Author: Thana
வடமாகாணம்- யாழ்ப்பாண மாவட்டம் – சாவகச்சேரி, மட்டுவில்- அருள்மிகு பன்றித்தலைச்சி அம்மன் திருக்கோயில் வந்தவரை வாழவைத்து வரும் துன்பம் போக்கிடுவாய் நத்தியுந்தன் அடி பணிவோர் நலமனைத்தும் தந்திடுவாய் நிம்மதியாய் நாமென்றும் நிலைபெற்று வாழ்ந்திடவே மட்டுவிலில் எழுந்தருளும் பன்றித்தலைச்சி அம்மா உன் தாள் போற்றி தேடிவந்து பொங்கலிட்டு வழிபடுவோர் துயர் களைவாய் ஓடிவந்து தொழுது நிற்போர் மனம் மகிழச் செய்திடுவாய் நாடியுன்னை நோக்கிடுவோர் நலன்கள் பெற்று வாழ்ந்திடவே மட்டுவிலில் எழுந்தருளும் பன்றித்தலைச்சி அம்மா உன் தாள் போற்றி துன்பங்கள் அண்டாமல் காத்தெம்மை வாழவைப்பாய் இன்பநிலை தந்தெம்மை இனிதாக இருக்கச் செய்வாய் பண்புடனே நம் வாழ்வு சீராக அமைந்திடவே மட்டுவிலில் எழுந்தருளும் பன்றித்தலைச்சி அம்மா உன் தாள் போற்றி வாழ்வுக்குறுதி தந்து வளமாக இருக்கச் செய்வாய் வெறுப்பில்லா மனம் தந்து வெற்றிகளை அடையச் செய்வாய் வெற்றியுடன் வாழ்வு தந்து மனவலிமை பெற்றிடவே மட்டுவிலில் எழுந்தருளும் பன்றித்தலைச்சி அம்மா உன் தாள் போற்றி துணை கேட்டு…
நடிகர் சரத்பாபு காலமானதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என அவரது சகோதரி தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நடிகர் சரத்பாபு, தனது 71வது வயதில் காலமானதாக தமிழக செய்தி தொலைக்காட்சிகள் சற்று முன்னர் செய்தி வெளியிட்டிருந்தன. எனினும், அந்த செய்தி போலியானது என அவரது சகோதரி தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக உடல்நல குறைவால் ஹத்ராபாத்திலுள்ள வைத்தியசாலையில் சரத்பாபு சிகிச்சை பெற்றுவருகின்றார்.
வெலிகம – பெலென பகுதியிலுள்ள தொடருந்து கடவையொன்றில் முச்சக்கர வண்டியொன்று தொடருந்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் மேலும் மூவர் காயமடைந்து மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெலிகம காவல்துறையினர் தெரிவித்தனர்.இன்று (3) பிற்பகல் வெலிகம – பெலன உரக் களஞ்சியசாலைக்கு அருகிலுள்ள கடவையில், மாத்தறையிலிருந்து கண்டி நோக்கி பயணித்த தொடருந்துடன் குறித்த முச்சக்கரவண்டி மோதியுள்ளது.முச்சக்கரவண்டியில் தாயுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பிள்ளைகளும் மற்றுமொரு உறவினரும் பயணித்துள்ளனர்.இராணுவத்தில் கடமையாற்றி விடுமுறையில் வந்திருந்த 32 வயதுடைய அவர்களின் உறவினர் ஒருவர், முச்சக்கரவண்டியை ஓட்டிச் சென்றதாகவும், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.அத்துடன், இந்த விபத்தில் பலத்த காயமடைந்த 9 வயது சிறுவன் ஒருவனும் மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளான்.ஏனைய இரண்டு பிள்ளைகளும், தாயும் சிகிச்சைக்காக மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.வெலிகம – பெலியான, மோதரவத்தை பிரதேசத்தைச் சேர்ந்தவர்களே இந்த சம்பவத்துக்கு முகங்கொடுத்துள்ளனர்.விபத்து தொடர்பில் வெலிகம…
நுவரெலியா நானுஓயா எடின்பரோ தோட்டத்தைச் சார்ந்த 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேற்றைய தினம் ( 02 ) தேயிலை தொழிற்சாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர். கடந்த வாரம் தோட்ட தொழிலாளர்களுக்கு தோட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்ட கோதுமை மாவில் பூச்சி ,வண்டு மற்றும் எலிகளின் கழிவுகள் காணப்பட்டமையைக் கண்டித்தும் 300 கிலோ கோதுமை மா தொழிலாளர்களுக்கு வழங்காமல் களஞ்சியசாலையில் வைத்திருந்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது ”தோட்ட நிர்வாகம், தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய சலுகைகள் வழங்காது கொழுந்து பறிப்பதில் மாத்திரம் தொழிலார்களிடம் கடுமையாக நடந்து கொள்வதாகவும், இங்கு பறிக்கப்படும் கொழுந்துகளை் வேறு தொழிற்சாலைகளுக்கு அனுப்பப் படுவதாகவும், தமக்கு இதுவரை சுகாதார வசதி மற்றும் ஏனைய வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை எனவும், அத்தோடு தோட்ட அதிகாரி மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு சரியான தீர்வு வழங்குவதில்லை எனவும் தோட்டத் தொழிலாளர்கள் கவலை தெரிவித்திருந்தனர். அத்துடன் இது குறித்து தோட்ட அதிகாரியிடம் மக்கள்…
இயக்குநரும், நடிகருமான மனோபாலா(69) உடல்நலக்குறைவால் காலமானார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார். மனோபாலாவின் திடீர் மறைவினால் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
இன்று நள்ளிரவு (03) முதல் அமுலாகும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் குறைப்பு. 12.5kg சிலிண்டர்: ரூ. 100 இனால் குறைப்பு (ரூ. 3,638) – 5kg சிலிண்டர்: ரூ. 40 இனால் குறைப்பு (ரூ. 1,462) – 2.3kg சிலிண்டர்: ரூ. 19 இனால் குறைப்பு (ரூ. 681)
சர்வதேச ஊடக சுதந்திர தினம் இன்று(03) அனுஷ்டிக்கப்படுகிறது. இற்றைக்கு 30 வருடங்களுக்கு முன்னர் இன்றைய தினத்தை(03) சர்வதேச ஊடக சுதந்திர தினமாக அனுஷ்டிப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபை பரிந்துரைத்தது. ”உரிமைகளுக்கான எதிர்காலத்தை வடிவமைத்தல், ஏனைய அனைத்து வகையான மனித உரிமைகளுக்கும் ஒரு இயக்கியாக கருத்து சுதந்திரம் காணப்படல் வேண்டும்” என்பதே இம்முறை ஊடக சுதந்திர தினத்திற்கான தொனிப்பொருளாக காணப்படுகிறது. 1986ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17ஆம் திகதி தமது ஊடக நிறுவனத்திற்கு முன்பாக கொடூரமாக கொலை செய்யப்பட்ட கொலம்பிய ஊடகவியலாளர் Guillermo Cano-ஐ நினைவுகூரும் வகையில் இந்த நாள் ஒதுக்கப்பட்டுள்ளது. 180 நாடுகளை உள்ளடக்கிய சர்வதேச ஊடகச்சுட்டியில் கடந்த வருடம் நோர்வே முதல் இடத்தை தன்வசப்படுத்தியது. சர்வதேச ஊடகச் சுட்டியில் 2022 ஆம் ஆண்டு இலங்கை 146 ஆவது இடத்தில் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அண்மையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமானது, இலங்கையில் ஊடகங்களுக்கு காணப்படும் சுதந்திரம் தொடர்பில் பாரிய சிக்கல்…
கம்பளை – அம்புலுவாவ சரணாலயத்தில் மூன்று நாட்களாக நிர்வாணமாக அலறிக் கொண்டிருந்த பெண் ஒருவரை கம்பளை தலைமையக பொலிஸார் இன்று கண்டுபிடித்துள்ளனர். சுமார் மூன்று நாட்களாக வனப்பகுதியில் அவ்வப்போது பெண் ஒருவர் அலறல் சத்தம் கேட்டதாக தெரிவித்த உள்ளூர்வாசிகள் குழு, குறித்த வனப்பகுதிக்குள் சென்று ஆராய்ந்தனர். அப்போது ஒரு பெண் உடலில் ஆடை இல்லாமல் இருப்பதைக் கண்ட பிரதேசவாசிகள் கம்பளை தலைமையக பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர் கம்பளை தலைமையக பொலிஸாரின் பெண் உத்தியோகத்தர்கள் குழுவொன்று வந்து அந்த பெண்ணுக்கு ஆடை அணிவித்து அதிகாரிகளின் காவலில் எடுத்துச் சென்றுள்ளனர். பொலிஸ் அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்ட பெண் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதியின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பெண்ணின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இந்த பெண்ணின் அடையாளத்தை கண்டறிய பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் கூற்றுப்படி, வெசாக் பண்டிகைக்காக தன்சல்களை நடத்தும் போது, சம்பந்தப்பட்ட ஏற்பாட்டாளர்கள் அந்தந்த அதிகார வரம்பில் உள்ள சுகாதார மற்றும் மருத்துவ அதிகாரிகளின் அலுவலகங்களில் பதிவைப் பெற வேண்டும். சுகாதார உத்தியோகத்தர் அலுவலகங்களில் பொது சுகாதார பரிசோதகர்கள் உரிய பணிகளை மேற்கொண்டு வருவதுடன், பதிவு பெறும் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு பாதுகாப்பான முறையில் தன்சலை நடத்துவது குறித்த அறிவுறுத்தல்களை வழங்க உள்ளதாக சங்க செயலாளர் தெரிவித்துள்ளார். பொது சுகாதார பரிசோதகர்கள் தன்சல்கள் நடைபெறும் நாட்களில் பரிசோதனைகளை மேற்கொண்டு பாதுகாப்பான முறையில் தன்சல்கள் நடத்தப்படுவதை உறுதி செய்வார்கள் எனவும் அவர் தெரிவித்தார். உணவுப் பொருட்களை பாதுகாப்பான முறையில் தயாரிப்பதுடன், மூலப்பொருட்களின் சேமிப்பு மற்றும் டன்சல்கள் நடத்தப்படும் இடங்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும், பொது சுகாதார பரிசோதகர்கள் இது தொடர்பில் தேவையான அறிவுறுத்தல்களை வழங்குவதற்கு செயற்பட்டு வருவதாகவும் இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கையில், இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 15 பேருக்கு மலேரியா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். மலேரியா தொற்று பரம்பல் உள்ள நாடுகளுக்கு சென்று திரும்பியவர்களுக்கு இவ்வாறு தொற்றுறுதியாகியுள்ளது. 14 ஆண்டுகளின் பின்னர், இந்த ஆண்டு, பேருவளை பகுதியைச் சேர்ந்த ஒருவர், மலேரியா தொற்றினால் உயிரிழந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஆபிரிக்க நாட்டுக்கு சென்று திரும்பியிருந்த நிலையில், அவருக்கு மலேரியா தொற்று உறுதியாகியுள்ளது. இதேவேளை, யாழ்ப்பாணம் – உடுவில் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு, கடந்த 30 ஆம் திகதி மலேரியா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மலேரியா பரம்பல் குறித்து யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு விளக்கமளித்தார்.