Author: Thana
பொகவந்தலாவையில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி, மாணவர்கள் உள்ளடங்களாக ஏழுவர் வைத்தியசாலையில் அனுமதி.
அட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட பொகவந்தலாவை எல்பட தமிழ் வித்தியாலயத்தின் மாணவர்கள் இன்று (2) குளவி கொட்டுக்கு இலக்காகி டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர். இன்று காலை குறித்த மாணவர்கள் பாடசாலைக்கு சென்றுக் கொண்டிருந்த வேளையில் பாடசாலைக்கு அருகாமையில் உள்ள மரத்தில் இருந்த குளவி கூட்டினை கழுகு மோதியமையினால் குளவி கூடு கலைந்து மாணவர்களை கொட்டியதாக தெரிவிக்கப்படுகின்றது. எல்பட தமிழ் வித்தியாலயத்தின் ஆண் மாணவர் ஒருவரும் 05 பெண் மாணவிகளும் மற்றும் பொகவந்தலாவ ஹோலிரோஸரி தமிழ் மகாவித்தியாலயத்தில் கல்வி பயிலும் ஒரு மாணவியுமே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் காரணமாக இன்றைய தினம் அட்டன் வலயக் கல்விப் பணிமனையின் பணிப்பாளரின் பணிப்புரைக்கமைய பாடசாலை மூடப்பட்டதாக எல்பட தமிழ் வித்தியாலயத்தின் அதிபர் தெரிவித்தார். இதேவேளை சம்பவத்தை அறிந்த பிரதேச மக்கள் மரத்திலிருந்த குளவி கூடுகளை தீ வைத்து அழித்தமையும் குறிப்படதக்கது.
ப்ரொட்டெக் சங்கத்தின் ஏற்பாட்டில் மே தினத்தை முன்னிட்டு, வீட்டுத் தொழிலாளர்களின் உரிமைகளை சட்டபூர்வமாகுதல் மற்றும் முறைசாரா தொழிற்துறை ஊழியர்களின் உரிமைகளை வென்றெடுத்தல் அவர்களின் சமூக பாதுகாப்பு திட்டங்களை உருவாக்கக் கோரி, கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமும் பேரணியும் நேற்று (01) ஹட்டன் மல்லியப்பூ சந்தியில் இருந்து பஸ் தரிப்பிடம் வரை சென்றது. சுமார் 200க்கும் மேற்பட்டோர் இப்பேரணியில் கலந்து கொண்டிருந்தனர். கருப்பையா மைதிலி ப்ரொட்டெக் சங்கத்தின் உப தலைவியின் தலைமையில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வடமாகாணம்- கிளிநொச்சி மாவட்டம், கிளிநொச்சி, அருள்மிகு சித்தி விநாயகர் திருக்கோயில் வினைதீர்த்து அருள் வழங்கும் விநாயகரே வீரமிகு மனவுறுதி எமக்களிக்க வாருமைய்யா வெற்றிகளை நாம் பெற்று தலை நிமிர்ந்து வாழ்வதற்கு ஏற்றவழி காட்டுமைய்யா கிளிநொச்சி கோயில் கொண்ட சித்தி விநாயகரே மலைத்து நிற்போர் மனக்கவலை தீர்த்தருளும் விநாயகரே மாற்றமில்லா நல்வாழ்வை எமக்கருள வாருமைய்யா தீரமிகு எதிர்காலம் பெற்று நாம் உயர்வாழ்வு வாழ்வதற்கு ஏற்றவழி காட்டுமைய்யா கிளிநொச்சி கோயில் கொண்ட சித்தி விநாயகரே வட இலங்கை வந்தமர்ந்து உலகிற்கு அருள் பொழியும் விநாயகரே பகையின்றி பசியின்றி வாழவழி செய்ய வாருமைய்யா வளம் கொண்ட தமிழ் மண்ணில் வளமுடனே வாழ்வதற்கு ஏற்றவழி காட்டுமைய்யா கிளிநொச்சி கோயில் கொண்ட சித்தி விநாயகரே துரத்தி வரும் துன்பங்களை தூர விலக்கும் விநாயகரே தொல்லையின்றி துன்பமின்றி வாழும் வழி தாருமைய்ய நேர்வழியில் நிறை வாழ்வு வாழ்வதற்கு ஏற்றவழி காட்டுமைய்யா கிளிநொச்சி கோயில் கொண்ட சித்தி விநாயகரே அறிவு தந்து…
கொழும்பு – துறைமுக நுழைவாயில் பகுதிக்கு அருகில் நடாத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 08 பேர் காயமடைந்து, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பு துறைமுகத்தின் தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரே இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர். புளூமெண்டல் தோட்டத்தைச் சேர்ந்தவர்களே துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளார். காயமடைந்தவர்களில் மூன்று பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு துறைமுகத்தின் 06 ஆவது நுழைவாயிலுக்கு அருகில், துறைமுகத்திற்கு சொந்தமான இரும்புகளை திருட வந்ததாக கூறப்படும் இருவரை விசாரணை செய்த போது, குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த சிலர் அங்கு வந்த அமைதியின்மையை ஏற்படுத்தியுள்ளனர். இதன்போது, தனியார் பாதுகாப்பு பிரிவின் உத்தியோகத்தர் ஒருவரின் துப்பாக்கியைப் பறிக்க சிலர் முயற்சித்த சந்தர்ப்பத்தில், மற்றுமொரு பாதுகாப்பு உத்தியோகத்தர் துப்பாக்கி சூட்டை நடாத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
(க.கிஷாந்தன்) ” பதுளை, மடுல்சீமை மக்களிடம் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மன்னிப்புகோர வேண்டும். அவ்வாறு இல்லையேல் ஐக்கிய மக்கள் சக்தியுடன் பயணத்தை தொடர்வதற்கு நான் தயாரில்லை.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார். தொழிலாள் தேசிய சங்கத்தின் மே தின கூட்டம் பதுளையில் இன்று (01.05.2023) நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு தலைமைதாங்கி உரையாற்றுகையிலேயே வடிவேல் சுரேஷ் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ” நாட்டில் தேசிய கொள்கைத்திட்டம் பற்றி பேசப்படுகின்றது. அவ்வாறு கொள்கைத் திட்டங்கள் வகுக்கப்படும் போது மலையக பெருந்தோட்ட மக்கள் ஓரங்கட்டப்படுகின்றனர். இந்நிலைமையை இனியும் அனுமதிக்க முடியாது. எமது மக்களும் இலங்கை பிரஜைகள்தான். அவர்களுக்கு எதற்காக ஓரவஞ்சணை காட்டப்படுகின்றது? இலங்கை மக்கள் அனுபவிக்கும் அத்தனை உரிமைகளும் எமது மக்களுக்கும் வேண்டும். எமது மக்கள் பயங்கரவாதிகள் அல்லர். பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டவில்லை. நாட்டின் வன்முறைகளில் ஈடுபட்டதில்லை.…
நுவரெலியா – இராகலையில் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் மேதினக்கூட்டமும்,ஊர்வலமும் முன்னெடுப்பு
(க.கிஷாந்தன்) புதிய ஜனநாயக மாக்சிசலெனினிசக் கட்சியின் மேதினக்கூட்டமும், ஊர்வலமும் நுவரெலியா – இராகலையில் இன்று (01.05.2023) இடம்பெற்றது. இராகலை நடுக்கணக்கு சந்தியில் இருந்து ஆரம்பமாகிய ஊர்வலம் நகரம் வழியாக இராகலை ஜெமினி மண்டபத்தை அடைந்தது. அங்கு மேதினக் கூட்டம் இடம்பெற்றது. ஊர்வலத்தின் போது அரசாங்க செயற்பாட்டை கண்டித்தும், தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்கும் செயற்பாட்டை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பபட்டதுடன், பதாதைகளையும் காட்சிப்படுத்திருந்தனர். குறித்த ஊர்வலத்தில் கட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள், ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் தலைமை உரையை ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரியின் உப பீடாதிபதி சிவ ராஜேந்திரன் நிகழ்த்தினார்.
(க.கிஷாந்தன்) மே தினத்தை முன்னிட்டு முறைசாரா துறையில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கான சமூக பாதுகாப்பு திட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்பது உட்பட மேலும் பல கோரிக்கைகளை முன்வைத்து ‘ப்றொடெக்ட்’ சங்கத்தின் கவனயீர்ப்பு போராட்டம் ஹட்டனில் இன்று (01.05.2023) நடைபெற்றது. அட்டன் மல்லியப்பு சந்தியில் ‘ப்றொடெக்ட்’ சங்கத்தின் மே தின கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது. ‘உரிமைகளை வென்றெடுக்க ஒன்றினைவோம்’ எனும் தொனிப்பொருளின் கீழ் ப்றொடெக்ட் தொழிற்சங்கத்தின் உப தலைவி கருப்பையா மைதிலி தலைமையில் இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் 100ற்கும் மேற்பட்டோர் பங்கேற்றிருந்தனர். வீட்டுத் தொழிலாளர்களும் தொழிலாளர்களே, அவர்களின் தொழில்சார் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும், புலம்பெயர் தொழிலாளர்களின் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பன உட்பட பல கோரிக்கைகள் முன்வைத்து பதாகைகள் ஊடாக காட்சிப்படுத்தபட்டிருந்தன. அத்தோடு, எதிர்ப்பு கோஷங்கள் எழுப்பியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.
(க.கிஷாந்தன்) நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய சங்கம் இன்று (01.05.2023) 59 ஆவது ஆண்டில் காலடி வைக்கின்றது. தொழிலாளர் தேசிய சங்கமானது 1965 ஆம் ஆண்டு மே முதலாம் திகதி மலையக தொழிற்சங்க துறவியென போற்றப்படும் வெள்ளையனால் ஆரம்பிக்கப்பட்டது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் இருந்து பிரிந்து சென்றே அச்சங்கம் உருவாக்கப்பட்டது. சி.வி. வேலுபிள்ளை உட்பட பல முக்கிய பிரமுகர்கள் மேற்படி சங்கத்தில் அங்கம் வகித்தனர். தொழிலாளர் தேசிய சங்கத்துக்கு தற்போது பழனி திகாம்பரம் தலைமை வகிக்கின்றார். தொழிலாளர் தேசிய சங்கம் அதன் அரசியல் கிளையாக செயற்படுகின்றது. தற்போது இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர். 58 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டும், மே தினத்தை முன்னிட்டும் அட்டனில் சிவசுப்பிரமணிய ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. அதன்பின்னர் கட்சி தலைமையகத்தில் கட்சி கொடி ஏற்றப்பட்டு, ‘கேக்’வெட்டப்பட்டு கொண்டாட்டம் இடம்பெற்றது. இந்நிகழ்வில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொது செயலாளர்…
மலையக பெருந்தோட்ட பகுதிகளை சுற்றியுள்ள முக்கிய நகரங்களில் அமைந்துள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அலுவலகங்களிலும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அங்கத்தவர்கள் அமைந்துள்ள தோட்டங்களிலும் மேதின நிகழ்வுகள் நடைபெற்றது. அட்டனில் அமைந்துள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமை காரியாலயத்தில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மறைந்த தலைவர்களான அமரர். சௌமியமூர்த்தி தொண்டமான் மற்றும் அமரர்.ஆறுமுகன் தொண்டமான் ஆகியோரின் புகைப்படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் கொடி ஏற்றப்பட்டு நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதி தலைவர் கணபதி கனகராஜ் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணி பொது செயலாளர் அர்ஜூன் ஜெயராஜ், உறுப்பினர் தயாளன் குமாரசுவாமி, அட்டன் டிக்கோயா நகரசபையின் முன்னாள் தலைவர் சடையன் பாலச்சந்திரன், தவிசாளர் எம்.ராமேஷ்வரனின் பிரத்யேக செயலாளர் ராஜன், காரியாலய உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
சமையல் எரிவாயுவின் விலை இன்னும் சில தினங்களில் குறையும் என ஜனாதிபதி அலுவலகத்தின் பிரதானியும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகருமான சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். பணவீக்கம் 70 சத வீதத்திலிருந்து 35 சத வீதமாக குறைந்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் அதை ஒற்றை இலக்கத்துக்கு கொண்டு வர முயற்சிக்கிறோம் என்றும் கூறினார். ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் உரையாற்றிய சாகல ரத்நாயக்க, ‘எண்ணெய் விலை குறைந்துள்ளதால், அடுத்த சில நாட்களில் எரிவாயுவின் விலையும் குறையும் என நம்புகிறோம் என்றார்.