இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் 22 ஆவது போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.
சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று இடம்பெற்ற குறித்த போட்டியில், சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா க்னைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சென்னை அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.
இதன்படி இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கட்டுக்களை இழந்து 139 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
சென்னை அணி சார்பில் ரவீந்திர ஜடேஜா மற்றும் துஷார் தெஸ்பாண்டே ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தனர்.
140 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு களம் இறங்கிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 17.4 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 141 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.
சென்னை சுப்பர் கிங்ஸ் அணி சார்பில் அணித்தலைவர் ருத்ராஜ் கஜ்ரவால் அதிகபட்ச ஓட்டங்களான 67 ஓட்டங்களை பெற்றார்.இது சென்னை அணிக்கு மூன்றாவது வெற்றியாகும்.
