ஹட்டன் தனியார் பேருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள பொது மலசலக்கூடம், 17 ஆண்டுகளுக்குப் பிறகு முழுமையாகப் புனரமைக்கப்பட்டு நேற்று (06) பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறந்து வைக்கப்பட்டது.
ஹட்டன் – டிக்கோயா நகர சபைத் தலைவர் அசோக கருணாரத்ன தலைமையில் இதற்கான நிகழ்வு இடம்பெற்றது.
நீண்டகாலமாக இப்பொது மலசலக்கூடத்தில் நிலவி வந்த குறைபாடுகள் மற்றும் சுகாதாரப் பிரச்சினைகளுக்கு இப்புனரமைப்பின் மூலம் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மஸ்கெலியா விசேட நிருபர்.
