Author: Thana

டிக்கோயா சின்னமணிக்கவத்தை தோட்டத்தை பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி வீரப்பன் அன்பரசி குடும்பம் மற்றும் யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகக் கொண்ட பிரியங்கா குடும்பத்தினர் ஒன்றாக இணைந்து இன்று கின்லொக் பிரதேசத்தில் சுமார் 80குடும்பங்களுக்கு கிட்டத்தட்ட 3500.00 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருட்களை வழங்கி வைத்தனர். தன்னலம் பாராத இவர்களுடைய சேவையை நினைத்து தோட்ட மக்கள் அனைவரும் அகமகிழ்கின்றனர். சிவப்பிரகாசம் கருணைநாயகன்

Read More

தோட்டத் தொழிலாளர்களுக்கு நிரந்தர வதிவிட முகவரி வழங்குவது தொடர்பில் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளர் ஆராய்ந்து வருவதாக சட்டமா அதிபர் இன்று உயர்நீதிமன்றில் அறிவித்துள்ளார். தோட்டத் தொழிலாளி ஒருவரினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் மனு தொடர்பான விசாரணைகள் இன்று உயர்நீதிமன்றில் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது, சட்டமா அதிபர் சார்பில் மன்றில் முன்னிலையான பிரதி மன்றாடியார் நாயகம் கனிஸ்கா டி சில்வா இதனைத் தெரிவித்தார். தோட்டத் தொழிலாளி ஒருவரினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில், பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட சிலர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர். பெருந்தோட்ட சமூகத்துக்கு முகவரிகளை பதிவு செய்யுமாறு கோரி மாவத்தகம, மூவன்கந்த தோட்டத்தை சேர்ந்த ஜீவரத்தினம் சுரேஸ்குமார் என்பவர் அடிப்படை உரிமை மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். நாடு முழுவதும் உள்ள பெருந்தோட்ட சமூக குடியிருப்பாளர்களுக்கான நிரந்தர முகவரிகளை வழங்குவதற்கு அதிகாரிகளுக்கு உத்தரவிடவேண்டும் என்று கோரி, மனுதாரரான ஜீவரத்தினம் சுரேஸ்குமார் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் வாழும் தொழிலாளர்கள்…

Read More

வி.தீபன்ராஜ் நுவரெலியா கிரகரி வாவி குப்பைகளை அகற்றி தூய்மைப்படுத்த நடவடிக்கை. நுவரெலியா நாளாந்தம் அதிக சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் கிரகரி வாவியினை சுத்தம் செய்யும் நடவடிக்கைகளை நுவரெலியா மாநகரசபையினர் முன்னெடுத்துள்ளனர். கிரகரி வாவியில் பாசி செடிகள் படர்ந்து வாவி முழுவதும் குவியல் குவியலாக உள்ளதை அகற்றி கரைகளில் உள்ள புதர்களை அகற்றியும் வாவி முழுவதும் மிதக்கும் பிளாஸ்டிக் குப்பைகளையும் கழிவு பொருட்களையும் அகற்றி சுத்தம் செய்து ஜே சி பி இயந்திரத்தினை பயன்படுத்தி ஆழப்படுத்தியும் அகலப்படுத்தியும் வருகின்றனர் . இதன்போது பெருமளவான கழிவுப்பொருட்கள் வாவிக்கரையில் இருந்து மீட்கப்பட்டது. இது எதிர்காலத்தில் சுற்றுச்சூழலுக்கும் வாவிக்கும் ஆபத்தினை ஏற்படுத்தும் என மாநகரசபை விசேட ஆணையாளர் திருமதி சுஜீவ போதிமான கருத்து தெரிவித்தார்.

Read More

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் 84ஆவது வருடாந்த பட்டமளிப்பு விழா 24 மற்றும் 25ஆம் திகதிகளில் பல்கலைக்கழகத்தின் திறந்த மைதானத்தில் இடம்பெறுகிறது. மூன்று அமர்வுகளில் இடம்பெறும் இந்நிகழ்வில் 2500 இளமாணிப் பட்டம், 1286 பட்டப்பின் படிப்பு மற்றும் 03 விசேட பட்டங்களும் வழங்கப்படவுள்ளதாக உபவேந்தர் பேராசிரியர் டெரன்ஸ் மதுஜித் தெரிவித்தார். இந்நிகழ்வு நேற்று (24) முற்பகல் மற்றும் பிற்பகல் என இரண்டு அமர்வுகளில் இடம்பெற்றதுடன், இன்று (25) முற்பகல் ஒரு அமர்வுமாகவும் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது. இன்று மூன்றாவது அமர்வின் போது பேராசிரியர் சன்ன ரத்னதுங்க, பேராசிரியர் சி. பி. திசாநாயக மற்றும் கலாநிதி பாலித கொஹொன ஆகியோருக்கான விசேட கௌரவ விருதுகள் வழங்கப்படவுள்ளன.

Read More

வெற்றிலையைப் பயன்படுத்தி இனிப்பு பண்டம் ஒன்றை உற்பத்தி செய்ய முடிந்ததாக ஊடுபயிர் மற்றும் வெற்றிலை ஆராய்ச்சி நிறுவனத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரவீனா திஸாநாயக்க தெரிவித்தார். வெற்றிலையைப் உபயோகித்து பெறுமதி சேர்க்கப்பட்ட பொருட்களை அறிமுகப்படுத்த நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் விளைவாக, வெற்றிலை பாக்கு உற்பத்தியின் ஆராய்ச்சி வெற்றிகரமாக உள்ளது. இதேவேளை, வெற்றிலை, பாக்கு மற்றும் சுண்ணாம்பு சாப்பிடுபவர்களுக்கும், வெற்றிலையை மென்று சாப்பிடும் பழக்கமுள்ளவர்களுக்கும், சிறு குழந்தைகளுக்கும் கொடுக்கும் வகையில் இனிப்பு பண்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இதில், புகையிலைக்கு பதிலாக அதிக சர்க்கரை மற்றும் உணவு நிறம் சேர்க்கப்படுகிறது. வெற்றிலையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய், சர்க்கரை, குளுக்கோஸ் மற்றும் தண்ணீர் போன்ற பல பொருட்களைப் பயன்படுத்தி இதை தயாரிக்க முடியும் என்றும், வெற்றிலையில் நீரிழிவு, கொலஸ்ட்ரால் மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் இந்த இனிப்பை பயன்படுத்துவதால் ஆரோக்கிய நன்மைகள் இருப்பதாகவும் பிரதிப் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார். சிறுது நேரத்தில் குறைந்தளவிலான பொருட்களைப் பயன்படுத்தி இப்பொருளைத் தயாரிக்க…

Read More

நீதிமன்ற உத்தரவின் படி, வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் உடலம் இன்றைய தினம் தோண்டி எடுக்கப்படவுள்ளது.இந்தநிலையில், சடலம், புதைக்கப்பட்ட இடத்தில் காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.முன்னதாக, தினேஸ் ஷாஃப்டரின் மரணம் தொடர்பான அறிக்கையை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஐவர் அடங்கிய விசேட வைத்திய நிபுணர்கள் குழு, வர்த்தகர் தினேஸ் ஷாஃப்டரின் மரணத்திற்கான காரணத்தை கண்டறிய அவரது சடலத்தை தோண்டி எடுக்க வேண்டும் என நீதிமன்றில் கோரியிருந்தது.குறித்த சமர்ப்பணத்தை ஆராய்ந்த கொழும்பு நீதிவான் நீதிமன்றம், அவரின் சடலத்தை தோண்டி எடுப்பதற்கு தேவையான பணிகளை முன்னெடுக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு அண்மையில் அறிவித்திருந்தது.நீதிவான், நிபுணர்கள் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகளின் முன்னிலையில், வர்த்தகர் தினேஸ் ஷாஃப்டரின் சடலம் இன்று தோண்டி எடுக்கப்படவுள்ளது.வர்த்தகர் தினேஸ் ஷாப்டர் தமது மகிழுந்தில் கைகள் மற்றும் வாய் ஆகியன கட்டப்பட்ட நிலையில், பொரளை மயானத்திற்கு அருகில் இருந்து மீட்கப்பட்டார்.பின்னர் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது…

Read More

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியில் இருந்து தாம் நீக்கப்பட்டமை தொடர்பில் தமக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என அதன் முன்னாள் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர், ஜனக்க ரத்நாயக்கவை, பதவி நீக்கம் செய்வதற்கான பிரேரணை, 46 மேலதிக வாக்குகளால், நாடாளுமன்றில் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது.இந்தப் பிரேரணைக்கு ஆதரவாக 123 வாக்குகளும், எதிராக 77 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தன.இது தொடர்பில், அவரிடம் ஊடகவியலாளர்கள் வினவிய போது, அதற்கு பதிலளித்த அவர், ஆணைக்குழு செயற்திறனுடன் இருப்பதாக தெரிவித்தார்.தற்போது, அவர்களுக்கு இருந்த தடை நீங்கியுள்ளது. எனவே, அவர்கள் தங்களுக்கு அவசியமானதை செய்ய முடியும் எனவும் குறிப்பிட்டார்.இதேவேளை, எந்த அரசியல் கட்சியில் இணைந்து நீங்கள், அரசியலில் ஈடுபடுப் போகின்றீர்கள் என ஜனக்க ரத்நாயக்கவிடம் ஊடகவியலாளர் இதன்போது கேள்வி எழுப்பினார்.இதற்குப் பதிலளித்த அவர், அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், நல்லபெயர் இல்லாதமையால், புதிய பிரவாகத்தை உருவாக்குவது அத்தியாவசியமானதாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட, அரசியல் கட்சி ஒன்று வேண்டும்.…

Read More

2023 இந்தியன் பிரீமியர் லீக்கில் புதன்கிழமை (24) நடைபெற்ற வெளியேற்றல் சுற்றில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணி 81 ஓட்டங்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட் அணியை வீழ்த்தியது. சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று மா‍லை ஆரம்பமான இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்புக்கு 182 ஓட்டங்களை குவித்தது. கேமரூன் கிரீன் 41 ஓட்டங்களையும், சூர்யகுமார் யாதவ் 33 ஓட்டங்களையும் அணி சார்பில் அதிகபட்சமாக எடுத்தனர். லக்னோ அணி சார்பில் நவீன்-உல் ஹக் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். எனினும் மும்பை அணி வீரர் நேஹால் வதேரா 12 பந்துகளில் 23 ஓட்டங்களை எடுத்து அதிரடி காட்டியமையும் மும்பையின் வெற்றிக்கு கை கொடுத்தது. பின்னர் 183 என்ற வெற்றியிலக்கனை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய லக்னோ அணியால் 16.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 101 ஓட்டங்களை மாத்திரம் பெற முடிந்தது. லக்னோ சார்பில்…

Read More

சட்டவிரோதமான முறையில் தங்கம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளை எடுத்துச் சென்ற குற்றச்சாட்டில் இலங்கை சுங்கத் திணைக்களத்தினால் தடுத்து வைக்கப்பட்டு, தண்டம் செலுத்தியதன் பின்னர் விடுவிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் நேற்றையதினம் பாராளுமன்றத்துக்கு வருகைதந்தார். ​அவர், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்கவை பதவிநீக்கம் செய்யும் பிரேரணை மீதான வாக்கெடுப்பில் கலந்துகொண்டார். வாக்கெடுப்பை நடத்துவதற்கான வாக்கெடுப்பு அழைப்பு மணி ஒழிக்கப்பட்டபோது சபைக்குள் பிரவேசித்தார்.கோர மணியின் சத்தம் நிறைவடைந்ததும் இலத்திரனியல் முறைப்படி வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்போது, ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பிய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.மரிக்கார், சபாநாயகர் அவர்களே! தங்கம் கடத்திய எம்.பி, வாக்களிக்க வந்துள்ளார் என்றார். எனினும், அது ஒழுங்குப்பிரச்சினை இல்லையென கூறிய சபாநாயகர் வாக்கெடுப்பை நடத்தினார். இந்த வாக்கெடுப்பின் போது, அலி சப்ரி ரஹீம், எதிராக வாக்களித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Read More

யுனிசெப் நிறுவனத்தின் நிதிக் கொடுப்பனவு தொடர்பாக 2021.05.01 திகதியில் இருந்து 2022.12.31 திகதி வரையில் பிறந்த குழந்தைகள் தொடர்பான விபரத்தை பதிவு செய்யவும். கீழ் காணப்படும் கிராம சேவகர் பிரிவுகளில் உள்ளவர்கள் ஹோல்புரூக் – 2023/05/25,26ம் திகதி அக்கரபத்தனை – 2023/06/12,13ம் திகதி பிறேமோர் – 2023/06/2,5ம் திகதி வெவர்லி – 2023/05/29,30ம் திகதி டயகம West – 2023/05/31 மற்றும் ஜீன் 1ம் திகதி டயகம East – 2023/05/31 மற்றும் ஜீன் 1ம் திகதி எல்பியன் – 2023/06/06ம், 7ம் திகதி சந்திரகாமம் – 2023/05/26ம், 27ம் திகதி எல்பெத்த – 2023/05/29ம், 30ம் திகதி கிளாஸ்கோ – 2023/06/8ம், 9ம் திகதி பெல்மோரல் – 2023/06/2ம், 5ம் திகதி ரகானுவத்தை 2023/06/06ம், 7ம் திகதி தேவையானவை, * குழந்தையின் பிறப்புச்சான்றிதழ் அல்லது வளர்ச்சிப் பதிவேடு. (ஊசி காட்) * தாயின் தேசிய அடையாள அட்டை * தாயின்…

Read More