நோட்டன் பிரிட்ஜ்:
நோட்டன் – கார்பெக்ஸ் வீதியின் ஒஸ்போன் பகுதியில் நேற்று புதன்கிழமை (28.10.2026) மாலை 5.40 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக எவ்வித காயங்களுமின்றி உயிர் தப்பியுள்ளார்.
ஒஸ்போன் திசையிலிருந்து அதிக வேகத்தில் வந்த மோட்டார் சைக்கிளொன்று, எதிரே வந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான (இ.போ.ச) பேருந்துடன் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து சம்பவித்துள்ளது.
இவ்விபத்தின் போது மோட்டார் சைக்கிள் பலத்த சேதமடைந்துள்ள போதிலும், அதனைச் செலுத்திச் சென்ற நபர் எவ்விதக் காயங்களுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் நோட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
