தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக வலய மட்ட கரப்பந்தாட்ட போட்டியில் முதலாமிடத்தைப்பெற்ற திம்புல்ல த.ம.வி பாடசாலை மாணவிகள்.
இன்றைய தினம் (01/07) நுவரெலியா சினிசிட்டா மைதானத்தில் நடைபெற்ற (18)வயதுக்குட்பட்ட வலய மட்ட கரப்பந்தாட்ட போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்று மத்திய மாகாண போட்டிக்கு தெளிவாகியுள்ளனர்.
மாணவிகளுக்கும் பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் மற்றும் பாடசாலையின் அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் பாடசாலை சமூகம் தெரிவித்துள்ளது.