய வகுப்புக்குச் சென்ற…

Read More

போசாக்கு மாதத்தினை முன்னிட்டு சிறுவர்களின் மந்தபோஷணை மற்றும் பட்டினியை ஒழிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு பேரணி நிகழ்வு இன்று தலவாக்கலையில் சிறப்பாக இடம்பெற்றது. வேர்ல்ட் விஷன் (World Vision) நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்பேரணி, தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்திலிருந்து ஆரம்பமாகி இலங்கை வங்கி கிளை வரை சென்றடைந்தது. இந்நிகழ்வில் கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் இராஜமணி பிரசாந்த், தலவாக்கலை லிந்துலை நகர சபையின் தலைவர், அக்கரப்பத்தனை பிரதேச சபையின் தலைவர் ஆகியோருடன் முன்னாள் உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். மேலும், லிந்துலை பொது சுகாதார வைத்திய அதிகாரி, பொது சுகாதார பரிசோதகர்கள், குடும்ப நல உத்தியோகத்தர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் எனப் பெருந்திரளானோர் இதில் பங்கேற்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Read More

வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல்லியவத்த பகுதியில் உள்ள விழா மண்டபம் ஒன்றில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவின் போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நபரொருவர் படுகாயமடைந்து, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வியாழக்கிழமை (23) இரவு 9:45 மணியளவில் எலக்கட வீதியில் அமைந்துள்ள ‘Villa by the edge’ விழா மண்டபத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இத்துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் ‘குடு ரொஷான்’ எனப்படும் துப்பஹி ஆரச்சிகே பிரசாத் ருவானின் உதவியாளரான (சீடன்) வநாத முல்லே சுமேதா (39 வயது) என அறியப்படும் எச். மகேஷ் மதுசங்க என்பவராவார். துப்பஹி ஆரச்சிகே ரந்தவ் (45 வயது) என்பவரது மகளின் பிறந்தநாள் விழாவிலேயே இத்துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இவர் ‘குடு ரொஷான்’ என்பவரின் சகோதரராவார். பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டிருந்த ‘குடு ரொஷான்’ என்பவரை இலக்கு வைத்தே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார்…

Read More

தற்காலிகமாக விதிக்கப்பட்டிருந்த 10% உலகளாவிய வரி காலாவதியாகும் நிலையில், இலங்கை உட்பட 60 வர்த்தக கூட்டாளி நாடுகளின் பொருட்கள் மீது அமெரிக்கா 10% மற்றும் 12.5% புதிய வரிகளை விதிக்கவுள்ளதாக ட்ரம்ப் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகத்தினால் (USTR) வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பானது, அமெரிக்காவின் முன்னணி வர்த்தக நாடுகளை இலக்கு வைத்து அமுல்படுத்தப்பட்டுள்ளது. கட்டாய உழைப்புத் தடைச் சட்டங்களைச் சரியாக அமுல்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய: 10% வரி விதிக்கப்படும் நாடுகள்: இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், கனடா, மெக்சிகோ, மலேசியா, இந்தோனேசியா, கம்போடியா, ஆர்ஜென்டினா, பிரித்தானியா, ஈக்வடோர், குவாத்தமாலா, ஒண்டுராஸ், ஜோர்தான், டிரினிடாட் மற்றும் டொபாகோ. 12.5% வரி விதிக்கப்படும் நாடுகள்: சீனா உட்பட 38 நாடுகளின் பொருட்களுக்கு 12.5% வரி விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஐரோப்பிய ஒன்றியம் (EU) மற்றும் தாய்வான் போன்ற பிராந்தியங்களுக்கும் அவற்றுக்குரிய விசேட நிபந்தனைகளின்…

Read More

தொழில் திணைக்களத்தின் கணினி கட்டமைப்பில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், எதிர்வரும் 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் ஊழியர் சேமலாப நிதிய (EPF) சேவைகள் இடைநிறுத்தப்படவுள்ளதாக அத்திணைக்களம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக தொழில் திணைக்களம் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: குறித்த இரு நாட்களிலும் தொழில் திணைக்களத்தின் பிரதான அலுவலகம், அனைத்து வலய, மாவட்ட மற்றும் உப தொழில் அலுவலகங்களில் இயங்கும்: ஊழியர் சேமலாப நிதிய (EPF) தரவுக் கட்டமைப்பு,டிஜிட்டல் EPF கட்டமைப்பு ஆகியவற்றுடன் தொடர்புடைய அனைத்துப் பொது மக்கள் சேவைகளும் முன்னெடுக்கப்படமாட்டாது. இதற்கமைய, கொடுப்பனவுகளை வழங்குதல் மற்றும் புதிய பதிவுகளை மேற்கொள்வது உள்ளிட்ட சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக இடைநிறுத்தப்படும். நேர ஒதுக்கீடு செய்தவர்களுக்கான மாற்று ஏற்பாடு குறித்த இரண்டு நாட்களிலும் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காக ஏற்கனவே முன்கூட்டியே நேரத்தை ஒதுக்கியுள்ள (Appoinments) வாடிக்கையாளர்கள், எதிர்வரும் ஒரு மாத காலப்பகுதிக்குள் தமக்குச் சௌகரியமான எந்தவொரு அலுவலக நாளிலும் உரிய தொழில் அலுவலகத்திற்குச்…

Read More