ஐபிஎல் 2024 சீசனின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
Chennai Super Kings அணியினர் மற்றும் Royal Challengers Bangalore அணியினர் மோதினர்
நாணய சுழற்சியை வென்ற Royal Challengers Bangalore அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய ஆர்சிபி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்பிற்கு 173 ஓட்டங்களை பெற்றது.
174 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் , 18.4 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
இதன்படி ஐபிஎல் 2024 சீசனின் முதல் வெற்றியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனதாக்கியது.
