Author: Thana

ரஷ்யாவின் நிறுவனங்கள் மீது புதிய பொருளாதார தடைகளை பிரித்தானியா விதித்துள்ளது. அதனடிப்படையில் ரொசடொம் நிறுவனத்துடன் சேர்ந்த நிறுவனங்களின் லேசர்கள் உட்பட நவீன பொருட்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் மீது தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ரஷ்யாவிலிருந்து வைரம், தாமிரம், அலுமினியம், நிக்கல் ஆகியவற்றின் இறக்குமதிக்கு தடை விதிப்பதாக பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார். டுவிட்டர் பதிவொன்றினூடாக இந்த விடயத்தை அவர் அறிவித்துள்ளார்.

Read More

பொரள்ளை, லெஸ்லி ரணகல மாவத்தை பகுதியில் தொடருந்து கடவைக்கு அருகில் இன்று (20) காலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. உந்துருளியில் பயணித்த நபர் ஒருவரை பிறிதொரு உந்துருளியில் வந்த இருவர் துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், குறித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Read More

நானு ஓயாவில் இரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட லபுக லை இளைஞன் தொடர்பில் நானு ஓயா  பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த சம்பம் நேற்று( 19.05)மாலை 7.30 அளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் நானுஓயா பகுதில் குறித்த இளைஞன் மது அருந்திய நிலையில் தனக்கு காதல் தோல்வி ஏற்பட்டது தொடர்பில் அங்கு இருந்த சிலரிடம்  பகிர்ந்து உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த இளைஞனின் சடலம் தற் போது நுவரெலியா வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு மேலதிக விசாரணைகளை நானு ஓயா பொ லிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Read More

கேகாலை மாவட்டத்தில் அரநாயக்க, மாவனெல்ல மற்றும் ரம்புக்கன ஆகிய பிரதேசங்கள் உள்ளடங்கக்கூடிய வகையில் சுத்தமான குடிநீரை பெற்றுக்கொள்ளும் நோக்கத்துடன் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையால் நிர்மாணிக்கப்பட்ட ஹெம்மாத்தகம நீர்வழங்கல் திட்டம் நாளை 20ம் திகதி பிற்பகல் 3 மணிக்கு அசுபினி எல்ல நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பொதுமக்கள் பாவனைக்கு கையளிக்கப்படவுள்ளது. நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்து கொண்டு தலைமை தாங்கி வைபவ ரீதியாக திறந்து வைத்து மக்களிடம் கையளிக்கவுள்ளார். இந்நிகழ்வில் பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த ஆகியோரின் பங்குபற்றலுடன், இராஜாங்க அமைச்சர்களான கனக ஹேரத், ரஞ்சித் சியம்லாபிட்டிய, தாரக பாலசூரிய, சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கரி கொப்பேகடுவ, இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் பொனி ஹோவெக், பாராளுமன்ற உறுப்பினர்களான…

Read More

ரிதிமாலியத்த பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மொறான பகுதியில் 55 வயதுடைய நபர் ஒருவர் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று மாலை சுமார் 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன் மொறான நீர் வடிகானுககு அருகில் அமைந்துள்ள அணைக்கட்டு பகுதியில் நின்று கொண்டு இருந்த வேளையிலேயே மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக ரிதிமாலியத்த பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபர் லிஹினியாகம , மொறான, யல்வெல மஹியங்கனை பகுதியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ராமு தனராஜா

Read More

மஸ்கெலியா நிருபர் செ.தி.பெருமாள்.19.05.2023. உலக சிலம்பம் சாம்பியன்ஸிப் போட்டி இந்தியாவில் பெங்களூரில் உள்ள கோமங்களம் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. இம்மாதம் 12ம் திகதி தொடக்கம் 14ம் திகதிவரை இடம்பெற்ற இப்போட்டியில் இந்தியா, இலங்கை, சுவீச்சர்லாந்து, இங்கிலாந்து, மலேசியா, பிரான்ஸ், சிங்கப்பூர், பெல்ஜியம், இத்தாலி, துபாய் ஆகிய பத்து நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்குப் பற்றினார்கள். சிலம்பத்தின் பகுதிகளான நெடுகம்பு வீச்சு, இரட்டை நடுகம்பு வீச்சு,வேல்கம்பு ஆகிய போட்டிகளுக்காக மலையகத்திலிருந்து சென்ற 19 வீரர்கள் 69 பதக்கங்களை பெற்று இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டனர். இவ்வீரர்களுக்கு பயிற்சியை திவாகரன், ராம்குமார், தினேஸ்குமார் வழங்கியமை குறிப்பிடத்தக்கது. இப் போட்டியில் ஹட்டன் ஹைலெவல் தனியார் கல்லூரியில் தரம் 6 யில் கல்வி பயிலும் மஸ்கெலியா லக்க்ஷபான தோட்டத்தை சேர்ந்த கிருஷ்ணகுமார் தீபா தம்பதிகளின் புதல்வன் ஜஸ்வின் சிலம்பு அடி போட்டியில் முதல் இடத்தை பெற்று தங்கப் பதக்கத்தையும் சிலம்பு சுற்றல் போட்டியில் மூன்றாவது இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தை…

Read More

மஸ்கெலியா நிருபர்.செ.தி.பெருமாள்.19.05.2023. மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள மொக்கா தோட்ட மேற் பிரிவில் தந்தை ஒருவர் தனது 20 வயது உடைய மகளுக்கு நஞ்சு பருக்கியதாக சந்தேகத்தின் பேரில் கடந்த 03 ம் திகதி இரவு கைது செய்யப்பட்டு 17ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க பட்டு இருந்தவர், மேலும் ஒரு குற்றச்சாட்டு உள்ளாகி நேற்று 17.05.2023.அன்று ஹட்டன் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர் படுத்த பட்ட வேலையில் சந்தேக நபரை மீண்டும் எதிர் வரும் 31ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் பனித்துள்ளார். இவ்வாறு மீண்டும் விளக்கமறியல் சென்றவர் மொக்கா தோட்ட மேற் பிரிவில் உள்ள 46 வயது உடைய 4 குழந்தைகளின் தந்தையாவார். என.மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில் நேற்று கடந்த 2.ம் திகதி இச் சம்பவம் மொக்கா தோட்ட மேற் பிரிவில் இடம் பெற்று உள்ளது. நஞ்சு பருக்கியதாக…

Read More

மலையகம் -200 என்ற தொனிப்பொருளின் கீழ் வெள்ளிக்கிழமை 19 சனிக்கிழமை 20 மற்றும் ஞாயிற்றுக்கிழமை 21 ஆகிய தினங்களில் நுவரெலியா மாவட்டத்தில் இடம்பெறுகின்றது. மலையகத்தின் 200 வருடகால வரலாற்றை நடமாடும் அருங்காட்சியகம் ஊடாக 25 மாவட்டங்களுக்கு கொண்டு செல்லும் நோக்கில் இந்த நிகழ்வு இடம்பெறுகின்றது. ஆங்கிலேயர் ஆட்சியில் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு தொழில் நிமித்தம் அழைத்து வரப்பட்ட மலையக மக்களின் வரலாறு 200 ஆண்டுகளை அண்மித்துள்ளது. காலம் மாறினாலும் மலையக மக்களின் வாழ்க்கை தரம் இன்றும் திருப்தியளிக்க கூடிய அளவுக்கு முன்னேற்றமடையவில்லை. கல்வி,சுகாதாரம்,அரசியல் ஆகிய அடிப்படை காரணிகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் லயன் வாழ்க்கை இன்றும் ஒரு நினைவு சுவடாகவே காணப்படுகிறது. இந்நிலையில், 200 ஆண்டுகாலத்தை முன்னிட்டு இன்று வெள்ளிக்கிழமை 19, சனிக்கிழமை 20 மற்றும் ஞாயிற்றுக்கிழமை 21 ஆகிய திகதிகளில் நுவரெலியா மாவட்டத்தில் ‘மலையகம் -200’ என்ற தொனிப்பொருளின் கீழ் விசேட மூன்று நாள் நிகழ்வு இடம்பெறுகிறது.…

Read More

தந்தை தனது மகளுக்கு நஞ்சு பருக்கியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபர் மீண்டும் எதிர் வரும் 30திகதி வரை விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளார். மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள மொக்கா தோட்ட மேற் பிரிவில் தந்தை ஒருவர் தனது 20 வயது உடைய மகளுக்கு நஞ்சு பருக கொடுத்ததாக சந்தேகத்தின் பேரில் கடந்த 03 ம் திகதி இரவு கைது செய்யப்பட்டு 17ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க பட்டு இருந்தவர், மேலும் ஒரு குற்றச்சாட்டு உள்ளாகி நேற்று 17.05.2023.அன்று ஹட்டன் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர் படுத்த பட்ட வேலையில் சந்தேக நபரை மீண்டும் எதிர் வரும் 31ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் பனித்துள்ளார். இவ்வாறு மீண்டும் இவ்வாறு விளக்கமறியலில் உள்ளவர் மொக்கா தோட்ட மேற் பிரிவில் உள்ள 48 வயது உடைய மூன்று பெண் குழந்தைகளின் தந்தையாவார் என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார…

Read More

நானுஓயா நிருபர் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் மீண்டும் கண் சத்திரசிகிச்சைகள் ஆரம்பம். நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கண் சத்திரசிகிச்சை செய்யப்பட்ட 10 நோயாளர்களின் பார்வையில் பாதிப்பு ஏற்பட்டது , ஏப்ரல் மாதம் கண் சத்திரசிகிச்சைக்குள்ளான 10 நோயாளர்கள் தாம் மீண்டும் உரிய பார்வை கிடைக்காமல் தொடர்ந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றன . இதன் காரணமாக ஏப்ரல் மாதம் 05 சத்திரசிகிச்சைக்குள்ளான மொத்தமாக 32 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றன இவர்களின் ஒருசிலருக்கு பார்வை மிகவும் பலவீனம் அடைந்துள்ளமை காரணமாக வைத்தியசாலையில் கண் அறுவை சிகிச்சையை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது . எனினும் பார்வையில் பாதிப்பு ஏற்பட்டதுக்கு முக்கிய காரணமாக அமைந்தது இந்த சத்திரசிகிச்சையின் பின் பாவிக்கப்பட்ட இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மருந்தை பயன்படுத்தியமையால் கண் சத்திர சிகிச்சையின் பின்னர் ஏற்பட்ட கிருமி தொற்றுகாரணமாக ஏற்பட்ட சிக்கல் தான் பிரதான காரணம்…

Read More