யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் மகள் அமுருதா சுரேன்குமார் நேற்று (22.12.2023) அறிவிக்கப்பட்ட இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் (19 வயதுக்கு உட்பட்டோருக்கான பெண்கள் அணியில்) இடம் பிடித்துள்ளார்.
அமுருதா யாழ் பரியோவான் கல்லூரியின் முன்னாள் கிரிக்கட் வீரர் சுரேன்குமாரின் மகளாவார். வடக்கின் பெருஞ்சமரில்(பரியோவான் எதிர் மத்திய கல்லூரி) அதிக தனி நபர் ஓட்டங்கள் அடித்த சாதனை அவர்வசம் தான் இன்னமும் இருக்கிறது. (145)
2024 மார்ச்சில் இடம்பெறவுள்ள இலங்கைக்கான இங்கிலாந்து மகளிர் அணியின் சுற்றுப்பயணத்தில் அமுருதாவும் இடம்பெற்றுள்ளார்.
வாழ்த்துகள்
