Browsing: இலங்கை
மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்…
நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்த விவசாய அமைச்சு பல்வேறு வேலைத் திட்டங்களைச் செயற்படுத்துவதாகவும், தற்போதும் 10 பேர்ச்சஸ்ஸூக்கும் அதிகமான வீட்டுத் தோட்டங்களுக்கு 2 இலட்சம் ரூபா ஒதுக்கீடுகளை வழங்கத்…
புதிதாக நியமனம் பெற்றிருக்கும் இலங்கைக்கான தூதுவர் மற்றும் உயர்ஸ்தானிகரின் நற்சான்றுப் பத்திரங்கள் ஜனாதிபதியிடம் கையளிப்பு
இலங்கைக்கு புதிதாக நியனம் பெற்று வந்திருக்கும் தூதுவர் ஒருவரும் உயர்ஸ்தானிகரும் கொழும்பு கோட்டை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் (11) நற்சான்றுப் பத்திரங்களைக் கையளித்தனர். தாய்லாந்தின்…
வடக்கு மாகாண பிரதமச் செயலாளராக எல். இளங்கோன் மற்றும் வடமேல் மாகாண பிரதமச் செயலாளராக தீபிகா கே குணரத்ன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த…
அரசிற்கு சொந்தமானதும் முழுமையான சுய இலாபமீட்டும் நிறுவனமான வரையறுக்கப்பட்ட தேசிய வியாபார முகாமைத்துவ நிறுவனத்தினால் (NSBM ) கல்வி அமைச்சு, சுகாதார அமைச்சு மற்றும் இலங்கை மருத்துவ…
நாடளாவிய ரீதியில் 2000 கிராம உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான, போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்து, நேர்முகப்பரீட்சைக்கு தகுதிபெற்றுள்ள அனைத்து விண்ணப்பதாரர்களுக்குமான நேர்முகப்பரீட்சை, நாராஹேன்பிட்டியவில் அமந்துள்ள ‘நிலமெதுர’ வளாகத்தில் இன்று (13),…
காலாவதியான மருந்துகள் மக்களுக்கு வழங்கப்பட மாட்டாது என்று சுகாதார அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார். இன்றைய தினம் (13) உடல் சார்ந்த நோய் தினத்தை முன்னிட்டு…
இலங்கை கோள்மண்டலம் உலகளாவிய புரொஜெக்டர் பராமரிப்பு திருத்தப்பணிகளின் பின்னர் மக்கள் பார்வையிடுவதற்காக இன்று(13) முதல் மீள திறக்கப்படவுள்ளது. அதற்கிணங்க, செவ்வாய்க்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 10…
இலங்கை உடலியல் மருத்துவ நிறுவகத்தின் விசேட வேலைத்திட்டமாக இன்று அதாவது மார்ச் 13 ஆம் திகதி உடல் சார்ந்த நோய் தினத்தை முன்னிட்டு, சுகாதார அமைச்சர் டொக்டர்…
காலி, ஹொலுவாகொட “செரின் ரிவர் பார்க்” சுற்றுச்சூழல் பூங்கா இன்று (13) மாலை 5.00 மணிக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் பொதுமக்களிடம் கையளிக்கப்படவுள்ளது. செரின் ரிவர் பார்க் காலி நகரத்திலிருந்து வெகு தொலைவில் உள்ள ஹோலுவாகொடவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு கட்டத் தொடங்கிய இந்தப் பூங்கா, 14 ஏக்கர் பரப்பளவில் தரிசு நிலமாக உள்ளது. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழுள்ள நகர அபிவிருத்தி அதிகார சபையினால் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், பூங்காவின் நிர்மாணப்பணிகள் இலங்கை காணி மீட்புக் கூட்டுத்தாபனத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மதிப்பீடு 440 மில்லியன் ரூபாவாகும். ஹொலுவகொட செரின் ரிவர் பார்க் ஏரி, நடைபாதைகள், சுரங்கப்பாதைகள், சிறுவர் பூங்காக்கள், கடைத் தொகுதிகள், சுற்றுச்சூழல் அமைப்புகள் போன்றவற்றைக் கொண்டுள்ளதோடு சூரிய சக்தியால் இயங்குகிறது. விவசாயப் பயிர்கள் மற்றும் உள்ளூர் மக்களின் பிற பொருட்களை மக்களுக்கு விற்பனை செய்யும் திட்டமும் இதன் மூலம் செயல்படுத்தப்படுகிறது. எதிர்காலத்தில் இந்த பூங்காவில் இருந்து வக்வெல்ல, வட்டரேக மற்றும் காலி வரை சுற்றுலாத்துறைக்கு முன்னுரிமை கொடுத்து படகு சேவை நடத்தப்படும். அத்துடன், பல தசாப்தங்களாக ஹொலுவாகொட மற்றும் ஓபாத பிரதேச மக்கள் எதிர்நோக்கும் வெள்ள நிலைமையை இந்த பூங்காவின் மூலம் கட்டுப்படுத்த வேண்டியுள்ளது. இந்நிகழ்வில் சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரன உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர். முனீரா அபூபக்கர்