Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

தித்த்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை – நவம்பர் 29ஆம் திகதி நுவரெலியாவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

November 24, 2026

மரக்கறிகளின் விலை பாரியளவில் அதிகரிப்பு: தேசிக்காய் கிலோ 2,000 ரூபாயாக உயர்வு!

November 23, 2026

மலையக அரசியல் அரங்கம் 5-வது ஆண்டு நிறைவு விழாவும், 3-வது போராளர் மாநாடும் பதுளையில்

November 23, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » குறைந்த வருமானம் பெறும் விவசாயக் குடும்பங்களுக்கு யூரியா
இலங்கை

குறைந்த வருமானம் பெறும் விவசாயக் குடும்பங்களுக்கு யூரியா

ThanaBy ThanaJune 16, 2022Updated:January 9, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

குறைந்த வருமானம் பெறும் விவசாயக் குடும்பங்களுக்கு பெரும்போகத்திற்காக 365,000 யூரியா மூட்டைகள் இலவசமாக வழங்க உலக உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) இணங்கியுள்ளது. விவசாய சமூகத்தின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக தேவையான உதவிகளை வழங்கும் வகையில் எதிர்வரும் காலங்களில் பல விசேட திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு உலக உணவு மற்றும் விவசாய அமைப்பு இணக்கம் தெரிவித்துள்ளதாக விவசாய மற்றும் வனவிலங்குகள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். உலக உணவு மற்றும் விவசாய அமைப்பு (WFO) இலங்கை முகவர்களுடனான கலந்துரையாடலின்போது 2022/23 பெரும்போக நெல் விளைச்சலுக்காக குறைந்த வருமானம் பெறும் விவசாய குடும்பங்களுக்கு 365,000 யூரியா உறைகளை இலவசமாக வழங்க இணங்கியுள்ளது. ஒரு குடும்பத்திற்கு ஒரு உறை வீதம் நாடளாவிய ரீதியில் உள்ள குறைந்த வருமானம் பெறும் 365,000 விவசாய குடும்பங்களுக்கு இதனை விநியோகிக்க தீர்மானித்துள்ளதாகவும் விவசாய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், அடுத்த மாதம் பருவத்திற்குள் 14,000 குறைந்த வருமானம் பெறும் பெண் குடும்பங்களுக்கு தலா ரூ.18,000 வீதம் பயறு பயிர்ச்செய்கைக்கு நிதியுதவி வழங்க உலக உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) ஒப்புக்கொண்டுள்ளது. உணவு நெருக்கடியை அடுத்து, நாட்டு மக்களுக்கு ஊட்டச்சத்துமிக்க உணவுப் பயிர்களை பயிரிடுவதற்கான முயற்சிகளில் ஒன்றாக பயறு பயிர்ச்செய்கையை ஊக்குவிக்க வேண்டும் என்று இவ் அமைப்பு (WFO) இலங்கை தொடர்பான தனது அறிக்கையில் கூறியுள்ளது. இந்த உதவித்தொகை நிறுவனத்திற்கு திருப்பிச் செலுத்தப்பட மாட்டாது, மேலும் பெண்களை தலைமையாகக் கொண்ட குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கில் இத் திட்டம் செயல்படுத்தப்படும்.

இதேவேளை, தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள திரிபோஷ உற்பத்தியை மீள ஆரம்பிப்பதற்கு தேவையான பயறு, சோளம், சோயா போன்ற பயிர்ச் செய்கைகளை எதிர்வரும் பருவத்தில் நாட்டிலே பயிரிடுவதற்கு முன்னுரிமை வழங்க தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். news.lk

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    தேச நலன்களை மையமாகக் கொண்ட முனைப்பு மிக்க வெளிநாட்டுக் கொள்கையொன்று இலங்கைக்கு அவசியம்

    November 23, 2026

    கொழும்பு – கண்டி பிரதான வீதி கீழ் கடுகன்னாவ பகுதியில் இன்று இரவு 7 மணித்தியாலங்களுக்கு மூடப்படும்

    November 23, 2026

    ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் தாய்லாந்து பிரதிப் பிரதமர் சந்திப்பு:

    November 23, 2026

    போதைப்பொருள் அற்ற சமூகத்தை உருவாக்க மீனவ மக்களின் ஒத்துழைப்பு அவசியம்

    November 22, 2026
    Editors Picks

    தித்த்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை – நவம்பர் 29ஆம் திகதி நுவரெலியாவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

    November 24, 2026

    மரக்கறிகளின் விலை பாரியளவில் அதிகரிப்பு: தேசிக்காய் கிலோ 2,000 ரூபாயாக உயர்வு!

    November 23, 2026

    மலையக அரசியல் அரங்கம் 5-வது ஆண்டு நிறைவு விழாவும், 3-வது போராளர் மாநாடும் பதுளையில்

    November 23, 2026

    ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் வாகன விபத்து

    November 23, 2026

    தித்த்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை – நவம்பர் 29ஆம் திகதி நுவரெலியாவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

    November 24, 2026

    மரக்கறிகளின் விலை பாரியளவில் அதிகரிப்பு: தேசிக்காய் கிலோ 2,000 ரூபாயாக உயர்வு!

    November 23, 2026

    மலையக அரசியல் அரங்கம் 5-வது ஆண்டு நிறைவு விழாவும், 3-வது போராளர் மாநாடும் பதுளையில்

    November 23, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.