Author: Thana
நுவரெலியாவில் மக்களுக்கு சேவையாற்றும் சமாதான நீதவான்கள் இன்று பண முதலைகளாக மாறியுள்ளனர் – பொது மக்கள் குற்றச்சாட்டு,
நுவரெலியாவில் மக்களுக்கு சேவையாற்றும் சமாதான நீதவான்கள் இன்று பண முதலைகளாக மாறியுள்ளனர் – பொது மக்கள் குற்றச்சாட்டு, நுவரெலியா பிரதான நகரில் சமாதான நீதவான்கள் சிலர் “சத்தியக் கடதாசி மற்றும் ஆவணங்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக வரும் பொதுமக்களிடம் தமது கையொப்பத்தையும் முகவரியையும் குறிப்பிட்டு இலட்சிணையையும் பதித்து பணம் சம்பாதிக்கும் மோசடியில் ஈடுபடுவது அம்பலமாகியுள்ளது. “மக்களுக்கு சேவையாற்றும் நோக்குடன் சமூகத்திலுள்ள கௌரவமான பிரஜைகளுக்கு வழங்கப்பட வேண்டிய சமாதான நீதவான் பதவிகள் இன்று அரசியல் மயப்படுத்தப்பட்டு வருகிறது தகுதியற்றவர்கள் பலர் இப்பதவிக்கு நியமிக்கப்பட்டுவருகின்றனர். மேலும் பொதுமக்களால் சமர்ப்பிக்கப்படும் பிரமாணப்பத்திரங்கள்மற்றும் ஆவணங்கள் உட்பட பிறசான்றிதழ்களை சான்றளித்தல் மற்றும் அங்கீகரித்தல் ஊடாக பொதுமக்களுக்கு இலவசமான சேவைகளையும் பணிகளையும் வழங்கும் நோக்குடன் கௌரவ நீதி அமைச்சரால் சமாதான நீதவான்கள் நியமிக்கப்படுகிறது. தேசிய நலனிற்கும் சமூக மேம்பாட்டிற்கும் பங்காற்றியமையையிட்டு நற்பிரஜையினருக்கு மாத்திரம் வழங்கப்பட வேண்டிய இவ்வுயர் கௌரவப் பதவி இன்று பிரதேச அரசியல்வாதிகளதும் கட்சி…
திருமுறைநெறிச் செல்வர்ப் பட்டய கற்கை நெறி விண்ணப்பம் கோரல்-திருக்கயிலாயப் பரம்பரை, மெய்க்கண்ட சந்தானம்
**திருமுறைநெறிச் செல்வர்ப் பட்டய கற்கை நெறி விண்ணப்பம் கோரல்-திருக்கயிலாயப் பரம்பரை, மெய்க்கண்ட சந்தானம் திருவாவடுதுறை ஆதீனம் 24 ஆவது குருமகா சந்நிதானம் சீர்வளர்சீர் அம்பலவாண தேசிக பரமாசரிய சுவாமிகளின் அருளாணையின் வண்ணம் இலங்கையில் திருவாவடுதுறை ஆதீனம்,சைவத்திருமுறை நேர்முகப் பயிற்சி மையம் நிறுவி, இலங்கைக்கான இணைப்பாளராக சைவப்புலவர் இரா. ஜீவன்பிரசான் அவர்கள் நியமிக்கப் பட்டு “திருமுறைநெறிச் செல்வர் பட்டய வகுப்புகள் ” நடைபெற்றுவருகின்றன. இவ்வகுப்புகளில் இணைத்து கற்க விரும்புவர்கள் 0764725386 என்ற எண்ணுக்கு அழைத்து அல்லது புலனம் மூலம் (வாட்சாப்)குறுஞ் செய்தி அனுப்பி விபரம் அறிந்து விண்ணப்பிக்கலாம்.
ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்கள் எவரும் தங்கியிருக்கவில்லை என்பதுடன், அது முற்றிலும் பொய்யான செய்தியாகும்.
ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்கள் தங்கியுள்ளதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தி தொடர்பில்… ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்கள் எவரும் தங்கியிருக்கவில்லை என்பதுடன், அது முற்றிலும் பொய்யான செய்தியாகும். ‘2025 ஆம் ஆண்டில், நாடு முழுவதிலும் உள்ள ஜனாதிபதி மாளிகைகளில் பல்வேறு நபர்கள் 3,089 பேர் தங்கியிருந்தனர்’ என்ற தலைப்பில் வெளியாகியுள்ள செய்தி முற்றிலும் பொய்யானதாகும். 2025 ஆம் ஆண்டில் ஜனாதிபதி மாளிகை வளாகங்களில் உள்ள ஏனைய கட்டிடங்களில், பாதுகாப்புப் பிரிவினர், ஊடகவியலாளர்கள் மற்றும் ஏனைய பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகள் தமது உத்தியோகபூர்வ தேவைகளுக்காகப் பல்வேறு சந்தர்ப்பங்களில் தங்கியிருந்துள்ளனர். இருப்பினும், இந்த அதிகாரிகளில் எவரும் ஜனாதிபதி மாளிகைகளை தங்குவதற்காக பயன்படுத்தவில்லை. ஜனாதிபதி ஊடகப் பிரிவு 2026-07-25
பலாங்கொடை, மஹவலதன்ன பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுமி ஒருவர், மஹவலதன்ன கஹவத்த பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பலாங்கொடை பொலிஸ் நிலையத்திற்குக் கிடைத்த அவசரத் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார், சிறுமியின் சடலத்தைக் கைப்பற்றி விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கடந்த வியாழக்கிழமை காலையில் குறித்த சிறுமி வீட்டை விட்டு திடீரெனக் காணாமல் போயுள்ளார். இது குறித்து சிறுமியின் தந்தையால் பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் உடனடியாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் தீவிர தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்த நிலையிலேயே, சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சிறுமியின் உயிரிழப்பிற்கான காரணம் இதுவரை தெளிவாகத் தெரியவரவில்லை. இது கொலையா? தற்கொலையா?அல்லது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி ஏற்பட்ட மரணமா?என்ற பல்வேறு கோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முடக்கிவிட்டுள்ளனர். உடற்கூற்றுப் பரிசோதனைக்காகச் சடலம் பலாங்கொடை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேதப் பரிசோதனை அறிக்கையின் பின்னரே மரணத்திற்கான உண்மைச் காரணம் தெரியவரும்…
சுமார் 109.9 மில்லியன் ரூபாய் (110 மில்லியன்) சந்தைப் பெறுமதியுடைய கொக்கைன் போதைப்பொருளை நுட்பமான முறையில் கடத்தி வர முயன்ற 79 வயதான ஸ்பெயின் நாட்டுப் பிரஜை ஒருவரை இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து அதிரடியாகக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் ஒரு விவசாயப் பொறியியலாளர் (Agricultural Engineer) என அடையாளம் காணப்பட்டுள்ளார். சந்தேகநபர் கடந்த 22ஆம் திகதி சியரா லியோனிலிருந்து (Sierra Leone), அடிஸ் அபாபா மற்றும் தோஹா வழியாகக் கட்டார் எயார்வேஸ் (QR654) விமானம் மூலம் இலங்கை வந்தடைந்துள்ளார். இவர் கைவசம் வைத்திருந்த பயணப் பையைச் சுங்க அதிகாரிகள் ஆரம்பத்தில் பரிசோதித்தபோது சந்தேகத்திற்குரிய பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை.எனினும், அவரது மற்றொரு பயணப் பை அதே விமானத்தில் வராததால், அவர் வழமையான வருகைப் பதிவை முடித்துக்கொண்டு விமான நிலையத்திலிருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டார். பின்னர் இலங்கைக்கு வந்தடைந்த அந்தப் பையைப் பொறுப்பேற்பதற்காக, சந்தேகநபர் நேற்று (24)…
வத்தளையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் இரு இலங்கை இளைஞர்கள், சட்டவிரோதமான முறையில் படகு மூலம் இந்திய எல்லைக்குள் ஊடுருவியபோது தனுஷ்கோடியில் வைத்து இந்தியக் கடலோரக் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கம்பஹா மற்றும் வத்தளைப் பகுதிகளைச் சேர்ந்த 30 மற்றும் 31 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் ஆவர். கடந்த வியாழக்கிழமை வத்தளைப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்குப் பிறகு, குற்றவாளிகள் தப்பிச் செல்வதைத் தடுக்க இலங்கை காவல்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தது. இந்நிலையில், இலங்கை அதிகாரிகள் வழங்கிய தகவலின் அடிப்படையிலும் இந்தியக் கடலோரக் காவல்படையின் தீவிர ரோந்துப் பணியின் போதும், தனுஷ்கோடி கடற்கரைப் பகுதி வழியே ஊடுருவிய இவ்விருவரும் பிடிபட்டனர். கைது செய்யப்பட்ட இருவர் மீதும் ஏற்கனவே இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பான மூன்று வழக்குகள் நிலுவையில் உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் உடனடியாக…
நீதித்துறை சுயாதீனத்தில் அரசின் மறைமுகத் தலையீடு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூஃப் ஹக்கீம் பகிரங்கக் குற்றச்சாட்டு.
நீதித்துறை சுயாதீனத்தில் அரசின் மறைமுகத் தலையீடு : பாராளுமன்றில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூஃப் ஹக்கீம் பகிரங்கக் குற்றச்சாட்டு. நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவுக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்தில் காரசாரமான உரை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவுக்கெதிராக எதிர்க்கட்சிகளினால் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் இன்று (24) நடைபெற்றது. இவ்விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூஃப் ஹக்கீம், அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயற்பாடுகள், நீதித்துறை சுயாதீனத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படும் மறைமுக நகர்வுகள் மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் மீதான அவதூறுகள் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அமைச்சரின் மௌனமும் கடமைத்தவறுதலும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிரான இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்க்கட்சிகள் ஆதரிப்பதற்கான…
கம்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட போத்தலாப்பிட்டிய பாத்திமா காடன் பகுதியில் அருகில் உள்ள மகாவலி ஆற்றில் இருந்து ஆணின் சடலம் மீட்க்கப்பட்டது. திடீரென அந்த பகுதியில் உள்ள மக்கள் சடலம் ஒன்று கிடப்பதை கண்டு கம்பளை பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து கம்பளை பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்தனர், சுமார் 48 வயதான நாவலப்பிட்டி சேலம்பிரிட்ஜ் பிரதேசத்தில் வசித்து வந்த ஆணின் சடலம் திடீரென கம்பளை மகாவலி ஆற்றில் மீட்க்கப்பட்டது. சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக கம்பளை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர், க.யோகா
மலையக மக்களின் பிரச்சனைகளுக்கு ஜனாதிபதியின் விசேட கவனம் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் தற்போதைய நிலைமை, எதிர்கால திட்டமிடல், நிதி ஒதுக்கீடு, இதுவரை முன்னடுக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள், அடுத்த வருடத்துக்கான வேலைத்திட்டங்கள் குறித்த கலந்துரையாடல் இன்று (24.07.2026) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது, மலையக மக்கள் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீ்ப் அவர்களால் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுச் செல்லப்பட்டபோது, அனைத்தையும் செவிமடுத்த ஜனாதிபதியிடமிருந்து சாதமான பதில் கிடைத்தது. இந்தக் கலந்துரையாடலில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்தியாரத்ன, பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் மற்றும் செயலாளர்கள், பணிப்பாளர்கள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். இதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி, “ஏனைய மக்களுடன் மலையக மக்களை ஒப்பிட்டு பார்க்க முடியாது.. இவர்களுக்கு அதிகமாக பிரச்சினைகள் காணப்படுகின்றன. இம்மக்களை…
எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் புதிய தலைவரும் உறுப்பினர்களும் நியமனம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் புதிய தலைவராகவும் உறுப்பினராகவும் எம். கே. சமன் ஸ்ரீ ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். அதன் ஏனைய உறுப்பினர்களாக எம். பி. ரோஹண புஷ்பகுமார மற்றும் கே. தவலிங்கம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான நியமனக் கடிதங்கள் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து இன்று (24) பிற்பகல் அவர்களிடம் கையளிக்கப்பட்டன. எல்லை நிர்ணய ஆணைக்குழு உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறைவடைந்தமையால் ஏற்பட்ட வெற்றிடங்களுக்காகவே இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி ஊடகப் பிரிவு 2026-07-24