அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான 4வது ஒருநாள் சர்வதேச போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 164 ஓட்டங்காளால் வெற்றிபெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
அதன்படி, முதலில் துடுப்பாடிய தென்னாப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில், 5 விக்கட்டுக்களை இழந்து, 416 ஓட்டங்களை பெற்றது.
துடுப்பாட்டத்தில், தென்னாப்பிரிக்க அணி சார்பாக ஹெயின்ரிக் க்ளாசன் 174 ஓட்டங்களையும், டேவிட் மில்லர் 82 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பின்னர் 416 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலளித்தாடிய அவுஸ்திரேலிய அணி 34.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து தோல்வியடைந்தது.
இதனையடுத்து 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் குறித்த இரண்டு அணிகளும் தலா 2 வெற்றிகளை பெற்று சமநிலையில், உள்ளமை குறிப்பிடத்தக்கது.
