2023 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் நேற்று இடம்பெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணியை 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி வெற்றிப் பெற்றுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் பாகிஸ்தான் அணி வெற்றிப் பெற்று முதலில் துடுப்பெடுத்தாடியது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 282 ஓட்டங்களை பெற்றது.
பாகிஸ்தான் அணி சார்பில் துடுப்பாட்டத்தில் பாபர் அசாம் அதிகபட்சமாக 74 ஓட்டங்களை பெற்றதுடன் அப்துல்ஹா ஷாபிக் 58 ஓட்டங்களை பெற்றார்.
பந்து வீச்சில் ஆப்கானிஸ்தான் அணி சார்பில் நூர் அஹமட் 3 விக்கெட்டுக்களையும், நவீன் உல் ஹக் 2 விக்கெட்டுக்களை மொஹமட் நபி , அசமட்டுல்லா ஒமராசி தலா 1 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினார்.
இதன்படி 283 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 49 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இழக்கை அடைந்தது.
ஆப்கானிஸ்தான் அணி சார்பில் ரம்மனுல்லா குருபாஸ் 65 ஓட்டங்களையும்,இப்ராஹிம் சர்ட்டன் 87 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
ஆட்டமிழக்காமல் துடுப்பாடிய ரஹமத் ஷா 77 ஓட்டங்களையும், அணித்தலைவர் ஹஸ்மதுல்லா ஷாஹித் 48 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
இந்த வெற்றியை தொடர்ந்து புள்ளிப் பட்டியலில் ஆப்கானிஸ்தான் அணி இரண்டு வெற்றிகளுடன் 6 ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
