Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

சவுதி மரண தண்டனையிலிருந்து முழுமையாக விடுக்கப்பட்ட சிவராசா அனோஜன் ஓரிரு வாரங்களில் நாடு திரும்புவார்

November 11, 2026

கடுகண்ணாவையில் மோட்டார் சைக்கிள் மீது சரிந்து விழுந்த பாறை: கண்டி – கொழும்பு பிரதான வீதி தற்காலிகமாக மூடல்!

November 10, 2026

அஸ்வெசும நிவாரணம்: மேல்முறையீடு மற்றும் ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க நாளை இறுதி நாள்!

November 10, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » தேர்தல் நடைபெறக்கூடாது என்ற எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை
இலங்கை

தேர்தல் நடைபெறக்கூடாது என்ற எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை

ThanaBy ThanaFebruary 14, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

தேர்தல் நடைபெறக்கூடாது என்ற எண்ணம்  சமகால அரசாங்கத்திற்கு இல்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு இன்று (14) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம் பெற்றது. அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் தினித் சிந்தக கருணாரத்னவும் இதில் கலந்துகொண்டார்.

இதன்போது ,உள்ளூராட்சி தேர்தல் குறித்து ஊடகவியலாளர் ஒருவர் அமைச்சரிடம் வினவிய போது ,அமைச்சர் பதிலளிக்கையில்,

“இதற்கு முன்னர் உள்நாட்டிலும் வெளிநாடுகளில் இருந்தும் கடன் பெற்றும், பணத்தை அச்சிட்டும் அரசாங்கங்கள் தேர்தல்களை நடாத்தி வந்தன. ஆனால்; தற்போது நாட்டில் நிலவும் நெருக்கடி நிலை காரணமாக கடனைத் திருப்பிச் செலுத்தாத காரணத்தினால் வெளிநாடுகளில் இருந்து கடன்களைப் பெற முடியாத நிலை காணப்படுகிறது. ஓரளவேனும் நெருக்கடியைக் குறைக்க சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொண்ட கலந்துரையாடலைத் தொடர்ந்து நாட்டின் கடனை மறுசீரமைக்க அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதனால், பணம் அச்சிடுதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது.

அத்துடன், திறைசேரி அன்றாடச் செலவுகளை ஈடுகட்ட பெரும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய நிலையில் நிதிப் பிரச்சினையை எதிர்நோக்கும் அதேவேளை, இந்த நாட்டின் ஒவ்வொரு துறையிலும் மேற்கொள்ளப்பட்ட பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் அனைத்தும் முடங்கியுள்ளன.

இருப்பினும் ,தேர்தலை நடாத்தாமல் இருப்பது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு அல்ல. திறைசேரிக்கு பொறுப்பான செயலாளர் தற்போதைய நிலைமையின் தீவிரம் குறித்து திறைசேரிக்கு அறிவித்து நீதிமன்றில் விடயங்களை முன்வைத்துள்ளதாகவும்”   தெரிவித்தார்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    சவுதி மரண தண்டனையிலிருந்து முழுமையாக விடுக்கப்பட்ட சிவராசா அனோஜன் ஓரிரு வாரங்களில் நாடு திரும்புவார்

    November 11, 2026

    அஸ்வெசும நிவாரணம்: மேல்முறையீடு மற்றும் ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க நாளை இறுதி நாள்!

    November 10, 2026

    அநுராதபுரம் – ரம்பேவ முப்பேருந்து விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு; 50க்கும் மேற்பட்டோர் காயம்!

    November 10, 2026

    சம்பளக் குறைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டம்!

    November 10, 2026
    Editors Picks

    சவுதி மரண தண்டனையிலிருந்து முழுமையாக விடுக்கப்பட்ட சிவராசா அனோஜன் ஓரிரு வாரங்களில் நாடு திரும்புவார்

    November 11, 2026

    கடுகண்ணாவையில் மோட்டார் சைக்கிள் மீது சரிந்து விழுந்த பாறை: கண்டி – கொழும்பு பிரதான வீதி தற்காலிகமாக மூடல்!

    November 10, 2026

    அஸ்வெசும நிவாரணம்: மேல்முறையீடு மற்றும் ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க நாளை இறுதி நாள்!

    November 10, 2026

    காத்தான்குடியில் பாரிய நகைக்கொள்ளை 17 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளுடன் மூவர் கைது!

    November 10, 2026

    சவுதி மரண தண்டனையிலிருந்து முழுமையாக விடுக்கப்பட்ட சிவராசா அனோஜன் ஓரிரு வாரங்களில் நாடு திரும்புவார்

    November 11, 2026

    கடுகண்ணாவையில் மோட்டார் சைக்கிள் மீது சரிந்து விழுந்த பாறை: கண்டி – கொழும்பு பிரதான வீதி தற்காலிகமாக மூடல்!

    November 10, 2026

    அஸ்வெசும நிவாரணம்: மேல்முறையீடு மற்றும் ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க நாளை இறுதி நாள்!

    November 10, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.