Author: Thana

சூடான் குடியரசில் இருந்து வெளியேற்றப்பட்ட 06 இலங்கையர்களின் 2வது தொகுதி ஜித்தா கிங் பைசல் கடற்படைத் தளத்தை வந்தடைந்தது. ஜெட்டாவில் உள்ள இலங்கையின் பதில் தூதரகம் இதனை உறுதி செய்துள்ளது.

Read More

மே மாத இறுதிக்குள் கல்லூரிகளுக்கு புதிய மாணவர் குழுக்கள் இணைத்துக் கொள்ளப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த நேற்று (28) நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில் தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். மாணவர்களுக்கு ரூ. 5000 உதவித்தொகை மற்றும் வங்கிகள் மூலம் பணம் செலுத்தும் அடிப்படையில் ரூ. 15,000 கடன் தொகையும் வழங்கப்படுகிறது.

Read More

கிரிக்கெட் வரலாற்றில் 500 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்ற மூன்றாவது அணி என்ற பெருமையை பாகிஸ்தான் பெற்றுள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இந்த பெருமையை பெற்றுள்ளது. அவுஸ்திரேலிய மற்றும் இந்திய அணிகளுக்கு பின்னர் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 500 வெற்றிகளை பதிவுசெய்த மூன்றாவது அணியாக தற்சமயம் பாகிஸ்தான் உள்ளது. தனது 949 ஆவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் இந்த மைல்கல்லை எட்டியுள்ளது. குறித்த தரவரிசையில் அவுஸ்திரேலியா 594 வெற்றிகளுடன் முதலிடத்திலும், இந்தியா 539 வெற்றிகளுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளன. 1973 பெப்ரவரியில் பாகிஸ்தான் ஒருநாள் போட்டியில் அறிமுகமானாலும், 1974 ஆம் ஆண்டில் நாட்டிங்ஹாமில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் முதல் ஒருநாள் வெற்றியை பதிவுசெய்தமையும் குறிப்பிடத்தக்கது.

Read More

சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி தொடர்பிலான திட்டத்தை நடைமுறைப்படுத்தும் யோசனை பாராளுமன்றத்தில் 95 மேலதிக வாக்குகளினால் நேற்று நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆதரவாக 120 வாக்குகளும் எதிராக 25 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதற்கமைய, சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட கடனுதவி தொடர்பான யோசனை 95 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வாக்கெடுப்பின் போது, சபையில் 79 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கவில்லை. ஐக்கிய மக்கள் சக்தி, வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை என்பதுடன், அது தொடர்பில் குறித்த கட்சி ஆறு விடயங்களை முன்வைத்திருந்தது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் சபையில் பிரசன்னமாகியிருக்கவில்லை. ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களும் வாக்கெடுப்பின் போது சபையில் இருக்கவில்லை. ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் A.H.M. பெளஸி, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் துமிந்த திசாநாயக்க, அரசாங்கத்தில் இருந்து எதிர்க்கட்சி தரப்பில் அமர்ந்த ஜோன் செனவிரத்ன, அனுர பிரியதர்ஷன யாப்பா, பிரியங்கர ஜயரத்ன, சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே, நிமல் லன்ஸா, A.L.M.…

Read More

முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலையை நீக்குவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. முட்டை உற்பத்தியாளர்கள், கோழிப்பண்ணையாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இடையில் பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கோழி மற்றும் முட்டைத் தொழிலில் தற்போது ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை தொடர்பில் இதன்போது கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முட்டைக்கு வழங்கப்படும் அதிகபட்ச சில்லறை விலையை நீக்க நடவடிக்கை எடுத்தால் 15 நாட்களுக்குள் சந்தையில் முட்டை தட்டுப்பாட்டை நிவர்த்திக்க முடியும் என தொழில்துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர். இதேவேளை, அதிகபட்ச சில்லறை விலையை நீக்குவது தொடர்பான யோசனையை அமைச்சரவையில் சமர்பிப்பது குறித்து அமைச்சர் மஹிந்த அமரவீர கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Read More

உக்ரைனிய நகரங்கள் மீது ரஷ்ய ஏவுகணைத் தாக்குதல்களில் குறைந்தது 25 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஓலெஸ்கி ரெஸ்னிகோவ் வெள்ளிக்கிழமை ஒரு ஒன்லைன் செய்தி மாநாட்டில் தெரிவித்தார். 2014 ஆம் ஆண்டு முதல் ரஷ்ய ஆதரவாளர்களால் கட்டுப்படுத்தப்படும் கிழக்கு நகரமான டொனெட்ஸ்கில், ஒரு மினிபஸ் மீது உக்ரைனிய ஷெல் தாக்குதலால் ஒரு குழந்தை உட்பட ஏழு பேர் கொல்லப்பட்டதாக பிராந்திய அதிகாரி ஒருவர் கூறினார். ரஷ்யா வீசிய 23 குரூஸ் ஏவுகணைகளில் 21ஐ சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. மாஸ்கோ பொதுமக்களை வேண்டுமென்றே குறிவைக்கவில்லை என்று கூறியுள்ளது. போர்க்குற்றம், பொதுமக்களை அச்சுறுத்துவது மற்றும் காயப்படுத்துவது தவிர, முன் வரிசையில் இருந்து வெகு தொலைவில் உள்ள நகரங்கள் மீதான தாக்குதல்கள் இராணுவ நோக்கத்தை கொண்டிருக்கவில்லை என்று உக்ரைன் கூறுகிறது.

Read More

(க.கிஷாந்தன்) அட்டன் ஊடாக மகாவலி ஆற்றுக்கு நீரேந்தும் அட்டன்ஓயாவை அண்மித்த காட்டுப்பகுதியில்  அனுமதியின்றி சட்டவிரோதமாக மாணிக்கக்கற்களை தோண்டி சுற்றாடலை மாசுப்படுத்திய சந்தேகத்தின் பேரில் 06 (26.04.2023) சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அட்டன் பொலிஸ் அத்தியட்சகர் எச்.எம்.என்.தெஹிகமவின் ஆலோசனையின் பேரில், அட்டன் ஸ்டெதன் தோட்டத்திற்கு அருகாமையில் அட்டன்ஓயா அண்மித்த காட்டுப்பகுதியில் மாணிக்கக்கற்களை தோண்டிய சந்தேக நபர்களை சுற்றிவளைத்ததுடன், அவர்கள் பயன்படுத்திய உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியதாக தலைமை பொலிஸ் பரிசோதகர் தெரிவித்தார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அதே தோட்டத்தில் வசிப்பவர்கள் எனவும், சந்தேகநபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டு அவர்களுக்கு எதிராக அட்டன் நீதவான் நீதிமன்றத்தின் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Read More

வடமாகாணம்- முல்லைத்தீவு மாவட்டம், முல்லைத்தீவு, முறிகண்டி அருள்மிகு விநாயகப் பெருமான் திருக்கோயில் முறிகண்டி தனிலிருந்து வழிகாட்டும் பெருமானே வழித் துணையாயிருந் தெம்மை வாழவைக்க வாருமைய்யா என்றும் உடனிருந்து எமைக் காக்க வேண்டும் முறிகண்டி கோயில் கொண்ட விநாயகப் பெருமானே கானகத்தே தனித்திருந்து வழிகாட்டும் பெருமானே வாழவழி காட்டி யெம்மை வாழவைக்க வாருமைய்யா என்றும் ஆதரித்து எமைக் காக்க வேண்டும் முறிகண்டி கோயில் கொண்ட விநாயகப் பெருமானே நம்பித் தொழும் அடியவர்க்கு நலமளிக்கும் பெருமானே நிம்மதியைத் தந்தெம்மை வாழவைக்க வாருமைய்யா என்றும் அரவணைத்து எமைக் காக்க வேண்டும் முறிகண்டி கோயில் கொண்ட விநாயகப் பெருமானே அச்சம் தடுத் தெம்மை ஆட்கொள்ளும் பெருமானே ஆதரவு தந்தெம்மை வாழவைக்க வாருமைய்யா என்றும் ஆசிதந்து எமைக் காக்க வேண்டும் முறிகண்டி கோயில் கொண்ட விநாயகப் பெருமானே செய்கருமம் வெற்றி பெற துணையிருக்கும் பெருமானே சீர் பெற்ற வாழ்வு தந்தெம்மை வாழவைக்க வாருமைய்யா என்றும் நிலை குலையா உறுதி…

Read More

இரத்தினபுரி உதவும் கரங்கள் அமைப்பின் மற்றுமொரு மக்கள் சேவை இன்றைய தினம் நுவரெலியா மாவட்டம், தலவாக்கலை, லிந்துலை மவுசாஎல்ல கீழ்ப்பிரிவில்  இடம்பெற்றது. அமைப்பில் பயணிக்கும் சிரேஷ்ட அங்கத்தவராகிய திருமதி. செல்வராஜ் புஷ்பம் அவர்களின் அன்புத்தாயார் அமரர். திருமதி. செல்வராஜ் ஆராய் அவர்களின் 7வது சிரார்த்த தினத்தை (26/04/2023) முன்னிட்டு, அமைப்பின் தலைவர் ரமேஸ்வரனின் வழிநடத்தலின் கீழ், தலவாக்கலை, லிந்துலை மவுசாஎல்ல கீழ்ப்பிரிவில் வசிக்கும் விஷேட தேவையுடைய ஒரு குடும்பத்திற்கான உலர் உணவுப்பொருட்கள் மற்றும் உதவுத்தொகை என்பன( 28/04/2023) இன்று வழங்கி வைக்கப்பட்டது.

Read More

அனுராபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர், கூரிய ஆயுதத்தினால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மன்னார் பிரதேசத்தை சேர்ந்த 24 வயதான இளைஞனே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். தனிப்பட்ட பிரச்சினை காரணமாக தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்த இந்த இளைஞன் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இந்த கொலைச் சம்பவம் நடந்துள்ளது. இன்று அதிகாலை இளைஞன் சிகிச்சை பெற்று வந்த விடுதிக்குள் வந்த ஒருவர் இளைஞனை கூரிய ஆயுதத்தினால் குத்தி கொலை செய்துள்ளதாக வைத்தியசாலை பொலிஸார் கூறியுள்ளனர். சம்பவம் குறித்து அனுராதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Read More