Author: Thana

டெங்கு நோய் பரவுவதைத் தடுப்பதற்கு அனைத்து அதிகாரிகளும் தலையிட்டு துரித நடவடிக்கைகளை எடுக்குமாறு டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடுவதற்காக (25) அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது பிரதமர் தினேஷ் குணவர்தன ஆளுநர்களிடம் தெரிவித்தார். ஆளுனர்கள், மாகாண சபை செயலாளர்கள், உள்ளூராட்சி ஆணையாளர்கள், மாகாண சுகாதார சேவை பணிப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்ட சூம் தொழிநுட்பத்தின் ஊடாக இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில், டெங்கு பரவல் தொடர்பான தகவல்களை சேகரித்து நோயை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர், இந்நோய் மேலும் பரவாமல் தடுப்பதற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்பதால், பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்கள் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வரும் நோய் கட்டுப்பாட்டு வேலைத்திட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுப்பது அவசியமானது என குறிப்பிட்டார். டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கு அந்தந்த மாகாணங்களில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் அதன் முன்னேற்றம் குறித்து ஆளுநர்கள் கருத்துத் தெரிவித்தனர். நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்படும்…

Read More

டி சந்ரு உலக வரைபடத்தில் உள்ள 195 நாடுகளின் அமைவிடங்களை அடையாளம் காட்டியவாறு அவற்றின் பெயர்களையும் அவற்றின் தலை நகரங்களையும் 4 நிமிடங்கள் மற்றும் 16 நொடிகளுக்குள் கூறி புதிய சோழன் உலக சாதனை படைத்தார் கலாநேசன் ஹர்சித் என்ற 5 வயது சிறுவன். நுவரெலியா மாவட்டத்தின் லோவர் ஸ்லிப் டிவிசன், பெட்ரோ தோட்டத்தில் வசித்து வரும் கலாநேசன் மற்றும் லலிதாம்பிகையின் மகன் 5 வயதான ஹர்சித் என்ற குழந்தை உலக வரைபடத்தில் உள்ள 195 நாடுகளின் அமைவிடங்களை அடையாளம் காட்டியவாறு அவற்றின் பெயர்களையும்அவற்றின் தலை நகரங்களையும் 4 நிமிடங்கள் மற்றும் 16 நொடிகளுக்குள் கூறி புதிய சோழன் உலக சாதனை படைத்தார். இவர் நுவரெலியா புனித ஹோலி ட்ரைனிட்டி கொலீச் பாடசாலையில் ஆரம்பக் கல்வியை கற்று வருகிறார். இவருடைய ஞாபகத் திறனை ஊடகங்களூடாக கேள்விப்பட்ட தமிழ்நாட்டில் தலைமைச் செயலகத்தைக் கொண்டு உலகின் 26 நாடுகளில் கிளைகளைக் கொண்டுள்ள பன்னாட்டுச் சோழன்…

Read More

இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றும் இந்திய வம்சாவளி தேயிலை தோட்ட தொழிலாளர்கள் இலங்கை வந்து 200 ஆண்டுகள் நிறைவடையும் சந்தர்ப்பத்தில் பல்வேறு அமைப்புகளும் தனியார் நிறுவனங்களும் பலதரப்பட்ட நிகழ்வுகளை செய்து வருகின்றன. அந்தவகையில் Australia aid அமைப்பு மற்றும் மகளிர் ஆய்வு நிலையம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த மலையகம் 200 நிகழ்வானது வியாழக்கிழமை (25) பிற்பகல் 2.00 மணியளவில் பதுளை தபால் வளாக கேட்போர் கூடத்தில் மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்றிருந்தது. ஊவா மாகாணத்திலும் மத்திய மாகாணத்திலும் இருக்கும் மலையக கலைஞர்கள் சிலரை திரட்டி அவர்களுக்கு இரண்டு நாள் பயிற்சிகள் வழங்கி மூன்றாவது நாளில் அவர்கள் அனைவரினதும் தனித்துவமான படைப்புகளையும் திறமைகளையும் மேடையேற்றியிருந்தனர். இந்நிகழ்வில் மலையகம் சார்ந்த கவிதைகளை, நாடகம், நடனம், பாடல்கள், சித்திரம், குறும்படம் என பல்வேறு கலையம்சங்கள் வெளிப்படுத்தப்பட்டதோடு டாக்டர் பொன்னி அவர்களின் “கருப்பி” எனும் ஓரங்க நாடகம் பலரின் கவனத்தையும் ஈர்த்திருந்தது. மேலும் Australia…

Read More

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை அனுமதி அட்டைகளை விரைவாக விண்ணப்பதாரர்களிடம் ஒப்படைக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அதிபர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், எக்காரணம் கொண்டும் பரீட்சை அனுமதி அட்டைகளை விண்ணப்பதாரர்களிடம் வழங்காது, அதிபர்கள் தம்வசம் வைத்திருக்கலாகாது என்பதுடன், எவரேனும் ஒரு விண்ணப்பதாரருக்கு அனுமதி அட்டை கிடைக்காமல் பரீட்சை எழுத முடியாமல் போகுமிடத்து அதன் முழுப் பொறுப்பையும் அதிபர்களே பொறுப்பேற்க வேண்டும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

Read More

புத்தளம் – தில்லையடியில் உள்ள பாடசாலை ஒன்றில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் மேலும் 17 மாணவர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவர்களுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தில்லையடி பாடசாலையொன்றில் கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கான பிரியாவிடை வைபவம் நேற்று முன்தினம் (23) நடைபெற்றது. இதன்போது, கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கான அனுமதிப்பத்திரமும் வழங்கப்பட்டது. சில மாணவர்கள் முடி வளர்த்துக்கொண்டு பாடசாலைக்கு சென்றிருந்த நிலையில், ஆசிரியரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 27 வயதான குறித்த ஆசிரியர் கடமை முடிந்து வீடு திரும்பிய போது, மாணவர்கள் அவரை கிண்டல் செய்துள்ளதுடன், ஆசிரியர் தன் வீட்டை சென்றடைந்த போது கல்வீச்சுத் தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது,…

Read More

டி.சந்ரு செ,திவாகரன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் வேண்டுகோளுக்கிணங்க தாய்வான் நாட்டு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட இலவச அரிசியினை பொது மக்களுக்கு வழங்கும் நிகழ்வு இன்று (26.05) நானுஓயாவில் இடம்பெற்றது. நானுஓயா நாவலர் ஆரம்ப பாடசாலை அதிபர் சதாசிவம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வின்போது, தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு 30 கிலோ வீதம் அரிசிப் பக்கற்றுக்கள் வழங்கப்பட்டன. இவ் நிகழ்வில் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஏ.பி .சக்திவேல் அவர்களின் கலந்து கொண்டார் , தெரிவு செய்யப்பட்ட 312 அரிசிப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. இதன் போது பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது .

Read More

இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டு அகதிகள் தமக்கு எந்த நாட்டிலும் நிரந்தர வதிவிடத்தை வழங்குமாறு கோரி கொழும்பில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தியுள்ளனர். “நியாயத்தை வழங்கு” என கோஷத்தை எழுப்பியவாறு நடத்திய போராட்டத்தில் சிறுவர்களும் பங்கேற்றிருந்ததை அவதானிக்க முடிந்தது. கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு முன்பாக நேற்று முன்தினம் ஒன்றுகூடிய, இலங்கையில் உள்ள பல பாகிஸ்தானிய குடும்பங்கள், நிரந்தர பதிவினை விரைவுபடுத்துமாறும், வீட்டுவசதி, கல்வி, சுகாதாரம் மற்றும் வாழ்க்கைச் செலவு பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தின. அவர்களின் கைகளில் ஆங்கிலத்திலும் உருது மொழியிலும் எழுதப்பட்ட, “அகதிகளை மரணத்திற்கு திருப்பி அனுப்பாதீர்கள், அகதிகளும் மனிதர்களே” என வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன. ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தில் அகதிகளாகப் பதிவு செய்யப்பட்டுள்ளவர்களும் புகலிடக் கோரிக்கையை முன்வைத்தவர்களும் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டதோடு, வழங்கப்படும் நிவாரணத்தை குறைத்து கொழும்பில் உள்ள ஐ.நா அகதிகள் அலுவலகம் மூடப்படும் என தமக்கு கிடைத்த தகவலின்…

Read More

கொத்மலை வலயமட்ட கரப்பந்தாட்ட போட்டியில் 16,18 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் அணியினர் முறையே 1ம், 2ம் இடங்களை பிடித்து இறம்பொடை இந்து கல்லூரி சார்பாக மாகாண மட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளார்கள். இவ்வாறு வெற்றிப் பெற்ற மாணவர்களை அதிபர் உட்பட பாடசாலை சமூகம் பாராட்டி வருகின்ற நிலையில் இது போன்ற தொடர் வெற்றிகளை பாடசாலைக்கு பெற்றுக்கொடுக்க காரணமாக இருக்கும் பயிற்றுவிப்பாளர் பி . திலக்சன் அவர்களையும் பாராட்டி, வெற்றி பெற்ற மாணவ செல்வங்களுக்கும் மலையகம்.lk சார்பாக வாழ்த்துகிறோம்.

Read More

2023 ஆம் ஆண்டின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் நிறைவடைந்து முதலாம் தவணையின் மூன்றாம் கட்டத்தை ஆரம்பிப்பது தொடர்பாக கல்வி அமைச்சினால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளில் 2023 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்றுடன் (26) நிறைவடையவுள்ளது. 12.06.2023 திங்கட் கிழமை முதலாம் தவணையின் மூன்றாம் கட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More

சர்ச்சைக்குரிய தையிட்டி விகாரை இன்று (25) காலை 5.30 மணிக்கு திறந்து வைக்கப்பட்டது. இரகசியமாக தென்னிலங்கையில் இருந்து அழைத்துவரப்பட்ட  மக்களின் பங்குபற்றலுடன் தையிட்டி விகாரை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

Read More