நடிகர் சரத்பாபு, தனது 71வது வயதில் காலமானார்.
கடந்த சில நாட்களாக உடல்நல குறைவாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த அன்னார், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நடிகர் சரத்பாபுவின் மறைவிற்கு இந்திய திரையுலக பிரபல்யங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
