Author: Thana
ஜூன் மாதம் 15ஆம் திகதி 7800 கல்வியற் கல்லூரி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கி, தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளின் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். அத்துடன், அடுத்த வருடம், க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்சைகள் இரண்டையும் ஒரே வருடத்தில் நடத்தும் வகையில் பரீட்சை அட்டவணை புதுப்பிக்கப்படும். மேலும், எதிர்காலத்தில் விஞ்ஞானம் மற்றும் தொழில் நுட்பம் போன்ற அதிக ஆசிரியர் பற்றாக்குறை உள்ள பாடத்துறைகளுக்கு, 35 வயதுக்குட்பட்ட பட்டதாரிகளுக்கு தேசிய மற்றும் மாகாண ரீதியில் ஆசிரியர்களை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார். க.பொ.த சாதாரண தரப்பரீட்சையில் சித்தியடைந்த குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் க.பொ.த உயர்தர கல்விக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு நேற்று இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே அவர்களின் பங்குபற்றுதலுடன் அமைச்சரின் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அமைச்சர்…
மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ, மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
வெலிக்கடை காவல்துறையால் கைது செய்யப்பட்ட பெண் ஒருவர், உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் காவல்துறைமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ளன.அத்துடன், குறித்த சம்பவம் தொடர்பில் வெலிக்கடை காவல்துறையின் நான்கு அதிகாரிகள் பணியிடை நீக்கப்பட்டுள்ளனர்.மேலும், மூன்று அதிகாரிகள் உடன் அமுலாகும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.அதேநேரம், வெலிக்கடை காவல்துறை பொறுப்பதிகாரியை பணியிடை நீக்குவதா? அல்லது இடமாற்றம் செய்வதா? என்பது தொடர்பாக தீர்மானிப்பதற்கான பரிந்துரையை முன்வைக்குமாறு பொதுப் பாதுகாப்பு அமைச்சிடம் கோரியுள்ளதாகவும் காவல்துறை பேச்சாளர் கூறியுள்ளார்.பதுளையைச் சேர்ந்த 42 வயதான குறித்த பெண், தாம் பணியாற்றிய வீட்டில் இடம்பெற்ற தங்க ஆபரண திருட்டுச் சம்பவம் தொடர்பில் கடந்த 11ஆம் திகதி வெலிக்கடை காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.குறித்த வீட்டின் உரிமையாளரான தொலைக்காட்சி நாடகம் மற்றும் திரைப்பட தயாரிப்பாளரான பெண் தாக்கல் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் அங்கு பணியாற்றிய குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது…
ஐ.பி.எல் போட்டிகளில் இன்றைய தினம் 67வது போட்டியாக சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கும் டெல்லி கபிட்டல் அணிக்குமிடையில் இடம்பெற்றது. இந்த போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியினர் 77 ஓட்டங்களால் வெற்றி பெற்று Play Off சுற்றுக்கு தகுதி பெற்றுக் கொண்டனர்.
பம்பலப்பிட்டி பிரதேச பாடசாலையொன்றில் 10ஆம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் வகுப்பு ஆசிரியர் ஒருவரை தாக்கியுள்ளதாக பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவிக்கின்றனர். தாக்கப்பட்டதாக கூறப்படும் ஆசிரியரும் மாணவரும் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாடசாலையின் வகுப்பறையில் ஆசிரியர் ஒருவரால் தனது இளைய சகோதரர் தாக்கப்படுவதை அறிந்த அவரது 22 வயதுடைய சகோதரர் பாடசாலைக்குள் புகுந்து ஆசிரியர் ஒருவரை நாற்காலியை தூக்கி தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
13 வயதான சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் தமிழகத்தில் உள்ள இலங்கையர் ஒருவருக்கு 22 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தி ஹிந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. மண்டபத்தில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வந்த இலங்கையருக்கே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. வழக்கின் படி, குற்றம் சாட்டப்பட்ட 52 வயதான குறித்த இலங்கையர், 2022இல் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதேவேளை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
லங்கா திரிபோஷ நிறுவனத்தின் உற்பத்திக்குத் தேவையான சோளத்தின் இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட வரி குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, 1 கிலோகிராம் இறக்குமதிக்கான விசேட வர்த்தக வரி 75 ரூபாயிலிருந்து 25 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட Prednisolone கண் சொட்டு மருந்தை, மருந்துகளுக்கான கறுப்புப் பட்டியலில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ஒவ்வாமை ஏற்பட்டமையினால் பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்ட Prednisolone கண் சொட்டு மருந்தில் கிருமித்தொற்று காணப்படுவதாக ஆய்வுக்கூட பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அதற்கமைய, இந்த மருந்துகளுக்கான கொடுப்பனவுகளை மேற்கொள்ளாதிருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரபல நடிகையின் வீட்டில் உயிரிழந்த தெமோதர ராஜகுமாரிக்கு நீதி வேண்டும். – ப்ரொட்டெக் தொழிற்சங்கம் கோரிக்கை
பிரபல நடிகை ஒருவரின் வீட்டில் பணிப்பெண்ணாக ஒரு வருடத்திற்கும் மேல் பணியாற்றி உயிரிழந்த பதுலை தெமோதர பகுதியைச் சேர்ந்த ராஜகுமாரியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது கணவர் வாக்குமூலம் அளித்துள்ளார.எனவே, அவரது மரணத்திற்கும் நீதி வேண்டும் என ப்ரொட்டெக் தொழிற்சங்த்தின் உப தலைவி கருப்பையா மைதிலி கோரிக்கை விடுத்தார். ஹட்டன் ப்ரோட்டெக் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், கடந்த 11 ம் திகதி தெமோதர பிரதேசத்திலிருந்து கொழும்பிலுள்ள பிரபல நடிகையின் வீட்டில் ஒரு வருட காலமாக வீட்டு வேலையில் ஈடுபட்ட ராஜகுமாரி என்ற பெண் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.இந்த செய்தி பெரும்பான்மை வீட்டு வேலை தொழிலாளர்களை கொண்ட தொழிற் சங்கத்திற்கும் சங்க உறுப்பினர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் எமது நாட்டில் பல வருடங்களாக வீட்டு வேலைக்கு சென்று பல பெண்கள் உயிரிழந்துள்ளார்கள.; ஆனால் அவர்களுக்கு சரியான…
வன்னியை தளமாக கொண்டு செயற்படும் மாற்றுவலுவுள்ளோருக்கான வலுவூட்டல் அமையம் (VAROD), வட இலங்கையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளும் கிரிக்கெட் விளையாட்டினை அணுகும் நோக்கிலும், தேசிய மட்டத்திலான மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டிகளில் பங்கெடுக்ககூடிய ஓர் ஆற்றல்மிக்க அணியினை உருவாக்கும் நோக்குடனும் கடந்த 2022ம் ஆண்டு தொடக்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அடிப்படை வசதிகளற்ற நிலையிலும் தமது தொடர் முயற்சிகளை மேற்கொண்ட அணிக்கு இப்போது வெற்றியொன்று கிடைத்துள்ளது. VAROD அமையத்தின் விளையாட்டு கழகமானது, இம்மாத இறுதியில் இலங்கையில் நடைபெறவுள்ள சக்கரநாற்காலி கிரிக்கெட் வீரர்களைக் கொண்ட தேசிய குழுவினை உருவாக்குவதற்கான தேர்வில் பங்கேற்பதற்காகவும் உள்ளக போட்டியில் கலந்து கொள்வதற்காகவும் தேசிய பராலிம்பிக் குழுவினரால் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான முன் ஆயத்த பயிற்சிகள் வவுனியா பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் 16-05-2023 அன்று இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. விடாமுயற்சியோடு தம் இலக்கை நோக்கி உழைத்துக்கொண்டிருக்கும் VAROD அமையத்தின் விளையாட்டு கழகத்துக்கு கிரிக்கட் பயிற்சிகளுக்கும், வீரர்களின் உபகரணங்களுக்குமான உதவிகள் தேவைப்படுகின்றன. அடிப்படை…