மஞ்சள் நிற எரிவாயு சிலிண்டர்களுக்கு நீல வர்ணம் பூசி மோசடியில் ஈடுபட்ட மூவர் கொட்டதெனியாவ பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மஞ்சள் நிற வெற்று எரிவாயு சிலிண்டர்களுக்கு நீல வர்ணம் பூசி, அவற்றை லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் போல மாற்றி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மூவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
வர்ணம் பூசப்பட்ட சிலிண்டர்கள் புதியவை போலத் தெரிவதைத் தவிர்ப்பதற்காக, அவை ஏற்கனவே பயன்படுத்தப்பட்டவை எனக் காட்டும் வகையில் அவற்றின் மீது உணவுத் துகள்களும் ஒட்டவைக்கப்பட்டிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவர்களை எதிர்வரும் டிசம்பர் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கொட்டதெனியாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
