Author: Thana

கலாநேசன் ஹர்சித் என்ற 5 வயது சிறுவன் உலக வரைபடத்தில் உள்ள 195 நாடுகளின் அமைவிடங்களை அடையாளம் காட்டியவாறு அவற்றின் பெயர்களையும் அவற்றின் தலை நகரங்களையும் 4 நிமிடங்கள் மற்றும் 16 நொடிகளுக்குள் கூறி சாதனை படைத்துள்ளார். நுவரெலியா மாவட்டத்தின் பீற்று தோட்ட லவர் ஸ்லிப் பிரிவில் விநாயக புரம் பகுதியில் வசித்து வரும் கலாநேசன் மற்றும் லலிதாம்பிகை தம்பதியினரின் மகன் 5 வயதான ஹர்சித் என்ற குழந்தை உலக வரைபடத்தில் உள்ள 195 நாடுகளின் அமைவிடங்களை அடையாளம் காட்டியவாறு அவற்றின் பெயர்களையும் அவற்றின் தலை நகரங்களையும்  4 நிமிடங்கள் மற்றும் 16 நொடிகளுக்குள் ஆங்கில மொழியில் கூறி புதிய சோழன் உலக சாதனை படைத்தார். இவர் நுவரெலியா பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரியில்  ஆரம்பக் கல்வியை கற்று வருகிறார். இவருடைய ஞாபகத் திறனை ஊடகங்களூடாக கேள்விப்பட்ட தமிழ்நாட்டில் தலைமைச் செயலகத்தைக் கொண்டு உலகின் 26 நாடுகளில் கிளைகளைக் கொண்டுள்ள…

Read More

பன்விலை பொலீஸ் பிரிவிற்குட்பட்ட சமூக பாதுகாப்பு குழு, கிராமிய அபிவிருத்தி குழுக்கள் மற்றும் வர்த்தக பிரமுகர்கள் கலந்து கொண்டு, பிதேசத்தில் ஏற்படும் துஷ்பிரயோகம் ஏனைய சமூக விரோத செயற்பாடுகளை நிவர்த்தி செய்யும் நோக்கில் ஆலோசனைகள், நிவர்த்தி செய்யும் வழிமுறைகள் என்பன கலந்துரையாடப்பட்டு மக்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது. இந் நிகழ்வில் பௌத்த குருமார்கள், இந்து குருக்கள், இஸ்லாமிய மௌளவிகள், கிரிஸ்தவ பாதிரியார் மற்றும் பன்விலை பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி லலீந்த பீரிஸ், கண்டி உதவி பொலீஸ் அச்சகர் ஒமேம் நந்திக கலந்து கொண்டு உரையாற்றுவதையும் காணலாம். – மடுல்கலை நிருபர்

Read More

புத்தல வக்குருவெல வயல் வெளியில் நின்று வா கொண்டிருந்த இருவர் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர். நேற்று மாலை மழையுடன் கூடிய இடி மின்னல் தாக்கத்திலேயே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது. இவ்வனர்த்தத்தில் உயிரிழந்தவர்கள் 30,32 வயதுடையவர்கள் என்பதுடன் இதில் ஒருவர் 1990 உயிர் காவு வண்டியின் சாரதி என்பது குறிப்பிடத்தக்கது. குறித்த இருவரின் சடலம் புத்தல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. ராமு தனராஜா

Read More

டயகம  நு.செளமிய மூர்த்தி தொண்டமான் கல்லூரியின் பழையமாணவர் சங்க பொது கூட்டம் இன்றைய தினம் (27.05.2023 )பாடசாலையின் அதிபரின் தலைமையில் நடைபெற்றது. குறித்த கூட்டத்திற்கு பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர், பொருளாளர் மற்றும் பழைய மாணவர்கள் கலந்து கொண்டனர். கலந்துரையாடலில் பாடசாலையின் அபிவிருத்தி செயற்பாடுகள்,கற்றல் செயற்பாடுகள்,பழைய மாணவர் சங்கத்தின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாக விரிவாக கலந்தாலோசிக்கப்பட்டது.

Read More

இலங்கை கடற்படையினர் (25 மே 2023) அதிகாலை புல்முடை, அரிசிமலை கடற்பகுதியில் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது சட்டவிரொதமாக மின் விளக்குகளை மற்றும் தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட எட்டு (08) பேருடன் இரண்டு (02) டிங்கி படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி சாதனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர வலயத்தில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் கடற்படையினர் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, (2023 மே 25) அதிகாலை, கிழக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் ரன்வேலி நிருவனத்தின் கடற்படையினர் புல்முடை அரிசிமலை பகுதிக்கு அப்பால் உள்ள கடற்பகுதியில் விசேட தேடுதல் நடவடிக்கையொன்று மேற்கொண்டுள்ளதுடன் குறித்த கடற்பகுதியில் சட்டவிரோதமாக மின் விளக்குகள் மற்றும் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட எட்டு (08) நபர்களுடன் இரண்டு (02) டிங்கி படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி சாதனங்கள்…

Read More

வாழைமரங்களை வெட்டி வீசி, அச்சுறுத்திய குண்டர்கள் 2705.2023 தென் பகுதி தோட்ட தொழிலாளர்களின் வாழைமரங்களை வெட்டி வீசி, அச்சுறுத்திய குண்டர்கள். தெனியாய மொறவக்க பகுதியில் வாழும் மலையக தமிழர்கள், தமது வாழ்வாதாரத்திற்காக வளர்த்த வாழைமரங்களை, சில குண்டர்கள் வெட்டி வீசும் காணொளி தற்போது வெளியாகியுள்ளது. மொறவக்க பெருந்தோட்ட பகுதியானது, தற்போது பௌத்த பிக்கு ஒருவரின் கட்டுப்பாட்டில் செயற்பட்டு வருவதாக அந்த பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில், பல நூற்றாண்டு காலமாக இந்த பிரதேசத்தில் வாழ்ந்து வரும் தாம், வாழ்வாதாரத்திற்காக தமது வீடுகளை அண்மித்த பகுதிகளில் வாழைமரங்களை நட்டு, அதனூடாக வருமானத்தை பெற்று வந்துள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்;. இவ்வாறான பின்னணியில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் வாழை குலைகளை விற்பனை செய்ய முயற்சித்த தருணத்தில், அது தமக்கு சொந்தமானது என தோட்ட நிர்வாகத்தினர் கூறியுள்ளனர். குறித்த வாழைமரங்களின் அறுவடைகளை பெற்றுக்கொள்வதற்கான உரிமை கிடையாது என அந்த மரங்களை வளர்த்தவர்களிடம் தோட்ட நிர்வாகத்தினர்…

Read More

இராகலை பிரதேசத்தில் இருந்து வெகு தூரம் சென்று அரச சேவைகளை பெற்று வந்த மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுதரும் நோக்கில் வலப்பனை பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நடமாடும் சேவை ஏராளமான பொது மக்களின் பங்கேற்புடன் இராகலை பிரதேசசபை மண்டபத்தில் 26.05.2023 அன்று இடம்பெற்றது.    

Read More

தலவாக்கலை நகரில் சிறுவர் நிதியத்தின் அனுசரணையுடன் டிபீல்ட் நிறுவனத்தின் வழிகாட்டல் மற்றும் கண்காணிப்பின் கீழ் நுவரேலியா AYEVAC இளைஞர் குழு தலைமையில் சிறுவர்களுக்கு ஏதிரான வன்முறைகளை இல்லாதொழிப்பதற்காகவும், இளைஞர் யுவதிகள் மத்தியிலான போதை பொருள் பாவனையை குறைக்கும் முகமாகவும், புவி வெப்பமடைதல் பற்றிய தெளிவை வழங்கவும் மற்றும் பாலியல் இனப்பெருக்க ஆரோக்கியம் பற்றிய தகவல்களை வழங்கவும் விழிப்புணர்வு நடை பேரணி மற்றும் சுவரொட்டி பிரச்சாரம் இன்று தலவாக்கலை நகரில் இன்று (27.05.23)நடைப்பெற்றது. https://youtu.be/N1p74CEjyps

Read More

2021ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன. www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk என்ற இணையத்தளத்திற்குச் சென்று பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. சாதாரண தர பரீட்சையின் மீள் மதிப்பீட்டுக்கு 80,272 விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்துள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் குறித்து மேலும் விசாரிக்க விரும்பினால், பரீட்சை திணைக்களத்தின் பாடசாலைகள் பரீட்சை அமைப்பு மற்றும் பெறுபேறு கிளையை தொடர்பு கொள்ளுமாறு அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.

Read More

2023 மே 27ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Read More