நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலைகளை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் திருத்தியமைத்துள்ளது.
இதன்படி, மண்ணெண்ணெய் தவிர்ந்த ஏனைய எரிபொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன.
பெட்ரோல் 92 ஒக்டேன் லீற்றர் ஒன்று 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 424 ரூபாவிற்கும், பெட்ரோல் 95 ஒக்டேன் லீற்றர் ஒன்று 15 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 490 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படவுள்ளன.
அத்துடன், ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 397 ரூபாவாகவும், லங்கா சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 15 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 543 ரூபாவாகவும் உயர்த்தப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும், மண்ணெண்ணெய் விலையில் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை என்பதுடன், லீற்றர் ஒன்று தொடர்ந்து 285 ரூபா என்ற நிலையிலேயே விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
