Author: Thana

இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், அம்மக்கள் இலங்கையின் அபிவிருத்தி மற்றும் இதர விடயங்களுக்கு வழங்கிய பங்களிப்பை கௌரவித்து, அவர்களை பாராட்டுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளது. இதற்காக ‘மலையகம் – 200’ எனும் தொனிப்பொருளின் கீழ் பல நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. இதன் ஓர் அங்கமாக விசேட முத்திரையொன்றை வெளியிடுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அந்த முத்திரை எவ்வாறு வடிவமைக்கப்பட வேண்டும், அதில் உள்ளடக்க வேண்டிய விடயங்கள் எவை என்பன குறித்து மக்களிடமிருந்தும் கருத்துகள் மற்றும் யோசனைகள் கோரப்பட்டுள்ளன. மலையக கலை, கலாச்சார பண்பாட்டு மற்றும் பாரம்பரிய விழுமியங்களை பிரதிபலிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடதக்கது. எனவே, உங்களிடமும் ஏதேனும் யோசனை அல்லது மாதிரியை (முத்திரை எவ்வாறு இருக்க வேண்டும் என வரைதல்) தயாரிக்ககூடியதாக இருந்தால் அவற்றை உரிய வகையில் மே மாதம் 10ம் திகதிக்குள் கீழ்வரும் முகவரிக்கு ‘பதிவு’ தபாலில் அனுப்பி வைக்கவும்.…

Read More

(க.கிஷாந்தன்) அட்டன் பகுதியில் அனுமதிப்பத்திரத்தின் நிபந்தனைகளை மீறி  மணல் கொண்டு சென்ற லொறியுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அட்டன் பொலிஸாரினால் இவர் 26.04.2023 அன்று மாலை அட்டன் கொழும்பு  பிரதான வீதியில் அட்டன் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த மணலை அனுமதி பத்திரத்தின் நிபந்தனைகளை மீறி (அனுமதிப்பத்திரத்தில் திகதி தெளிவாக குறிப்பிடவில்லை) கித்துல்கல பகுதியிலிருந்து நோர்வூட் பகுதிக்கு கொண்டு செல்லும் போது அட்டன் பொலிஸாரினால் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது. அதன்பின் கைப்பற்றப்பட்ட  மணலையும், வாகனத்தையும், சந்தேக நபரையும் அட்டன் பொலிஸ் நிலையத்தில் அட்டன் பொலிஸார் ஒப்படைத்துள்ளனர். சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபரை பொலிஸ் பிணையில் விடுதலை செய்துள்ளதுடன், அவரை அட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்திருப்பதாக பொலிஸார்  தெரிவித்தனர்.

Read More

திருமண, பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்கும் நடமாடும் சேவை நாளை 28ஆம் திகதி வெள்ளிக்கிழமை தலவாக்கலை உப பிரதேச செயலகத்தில் இடம்பெறவுள்ளது. இந்நடமாடும் சேவையின் ஊடாக பிறப்பு பதிவு செய்யப்படாதவர்களின் பிறப்பு பதிவு செய்யப்பட்டு அன்றைய தினம் பிறப்புச் சான்றிதழ் அல்லது அனுமான சான்றிதழ் வழங்கப்படும். மேற்குறிப்பிட்ட சான்றிதழ்களை பெறவிரும்புவோர் அன்றைய தினம் கலந்துகொள்ளுமாறு நுவரெலியா பிரதேச செயலக அலுவலகத்தின் மேலதிக மாவட்ட பதிவாளரினால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Read More

கல்பிட்டி இருந்து மன்னார் நோக்கி பயணித்த அரசுக்கு சொந்தமான பேருந்து ஒன்றுடன் புத்தளத்திலிருந்து கல்பிட்டிக்கு சென்று கொண்டிருந்த லொரி வேக கட்டுப்பாட்டை இழந்து பஸ் உடன் நேருக்கு நேர் மோதியதில் லொரியின் சாரதி பலியாகியுள்ளார். குறித்த விபத்து சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. மேலும் பஸ்ஸில் பயணித்த பயணிகள் காயங்களுடன் கல்பிட்டி ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை பேருந்து சாரதியும் படுகாயங்களுடன் கல்பிட்டி ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. லொரியில் பயணித்து மற்றும் ஒரு நபர் தீவிர சிகிச்சைக்காக குருனாகலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்பிட்டி போலீசார் மேற்கொண்டு வருகின்றனர் யூகேஷ்

Read More

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணாயக்காரவுக்கும் கொரிய மனித வள திணைக்களத்தின் பிரதானிகளுக்கிடையில் (26) இடம்பெற்ற சந்திப்பின் போது அந்த திணைக்களத்தின் பிரதானி இலங்கையர்களுக்கான தொழில் வாய்ப்புக்கான எண்ணிக்கையை எட்டாயிரமாக அதிகரிக்க உடன்பாடு தெரிவித்துள்ளரர். கொரிய மொழி ஆற்றலைக்கொண்டு அதாவது தற்போது இணைய தளத்தின் மூலம் தொழில்வாய்ப்பை எதிர்பார்த்துள்ள தயாரிப்பு பிரிவில் 600 பேரை ,கப்பல் கட்டுமானத் தொழில் துறையில் ஈடுபடுத்துவதற்கு இதன்போது உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக தயாரிப்புத் துறைகளில் தொழில் வாய்ப்பு எதிர்பார்ப்பில் இணையத்தளத்தில் பதிவை மேற்கொண்டுள்ளவர்கள் எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்கு முன்னதாக கப்பல் கட்டுமானத் தொழில் துறையில் தொழிலுக்காக மாற்றிக்கொள்ள முடியும். குறிப்பிட்ட இணையத்தள பதிவு டிசம்பர் மாதத்துடன் காலாவதியாகிவிடும் என்பதினால் , இதற்கு முன்னர் கப்பல் கட்டுமானத் தொழில் துறையில் வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொள்வதற்காக விண்ணப்பிக்க வேண்டும். அடுத்தவருடம் முதல் E9 விசா பிரிவில் கப்பல் கட்டுமானத் தொழில் துறையில் தொழிலாளர்களுக்கு பரீட்சை நடத்தப்பட்டு வெல்டர்ஸ்…

Read More

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது. 2023 ஏப்ரல் 27ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு. 2023 ஏப்ரல் 27ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு மாகாணத்திலும் தென்மாகாணத்தின் கரையோரப்பிரதேசங்களிலும் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Read More

கச்சதீவில் அமைக்கப்பட்ட புத்தர் சிலை அகற்றப்பட்டுவிட்டதாக ஆயர் இல்லம் அறிவித்துள்ளது. சிலை அகற்றப்பட்ட விடயத்தை கடற்படையின் உயர் அதிகாரிகள் ஆயர் இல்லத்துக்கு அறிவித்துள்ளார்கள். அங்கு அமைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை அகற்றப்பட்டு கச்சதீவுக்கு வெளியே  கொண்டுசெல்லப்பட்டுவிட்டதாக  தெரிவித்துள்ளார்கள். இவ்விடயத்தை அமைதியான முறையில் தீர்த்துவைக்க ஒத்துழைத்த கடற்படை உயர் அதிகாரிகளுக்கும் மற்றும் கச்சதீவின் பாரம்பரியமும் தனித்துவமும் பேணப்பட குரல் கொடுத்த அனைவருக்கும் எமது நன்றிகளைத் தெரிவிக்கின்றோம் என ஆயர் இல்லம் அறிவித்துள்ளது. அத்துடன் , அது தொடர்பில் யாழ்.மாவட்ட செயலருக்கு கடிதம் மூலம் ஆயர் இல்லம் சார்பில் யாழ்ப்பாண மறை மாவட்ட குரு முதல்வர் ஜெபரட்ணம் நன்றி தெரிவித்துள்ளார்.

Read More

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் சில சரத்துகள் அடிப்படை உரிமையை மீறும் வகையில் அமைந்துள்ளதாக, அதனை ஆய்வு செய்வதற்கு நியமிக்கப்பட்ட குழு, அவதானித்துள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 22ஆம் திகதியன்று வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை மறுஆய்வு செய்ய சிரேஸ்ட சட்ட வல்லுநர்கள் அடங்கிய குழுவை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அமைத்தது. இந்தக்குழுவின் அவதானிப்பின்படி, உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் 85 மற்றும் 86ம் பிரிவின் குற்றவியல் அம்சங்கள், நீதி அமைப்பின் கொள்கைகளை மீறுவதாக அமைந்துள்ளது என அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது. இது, குடிமக்களின் சட்ட உரிமைகளுக்கு முரணானவையாக கருதப்படுகின்றது. குறித்த சரத்துகள் கருத்துச் சுதந்திரம், ஒன்றுகூடுவற்கான சுதந்திரம் பயணங்களை மேற்கொள்வதற்கான சுதந்திரம் உள்ளிட்ட உரிமைகளை மீறும் வகையில் அமைந்துள்ளதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன் சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாடுகள், இலங்கையின் அரசியலமைப்பின் மூன்றாம் அத்தியாயத்தின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறுவதாகவும் சங்கம் குறிப்பிட்டுள்ளது.…

Read More

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் கட்டணங்களை திருத்தியமைத்து புதிய வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, இரண்டு அச்சுகள் மற்றும் நான்கு சக்கரங்களைக் கொண்ட வாகனங்கள் அல்லது இரண்டு அச்சுகள் மற்றும் 06 சக்கரங்களைக் கொண்ட இரட்டைப் பயன்பாட்டு வாகனங்களுக்கு செலுத்த வேண்டிய கட்டணம் 50 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Read More

சூடானில் தங்கியுள்ள இலங்கையர்களுக்கு போர்ட் சூடானில் உள்ள சவூதி அரேபிய அரச செயற்பாட்டு மையத்திற்கு தகவல் தெரிவிக்குமாறு வெளிவிவகார அமைச்சு அறிவித்தல் விடுத்துள்ளது. வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி தனது ட்விட்டர் கணக்கில் ஒரு குறிப்பை வைத்து, சவூதி அரேபிய அரசாங்கம் போர்ட் சூடான் நகரில் உள்ள சிறப்பு பாதுகாப்பான ஹோட்டலில் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது. சூடானில் தங்கியுள்ள இலங்கையர்கள் அந்த இடத்திற்கு வந்து சூடானில் இருந்து வெளியேறுவதற்கு சந்தர்ப்பம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் கூறுகிறார். இதேவேளை, சூடானில் தங்கியிருந்த 13 இலங்கையர்களை அங்கிருந்து வெளியேற்ற முடிந்ததாக வெளிவிவகார அமைச்சு நேற்று (26) தெரிவித்துள்ளது. அங்கு தங்கியுள்ள அனைத்து இலங்கையர்களையும் பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் திட்டமிடப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Read More