Author: Thana

மோசமான காலநிலை காரணமாக, அதிவேக நெடுஞ்சாலையில் வாகனங்களை ஓட்டும் போது, ​​60 கி.மீ வேகத்தில்செல்லுமாறு நெடுஞ்சாலை போக்குவரத்து பிரிவு சாரதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும், வாகனங்களுக்கு இடையே ஒரு இடைவெளியை வைத்து, தங்கள் வாகனத்தை செலுத்துமாறு சாரதிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இருள் சூழ்ந்துள்ளதால் முன் மற்றும் பின்பக்க விளக்குகளை எரிய வைத்து வாகனம் ஓட்ட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Read More

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் புதிய ஏற்பாட்டாளராக மதுஷான் சந்திரஜித் தெரிவாகியுள்ளார். ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் நேற்று  நடத்தப்பட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் வருடாந்த ஒன்று கூடலில் இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது. மதுஷான் சந்திரஜித் பேராதனை பல்கலைக்கழக மாணவராவார்.

Read More

(க.கிஷாந்தன்) தனது சாதனையை இளம் அமைச்சர் ஜீவன் தொண்டமான் முறியடித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இளம் அமைச்சராக தான் சில பணிகளை நிறைவுசெய்ததாகவும், இந்தச் சாதனையை தற்போது தன்னைவிட இளம் வயதில் அமைச்சர் ஜீவன் தொண்டமான் முறியடித்து, இளம் அமைச்சருக்கான சாதனையை தன்வசப்படுத்தியுள்ளார் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அத்துடன், இளம் தலைமுறையினர் இவ்வாறான சாதனையை செய்ய முன்வர வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். சுமார் 169,000 மக்களின் சுத்தமான குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் கேகாலை, அரநாயக்க நீர் விநியோகத் திட்டம் ஜனாதிபதியினால் மக்களிடம் கையளிக்கப்பட்ட நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். கேகாலை மாவட்டத்தின் அரநாயக்க, மாவனல்ல, ரம்புக்கன பிரதேச செயலகங்களுக்குரிய 135 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் நிலவிய குடிநீர் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் இலங்கை அரசாங்கத்தின் 3,847 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு, நெதர்லாந்து அரசாங்கத்தின் 18,650 மில்லியன் ரூபா கடனுதவியின்…

Read More

சட்டவிரோத மதுபானம் தயாரிக்கும் இடத்தை சுற்றிவளைத்த போது பொலிஸார், அங்கிருந்தவர்கள் தப்பியோடி வீடொன்றுக்குள் ஒழிந்துக்கொண்டனர். அப்போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 18 வயது சிறுவன் காயமடைந்துள்ளான். அத்துடன், நாயொன்று உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம், கம்பளை பொலிஸ் பிரிவின் ஞாயிற்றுக்கிழமை (21) காலை இடம்பெற்றள்ளது.

Read More

தேசிய பாடசாலைகளுக்கு சிறுவர்களை அனுமதிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தேசிய பாடசாலைகளின் இடைநிலை தரங்களுக்கு சிறுவர்களை அனுமதிப்பதற்கான கடிதங்களை கல்வி அமைச்சு வெளியிடுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அந்தந்தப் பாடசாலைக்கு பதிவுத் தபால் மூலம் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என்றும் அமைச்சு அறிவித்துள்ளது.

Read More

பிரசித்திபெற்ற பாடசாலையில் தரம் 6இல் கல்விப்பயிலும் 10 வயது சிறுமியான மாணவியை, வானொன்றில் பலவந்தமாக ஏற்றி, கடத்திச்செல்வதற்கு முயன்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்வதற்கான விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பண்டாவளை பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை (21) தெரிவித்தனர். பண்டாரவளை, துஹூல்கொல்ல பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட, பண்டாரவளை நகரில் பிரசித்தி பெற்ற பாடசாலையில் கல்விப்பயிலும் சிறுமியான மாணவியையே இவ்வாறு கடத்திச் செல்வதற்கு முயன்றுள்ளார். கடந்த வௌ்ளிக்கிழமை (19) பாடசாலை நிறைவடைந்ததும், பஸ்ஸூக்கு செல்வதற்காக தனியாக நடந்து சென்றுக்கொண்டிருந்த போதே, பாடசாலையில் இருந்து சுமார் 500 மீற்றர் தூரத்தில், வௌ்ளை வானொன்று வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்துள்ளது. முகத்துக்கு கறுப்புத் துணியை கண்டியிருந்த இளைஞன் ஒருவர், அந்த வானில் இருந்து இறங்கி, சிறுமியின் அருகில் வந்து, தாய்க்கு சுகமில்லை. அவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளோம். உன்னிடம் இந்த சொக்கலேட்டை கொடுத்து, வானில் ஏற்றிக்கொண்டு வரச்சொன்னார் என்று மாணவியிடம் அந்த நபர் தெரிவித்துள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளார். எனினும்,…

Read More

டி சந்ரு நானுஓயா நிருபர் நுவரெலியாவில் பிரதான நகரில் பிரசித்தி பெற்ற புதிய கடை வீதியில் அமைந்துள்ள ஹோட்டலொன்றில் சமையல் எரிவாயு கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் காயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வழக்கம் போல் உணவகத்தில் சமையல் வேலை செய்வதற்கு எரிவாயு அடுப்பை செயற்படுத்திய போது சமையல் எரிவாயு அடுப்பில் வாயு கசிந்து தீ விபத்து ஏற்படுள்ளதாகவும் , இதையடுத்து ஹோட்டலில் தொழில் புரியும் ஊழியர்களும் , ஏனைய வர்த்தக நிலைய ஊழியர்களும் ஒன்றிணைந்து, தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும் சம்பவத்தில் எவருக்கும் உயிர் ஆபத்து ஏற்படவில்லை எனவும் காயமடைந்தவர்கள் மூவரும் 42 , 44 , 63 என வயதுடையவர்கள் எனவும் ஹோட்டல் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Read More

மஸ்கெலியா விசேட நிருபர்.செ.தி.பெருமாள்.21.05.2023. மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புரவுன்சீக் தோட்ட பகுதியில் சட்ட விரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டு வந்த இருவர் மஸ்கெலியா பொலிசாரின் சுற்றி வளைப்பின் போது கைது செய்யப்பட்டு, இன்று பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எதிர்வரும் 24 ம் திகதி ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி பணித்துள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், 20.05.2023 மஸ்கெலிய பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல்களை தொடர்ந்து மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமாரவின் பணிப்புரையின் படி, மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொலிசார் புரவுன்சீக் தோட்ட பகுதியில் சுற்றி வளைப்பினை மேற்கொண்டபொழுது சட்ட விரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டு வந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் அகழ்வின் போது அங்கு அகழ்விற்காக பயன்படுத்திய ஆயுதம் மற்றும் கூடைகள் கைப்பற்றப்பட்டுள்ளது எனவும், அவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டு எதிர்வரும் 24.05.2023 அன்று…

Read More

மஸ்கெலியா விசேட நிருபர்.செ.தி.பெருமாள்.21.05.2023. கடந்த சில நாட்களாக மத்திய மலைநாட்டில் மாலை வேளையில் பெய்த கன மழையால் கென்யோன் நீர் தேக்கத்தில் அதிகளவில் குப்பைகள் நிறைந்து காணப்பட்டது. இன்று காலை 8 மணி முதல் கென்யோன் நீர் மின் நிலைய பணியாளர்கள் மூலமாக இந்த நீர் தேக்கத்தின் வான் கதவுகள் மற்றும் நீர் தேக்கத்தின் கீழ் பகுதியில் உள்ள நீரை வெளியேற்றும் குழாய் வழியாக நீரை அகற்றி அந்த நீர் தேக்கத்தின் உள்ள அனைத்து குப்பைகள் அகற்ற பட்டு மீண்டும் நீர் நிரப்பும் பணி இடம் பெற்றது. இதன் போது அந்த நீர் தேக்கத்தில் நிறைந்து கணப்பட்ட வனப் பகுதியில் இருந்து வந்த கழிவுகள் மற்றும் விறகு கட்டைகள் அப் பகுதியில் உள்ள குடியிருப்பாளர்களினால் வீசப்பட்ட பிலாஸ்டிக் பொருட்கள் மற்றும் பொலித்தீன் உறைகள் போன்றவை அகற்றி சுத்தபடுத்த பட்டது.

Read More

மஸ்கெலியா விசேட நிருபர்.செ.தி.பெருமாள்.22.05.2023. நோட்டன் பொலிஸ் பிரிவில் உள்ள திபட்டன் லக்க்ஷபான தோட்டத்தில் சுமார் 150 குடும்பங்கள் கடந்த 200 ஆண்டு காலமாக பாட்டன், பாட்டி, தாத்தா, அம்மாய், தந்தை, தாய் பிள்ளைகள் என நான்கு தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வருகின்றனர். கடந்த 198 வருடமாக அங்கு பணிபுரியும் ஊழியர்கள் மரணம் அடைந்தாள் அவர்களின் இறுதி கிரியைகள் நடத்த இலகுவான இடம் ஒன்றை அக்காலத்தில் உரிமை வகித்த வெள்ளையர்கள் வழங்கி இருந்தனர். அதன் பின்னர் பொறுப்பேற்ற இஸ்லாமியரும் கூட அதே இடத்தில் இறுதி கிரிகை நடத்த எவ்விதமான எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. தற்போதைய நிர்வாகம் அந்த இடத்தில் இறுதி கிரிகை நடத்த கூடாது என கூறி கடந்த வருடம் ஒரு பெண் தொழிலாளி மரணித்த போது பிரேதத்தை காலம் காலமாக இறுதி கிரிகை செய்த இடத்தில் செய்ய வேண்டாம் என கோரிக்கை முன் வைத்த போது நோட்டன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உத்தரவின்…

Read More