எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், பேருந்து கட்டணங்களில் எந்தவித மாற்றமும் மேற்கொள்ளப்படமாட்டாது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
விலை சூத்திரத்திற்கு அமைய, கட்டண அதிகரிப்பிற்குரிய 4 சதவீத எல்லை எட்டப்படாததால் கட்டணங்களை உயர்த்தச் சட்டரீதியாக அதிகாரம் இல்லை என அச்சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
எவ்வாறாயினும், டீசல் விலை உயர்வினால் குறுகிய தூரப் பேருந்துகளுக்கு நாளொன்றுக்கு 1,000 ரூபாவும், நெடுந்தூரப் பேருந்துகளுக்கு 2,000 ரூபாவும் நஷ்டம் ஏற்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
