கிழக்கு மாகாண சிலம்ப பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் சிரேஸ்ட மாணவர்களுக்கான நடுவர் பயிற்சி முகாம் திருகோணமலையில் 31/03/2024 அன்று சிறப்பாக நடைபெற்றது. குறித்த பயிற்சி நெறியினை இலங்கை சிலம்பம் சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்தது.
இதன் பயிற்றுவிப்பாளராக கொட்டகலையை சேர்ந்த ஆசான் கே .ஆர் திவாகரன் செயற்பட்டு இருந்தமை குறிப்பிடதக்கது. இவர் கடன்ஹா காலங்களில் பல்வேறு சர்வதேச சிலம்ப போட்டிகளில் நடுவராக கடமையாற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
