Author: Thana
புதையல் தோண்டிய மூவர் பசறை பொலிஸாரால் இன்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். பசறை பிபில வீதி 13 ஆம் கட்டை மெத்தக்கடைக்கு மேல் உள்ள கோவில் ஒன்றில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் ஒரு பெண் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு ஹோமாகம பகுதியை சேர்ந்த பூசாரியான 60 வயதுடைய பெண்ணொருவரும் 30 மற்றும் 40 வயதுடைய ஆண்கள் இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த காட்டுப்பகுதியில் உள்ள கற்களால் ஆன பழமை வாய்ந்த கோவில் ஒன்றில் புதையல் தோண்டுவதாக பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி E.M.பியரட்னவிற்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அவரின் வழிகாட்டுதலின் கீழ் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த சந்தேக நபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். பசறை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவை சேர்ந்த பொலிஸ் உத்தியோத்தர்களான சமில் உபுல் நிரஞ்சன் ஜயவீர ஆகியோரே இக்கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். புதையல் தோண்டுவதற்காக பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் உட்பட பூஜை பொருட்களையும்…
2,000 ரூபா நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி நேற்று அறிவித்துள்ளது. மேலும் தற்போதுள்ள நோட்டுகளை வங்கிக் கணக்குகளில் வைப்பு செய்யலாம் அல்லது செப்டெம்பர் 30 ஆம் திக்திக்குள் மாற்றலாம் என அறிவித்துள்ளது. இருப்பினும், இந்த நோட்டு தொடர்ந்து சட்டப்பூர்வமானதாக இருக்கும் என்றும், செப்டம்பர் 30, 2023 க்குள் அவற்றை மாற்றிக்கொள்ளுங்கள் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. செயற்பாட்டு வசதிக்காகவும், வங்கிக் கிளைகளின் வழக்கமான செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் மே 23, 2023 முதல் எந்த வங்கியிலும் ரூ.2,000 நோட்டுகளை ஏனைய மதிப்புகளின் வங்கி நோட்டுகளாக மாற்றிக்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. எனவே, 2000 ரூபா நோட்டுகளை உடனடியாக வெளியிடுவதை நிறுத்துமாறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
இணையத்தளம் ஊடாக பொருட்களை விற்பனை செய்வதை ஒழுங்குபடுத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தலை, நுகர்வோர் விவகார அதிகார சபை வெளியிட்டுள்ளது. இதற்கமைய, இணைய சந்தை தளத்தை இயக்குபவர்கள், பொருட்களை விளம்பரப்படுத்தும் போது எந்தவொரு பிரதிநிதித்துவத்தையோ அல்லது தகவல் புறக்கணிப்பையோ செய்யக் கூடாது. அத்துடன், ஏமாற்றும், தவறாக வழிநடத்தும் அல்லது போட்டிக்கு எதிரான எந்தவொரு செயற்பாடுகளிலும் ஈடுபடக்கூடாது என அந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது. பொருளின் உண்மை விலையானது குறித்த பொருளுக்காக, இணைய சந்தை தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விலையாகும் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.அத்துடன், முன்பதிவை உறுதிப்படுத்தல், போக்குவரத்து மற்றும் விநியோகத்தை ஒருங்கிணைத்தல் மற்றும் முன்பதிவை இரத்துச் செய்யும் உரிமை என்பன குறித்த வர்த்தமானி மூலம் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன.
இந்த வருடம் இலத்திரனியல் கடவுச்சீட்டை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, இ-பாஸ்போர்ட்களை அறிமுகம் செய்வதற்கான கொள்முதல் நடவடிக்கையை ஏற்கனவே தொடங்கியுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்தார்.
ஐ.சி.சி. 2023 ஒருநாள் உலகக் கிண்ணத்துக்கான தகுதிகாண் போட்டிக்கான இலங்கை அணியில் டெஸ்ட் கிரிக்கெட் அணித் தலைவர் திமுத் கருணாரத்ன இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். தொடக்க ஆட்டக்காரர்களான குசல் ஜனித் பெரேரா மற்றும் பத்தும் நிஸ்ஸங்க ஆகியோருக்கு காயம் ஏற்பட்டதன் காரணமாக, திமுத் கருணாரத்ன இப் போட்டிக்கு இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். திமுத் கருணாரத்ன அண்மைய ஆண்டுகளில் இலங்கையின் மிகச்சிறந்த டெஸ்ட் துடுப்பாட்ட வீரராக இருந்து வருகிறார். எனினும் பல புதிய முகங்களுக்கு வாய்ப்பு வழங்குவதற்காக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தேர்வாளர்கள், பல முன்னணி வீரர்களுடன் ஒருநாள் மற்றும் டி:20 கிரிக்கெட்டில் திமுத் கருணாரத்னவுக்கு வாய்ப்புகள் வழங்கவில்லை. இந்நிலையில் ஐ.சி.சி. 2023 ஒருநாள் உலகக் கிண்ணத்துக்கான தகுதிச் சுற்று இலங்கை அணியில் திமுத் கருணாரத்ன மற்றும் அஞ்சலோ மெத்தியூஸ் ஆகியோரை இணைத்துக் கொள்ள தேர்வாளர்கள் முடிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தகுதிச் சுற்றுப் போட்டிகள் எதிர்வரும் ஜூன் மாதம் சிம்பாப்வேயில் ஆரம்பமாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
களனி பல்கலைக்கழகத்தில் 18ஆம் திகதி இரவு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட 8 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மஹர நீதவான் நீதிமன்றத்தில் நேற்று பிற்பகல் ஆஜர்படுத்தப்பட்டனர். அதன்போது, அவர்கள் தலா 5 இலட்சம் ரூபா வீதமான சரீர பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், மாதத்திற்கு ஒரு முறை கிரிபத்கொடை பொலிஸ் நிலையில் ஆஜராக வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டது.
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தலைவர் ஷம்மி சில்வா 2023 முதல் 2025 வரையிலான காலப்பகுதிக்கு போட்டியின்றி SLC இன் தலைவராக மீண்டும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் (SLC) வருடாந்த பொதுக்கூட்டம் இன்று காலை கொழும்பில் நடைபெற்றது. இதன்போதே மேற்கண்ட தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நியூஸிலாந்து தேசிய மகளிர் கிரிக்கெட் அணி எதிர்வரும் ஜூன் மாதம் இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளது. இலங்கை வரும் நியூஸிலாந்து அணி, ஒருநாள் மற்றும் டி:20 தொடர்களில் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியுடன் மோதும். ஐ.சி.சி மகளிர் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக ஒருநாள் தொடர் நடத்தப்படுவதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது. நியூசிலாந்து அணி எதிர்வரும் ஜூன் 23 ஆம் திகதி நாட்டை வந்தடையும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு தொடர்பான ஏனைய 11 பாடங்களுக்கான மதிப்பீடு இன்று(20) முதல் 32 நிலையங்களில் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதுவரை 05 பாடங்களின் மதிப்பீட்டுப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். பூர்த்தி செய்யப்பட்ட விடைத்தாள்களை பரீட்சை திணைக்களத்திற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சை ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார். பொது ஆங்கிலம் பாடம் தொடர்பான விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணி எதிர்வரும் 26ம் திகதி முதல் 100 மையங்களில் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்யும் புதிய வேலைத்திட்டம் நேற்று(19) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இங்கு வாகனம் ஓட்டுபவர்களின் சிறுநீர் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு அவர்கள் குடிபோதையில் இருக்கிறார்களா, இல்லையா என்பதை கண்டறிய வேண்டும். இங்கு குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களை பொலிஸ் நிலையங்களுக்கு அழைத்துச் சென்று அவர்களின் சிறுநீர் மாதிரிகள் பரிசோதிக்கப்படுகின்றன. மது மட்டுமின்றி போதைப்பொருளும் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய முடியும் என பொலிசார் தெரிவித்தனர். முதற்கட்ட விசாரணையில், மது அருந்தியிருப்பது மட்டும் கண்டுபிடிக்கப்பட்டது. புதிய வேலைத்திட்டத்தின் கீழ் 06 வகையான மதுபானம் மற்றும் போதைப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய முடியும். முன்னதாக வாகன சாரதிகளின் சிறுநீர் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. ஆனால் அது ஒரு மருத்துவரின் மேற்பார்வையில் நடந்தது. இன்று முதல் பொலிஸாரின் நேரடித் தலையீட்டில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளமை இதன் விசேட அம்சமாகும். இந்த முன்னோடித் திட்டத்தை செயல்படுத்துவதற்குத் தேவையான உபகரணப் பெட்டிகள் தற்போது காவல் நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.…