Author: Thana

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை, மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல் அனுராதபுரம் – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் மட்டக்களப்பு – பி.ப.…

Read More

மத்திய மாகாணம்- கண்டி மாவட்டம், நாவலப்பிட்டி தாமரவல்லி, அருள்மிகு முருகன் திருக்கோயில் ஆறுமுகம் கொண்டு அருள் பொழியும் திருமுருகா ஆறுதலைத் தந்தெமக்கு அருளளிக்க வேண்டுமைய்யா ஆணவத்தை அடக்கிவிடு, அன்பு மனம் தந்துவிடு தாமரவல்லி கோயிலுறை முருகாவுன்னடி சரணம் கரங்கள் பன்னிரண்டு கொண்டு அணைத்தரும் திருமுருகா கரவில்லா மனத்துடனே வாழவழி வேண்டுமைய்யா கவலைகளைப் போக்கிவிடு நிம்மதியைத் தந்துவிடு தாமரவல்லி கோயிலுறை முருகாவுன்னடி சரணம் கோலமயில் மீதமர்ந்து அருள் வழங்கும் திருமுருகா கேடுகளைத் தடுத்தெமக்கு அருள் தரவே வேண்டுமைய்யா கொடு பகையைப் போக்கிவிடு குலமதனைக் காத்துவிடு தாமரவல்லி கோயிலுறை முருகாவுன்னடி சரணம் குன்றினிலே கோயில் கொண்டு குறைதீர்க்கும் திருமுருகா குவலயத்தில் நிம்மதியாய் வாழ அருள் வேண்டுமைய்யா குற்றங்கள் தந்து விடு தாமரவல்லி கோயிலுறை முருகாவுன்னடி சரணம் கணபதியின் இளையோனாய் வந்துதித்த திருமுருகா கௌரவமாய் நாம் வாழ வழி திறக்க வேண்டமைய்யா கேடுகள் அண்டாத நிலை தந்து காத்திடைய்யா தாமரவல்லி கோயிலுறை…

Read More

நானுஓயா நிருபர் செ.திவாகரன் நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நானுஓயா கிளாசோ தோட்ட நிர்வாகத்தின் ஊடாக கடந்த காலங்களில் அரிசி விலை அதிகரித்து இருந்தபோது தோட்டத் தொழிலாளர்களுக்கு விற்பனை செய்வதற்காக கொண்டுவரப்பட்ட 3000 கிலோ கிராம் அரிசியில் 1600 அரிசியினை தொழிலாளர்களுக்கு விற்பனை செய்துவிட்டு மிகுதியான 1400 கிலோ கிராம் அரிசியினை விலை குறைந்தமையால் வழங்கப்படாமல், அறையிலேயே பூட்டி வைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த சில நாட்களாக அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி காலாவதியான நிலையில் தோட்ட நிர்வாகத்தின் ஊடாக அவை கடந்த நாட்களில் குழிதோண்டி புதைக்கப்பட்ட நிலையில் நேற்று மீண்டும் தோண்டி செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டுள்ளது. நானுஓயா பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் படி பாவனைக்கு பொருத்தமற்ற அரிசியினை குழி தோண்டி புதைக்கப்பட்ட இடத்தினை கண்டறிந்து மீண்டும் தோன்றி எடுத்து அரிசியின் தரம் பற்றிய பரிசோதனைகளை முன்னெடுத்து வருகின்றன . குறித்த அரிசி இரண்டு ஆண்டுக்கு மேல் ஆனதால் கெட்டுப்…

Read More

சட்ட விரோதமான முறையில் அனுமதிப்பத்திரம் இன்றி துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் கிரியகல ஆக்கரத்தனை பகுதியை சேர்ந்த 38 வயதுடைய நபர் ஒருவரை விசேட அதிரடிப் படையினர் கைது செய்தனர். கைது செய்த நபரையும் துப்பாக்கி மற்றும் தோட்டா ஆகியவற்றை பசறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். பசறை பொலிஸார் சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் நேற்றைய தினம் பதுளை நீதவானிடம் ஆஜர் படுத்தினர். நீதவான் சந்தேக நபரை 14நட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்தார். பின்னர் இன்றைய தினம் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக பசறை ஆக்கரத்தனை விசேட அதிரடிப் படையினர் இன்றும் மேற் குறிப்பிட்ட சந்தேக நபரின் வீட்டை சோதனைக்கு உட்படுத்திய போது மேலும் ஒரு துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளதுடன் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை. துப்பாக்கி பசறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப் படையினர் தெரிவித்துள்ளனர். மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். ராமு…

Read More

செவ்வாயன்று ஐ.சி.சி. பிரீமியர் கிண்ண இறுதிப் போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸை வீழ்த்தியதன் மூலம் நேபாளம் 2023 ஆசியக் கிண்ணத்தில் தனக்கான இடத்தை பிடித்துள்ளது. இந்த வெற்றியின் மூலம், நேபாளம், இந்தியா மற்றும் பாகிஸ்தானுடன் இணைந்து ஆசிய கிண்ணத்தில் குழு ஏ பிரிவில் இடம் பிடித்துள்ளது. பி பிரிவில் ஆப்கானிஸ்தான், இலங்கை மற்றும் பங்களாதேஷ் உள்ளன. 2023 ஆசியக் கிண்ணம் அனைத்து அணிகளுக்கும் ஒரு முக்கிய போட்டியாகும். ஏனெனில் இது ஆசியாவின் சிறந்த அணி எது என்பதை தீர்மானிக்கும். மேலும் 2023 உலகக் கிண்ணத்துக்கான ஆயத்தமாக இது அமையும். போட்டி தொடர்பான சில குறிப்புகள் தொடர் 50 ஓவர் கொண்ட ஒருநாள் போட்டியாக நடைபெறும். இப் போட்டியில் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் நேபாளம் ஆகிய ஆறு அணிகள் பங்கேற்கின்றன. இந்த தொடர் பாகிஸ்தானில் 2023 செப்டம்பர் 2 முதல் செப்டம்பர் 17 வரை நடைபெற உள்ளது.

Read More

நேற்று நடைபெற்ற லக்னோ – பெங்களூரு இடையேயான போட்டியில் மைதானத்தில் வார்த்தை மோதலில் ஈடுபட்டமைக்காக விராட் கோலி மற்றும் கவுதம் கம்பீர் ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஐ.பி.எல். நடத்தை விதிகளை மீறியமைக்காக இருவருக்கும் போட்டி கட்டணத்திலிருந்து 100 சதவீதம் அபராதம் விதிக்க ஐ.பி.எல். நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதனிடையே விராட் கோலியுடன் வார்த்தை மோதலில் ஈடுபட்ட லக்னோ வீரர் நவீன உல் ஹக்கிற்கும் 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஐ.பி.எல். தொடரில் நேற்றைய 43 ஆவது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களூரு 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 126 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. லக்னோ தரப்பில் அந்த அணியின் நவீன் உல் ஹக் 3 விக்கெட்டுகளை அதிகப்படியாகக் கைப்பற்றினார். 127 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய லக்னோ…

Read More

நீர்கொழும்பில் இருந்து ஹங்வெல்ல நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று கம்பஹா வத்துருகம  எனுமிடத்தில் இன்று (02) காலை விபத்துக்குள்ளானது. விபத்து இடம்பெற்றபோது 70 பயணிகள் ​​பேருந்தில் பயணித்துள்ளனர். காயமடைந்தவர்கள் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிகவேகம் காரணமாகவே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read More

லிட்ரோ சமையல் எரிவாயு சிலின்டரின் விலையை நாளை (03) நள்ளிரவு முதல் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்தள்ளது. 12.5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை சுமார் ரூ. 100, மற்ற சிறிய சிலிண்டர்களின் விலைகள் விகிதாசாரப்படி குறைக்கப்படும் என குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

Read More

களுத்துறை திஸ்ஸ தேசிய பாடசாலைக்கும் களுத்துறை தேசிய பாடசாலைக்கும் இடையேயான ஒரு நாள் கிரிக்கட் போட்டியின் போது கிரிக்கட் மட்டையினால் தாக்கப்பட்ட திஸ்ஸ தேசிய பாடசாலையின் உப தலைவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மக்கோன பொலிஸார் குறிப்பிடுகின்றனர். மக்கோன பகுதியில் இடம்பெற்ற இந்த கிரிக்கட் போட்டியில் திஸ்ஸ தேசிய பாடசாலை அணி முதலில் துடுப்பாடியதுடன் பதிலளித்தாடிய களுத்துறை தேசிய பாடசாலை அணி இறுதி ஓவரில் வெற்றியிலக்கை கடந்து வெற்றியை பதிவு செய்தது. பின்னர் மைதானத்தின் நடுவே பொருத்தப்பட்டிருந்த விக்கட்டுக்களை மாணவர்கள் அப்புறப்படுத்தியதால் மோதல் ஏற்பட்டது. இதன்போது, திஸ்ஸ தேசிய பாடசாலையின் உப தலைவரை சிலர் கிரிக்கெட் மட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. சம்பவத்தில் பாதிப்படைந்த அவர், நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Read More

மலையக கல்வி அபிவிருத்தி மன்றத்தின் புத்தாண்டு விளையாட்டு நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக செட்டியார் தெருவில் மிகவும் சிறப்பாக 01.05.2023 அன்று இடம்பெற்றுது. மலையக கல்வி அபிவிருத்தி மன்றத்தின் நிருவாக குழு உட்பட அங்கத்தவர்கள் சிறப்பான ஒழுங்கமைப்போடு வெற்றிகரமான நிகழ்ச்சியை நடத்தி முடித்திருந்தார்கள். இந்த விளையாட்டு போட்டிக்கு இலங்கையின் சர்வதேச விளையாட்டு வீராங்கனியான ஸ்ரீயாணி குலவன்ச கலந்து சிறப்பித்தார். காலை 8 மணிக்கு ஆரம்பமான மரதன் ஓட்டப்போட்டியில் பண்டாரவளை நாயபெத்த தோட்டத்தை சேர்ந்த எம் .கோபிநாத் முதலாமிடத்தை பெற்றுக்கொண்டார். மேலும் மரதன் ஓட்டப்போட்டியை தொடர்ந்து பாரம்பரிய விளையாட்டு அம்சங்கள் மாலை நான்கு மணி வரை இடம்பெற்றன. குறிப்பாக சிறுவர்கள் ஆர்வமாக கலந்துகொண்ட யானைக்கு கண்வைத்தல் ,கராம் போட்டி ,பலூன் உடைத்தல் என்பன சுவாரசியமான போட்டிகளாக அமைந்தன. இறுதியாக போட்டியில் பங்குபற்றி வெற்றிபெற்றவர்களுக்கும் அனுசரணை வழங்கியவர்களுக்கும் பெறுமதிமிக்க பரிசுகள் வழங்கி வைக்கப்பட்டன. லோகேஷ்

Read More