உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது.
பெங்களூரில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அந்த அணி 33.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 156 ஓட்டங்களை பெற்றது.
துடுப்பாட்டத்தில் இங்கிலாந்து அணி சார்பில்பென் ஸ்டொக்ஸ் அதிகபட்சமாக 43 ஓட்டங்களையும் ஜொனி பெரிஸ்டா 30 ஓட்டங்களையும்டேவிட் மலன் 28 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் லஹிருகுமார 3 விக்கெட்டுக்களையும் கசுன் ராஜித மற்றும் அணியில் புதிதாக இணைந்த அஞ்சலோ மெத்தியூஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
பின்னர் 157 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 25.4 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் பெத்தும் நிஷங்க ஆட்டமிக்காமல் 77 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றதுடன்சதீர சம்ரவிக்ரம ஆட்டமிழக்காமல் 65 ஓட்டங்களை பெற்றார்.
